அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (01.11.2022) முக்கிய செய்திகள்.
🔴 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
திருவாரூர் மற்றும் நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
* வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 116 ரூபாய் குறைந்து, இன்று முதல் 1,893 ரூபாய்க்கு விற்பனை.
வீட்டு உபயோக சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
* உள்ளாட்சி தினம்: தமிழ்நாடு முழுக்க இன்று கிராம மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக இன்று மாநகர சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.
* இயல்பு நிலைக்கு திரும்பிய இன்ஸ்டாகிராம்
முன்னனி சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் நேற்று உலகம் முழுவதும் 8 மணி நேரம் முடங்கியது.
பயனர்கள் பலரும் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், மேலும் பலர் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் புகாரளித்தனர்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இன்ஸ்டாகிராம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
* சென்னை மக்கள் கவனத்திற்கு!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு உதவி எண் அறிவிப்பு
📞1913
📞044-25619206
📞044-25619207
📞044- 25619208
மற்றும் நம்ம சென்னை செயலி அல்லது ட்விட்டர் மூலம் புகார் அளிக்கலாம்!
🔴 சென்னையில் வெளுத்து வாங்கும் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது மழை பெய்த நிலையில், இன்று, காலை முதல் தற்போது வரை மழை கொட்டி தீர்க்கிறது.
🔴🔴 பருவ மழை கவனம்… எச்சரிக்கை…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் தற்போது வரை இடைவிடாது மழையும் பெய்து வருகிறது. சென்னை பெருநகரில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் பணிகள் முடிவுற்றிருந்தாலும் சில இடங்களில் இன்னும் பணிகள் முடிவடையவில்லை. முடிவடைந்த இடங்களிலும், வடிகால் பணிக்காக பள்ளம் தோன்டியதில் மண்ணை கொட்டி நிரப்பி விட்டு பணியாளர்கள் சென்று இருக்கின்றனர். அப்பகுதியில் சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. மேடு பள்ளங்கள் காணப்படுகின்றன. மழை பெய்யும்போது மண் கொட்டப்பட்ட இடத்தில் தண்ணீர் இறங்கினால் புதிய பள்ளங்கள் ஏற்படும். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்லுமாறு செய்திக்கதிர் கேட்டுக் கொள்கிறது.
இதை தவிர தொடர் கன மழையால் ஆங்காங்கே சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே வெளியே செல்லும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
– அக்னிப்புரட்சி செய்திகள்
TELEGRAM: t.me/Agnipuratchi1
* பழவேற்காடில் கடல் சீற்றம் அதிகரிப்பு
வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், இரு தினங்களாக பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல், பழவேற்காட்டில் கடல் சீற்றம் அதிகமாகி உள்ளது, ஐந்து அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி விழுகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர்.
* சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை அமைந்திருக்கும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீரை வெளியேற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.
* சென்னை புதுப்பேட்டையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்!
வடிகால் வழியாக தண்ணீர் வெளியேறினாலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்பு!
* குஜராத் மாநிலம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி, மாநிலம் தழுவிய துக்கம் அனுசரிப்பு
நேற்று முன்தினம் பாலம் அறுந்த விபத்தில் உயிரிழந்தோருக்காக துக்கம் அனுசரிப்பு – குஜராத் முதலமைச்சர் புபேந்திர படேல் அறிவிப்பு.
அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்; விழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நவ.2ம் தேதி நடைபெறாது – முதல்வர் புபேந்திர படேல்
* பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அனைத்துத் துறைச் செயலாளர்கள் பங்கேற்பு.
* சென்னையில் கடந்த 72 ஆண்டுகளில் நவம்பர் 1 தேதி சென்னை ( நுங்கம்பாக்கம்) கனமழை பதிவாவது (80 .4 மி மீ ) இன்று மூன்றாவது முறை – வானிலை ஆய்வு மையம்
* அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்.
அடுத்த 3 நாட்களில் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்.
* மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே மீட்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
மக்களை காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்;
அதிகாரிகளிடம் தெரிவித்தோம், உடனடியாக நிவர்த்தி செய்தார்கள் என மக்கள் கூறுவதே மிகப் பெரிய பாராட்டு.
உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை,தீயணைப்பு துறைகள் என அனைவரும் தனித்தனியே செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.
மின்சாரம், பால், குடிநீர் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;
மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* சென்னையில் கனமழையால் இருவர் உயிரிழப்பு
புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
வியாசர்பாடியில் ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
* தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக திரு.நாகராஜ முருகன் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.
* சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 150 க்கும் மேற்பட்ட இடங்களில், அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
* அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15 முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“ராணுவத்தில் கீழ்காணும் பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் நவம்பர் 15 முதல் 29 வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.
i. அக்னி வீரர் (ஆண்).
ii. அக்னி வீரர் (பெண் ராணுவ காவலர்).
iii. சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் / கால்நடை செவிலியர் உதவியாளர்.
iv. இளநிலை சேவை அதிகாரி
தமிழகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றிய அறிவிக்கையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் (குறிப்பாக உறுதிமொழி பத்திரம்) எடுத்து வரும் விண்ணப்பதாரர், முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.
* குஜராத்தில் பாலம் விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு!
சூரத்: குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடம் மற்றும் மீட்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் இணைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
* திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது ஆடை தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன.
இதில், நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது. இதனால் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ரூ.40 குறைந்த நிலையில் நடப்பு மாதத்திலும் ரூ. 20 குறைந்துள்ளது தொழில் துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம் நம்பர் ரூ. 275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு அரசு வடிகால் பணி முடியாமல் இருக்கும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”
“மாநிலம் முழுவதும் மழையினால் பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்”
– ஜி.கே.வாசன்,தமாகா தலைவர்
* சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது.
திமுக நிர்வாகியின் ஆபாச பேச்சை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
கைது செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுதலை செய்யப்பட்டார்.
* மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது.
புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் விருது வழங்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். விருதை வழங்கினர்.
* தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு
தமிழ்நாட்டில் அக்டோபர் 10 முதல் 14ம் தேதி வரை தனி தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் நாளை (நவம்பர் 2) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
* உலக பணக்காரர்கள் பட்டியல்; மீண்டும் முன்னேறிய அதானி
இந்திய தொழில் அதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த மாதம் 2வது இடத்துக்கு முன்னேறினார். அதன்பின்னர் அவர் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில், உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் அதானி 3வது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளது. அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்ததால் அவர் முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது.
* மயிலாடுதுறை: ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை
அதை ஈடு செய்யும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் – மாவட்ட ஆட்சியர்
* அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதுவே தொடர்ந்து இருக்கட்டும்
இந்தி பேசும் மாநிலங்கள் என்றால் நீங்கள் அலுவல் மொழியாக இந்தியை வைத்து கொள்ளுங்கள்”
ஆனால் எங்கள் நிலத்தில் தமிழ்தான் அலுவல் மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் – சீமான், நாதக ஒருங்கிணைப்பாளர்
* 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு பணிகள் – பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.119.27 கோடி மானியத்தை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்திருக்கிறது
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது
– பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், பாமக தலைவர்
* குழந்தை திருமணம் தொடர்பான புகாரில் சிதம்பரம் தீட்சிதர்கள் 52 பேரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற 2 வாரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
