Home » அக்னிப்புரட்சி இன்றைய (01.12.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (01.12.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (01.12.2022) முக்கிய செய்திகள்.

* கால்பந்து உலகக் கோப்பை குரூப் C: சவுதி அரேபியாவை 1-2 கோல் கணக்கில் வீழ்த்தியும், ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கான வாய்ப்பை இழந்த மெக்சிகோ.

கோல்களை விட்டுக்கொடுத்ததில், போலந்தை விட ஒரு கோல் அதிகமாக வாங்கியிருந்ததால் மெக்சிகோ பின்தங்கியது.

குரூப் C: போலந்து அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது அர்ஜெண்டினா அணி.

தோல்வியை சந்தித்த போலந்து அணியும்,  அடுத்த சுற்றுக்கு முன்னேறியதால் சுவாரஸ்யம்.

* சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
– சென்னை வானிலை ஆய்வு மையம்

* அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். இராமச்சந்திரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

* குஜராத்: 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தல் மூலம் கால் நூற்றாண்டாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. மும்முரம் காட்டி வருகிறது.

குஜராத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது.

இவ்விரு கட்சிகளுக்கும் இடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று துவங்கியது.

இந்த தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 3,311 நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 கிராமப்புறங்களிலும் உள்ளன.

89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இடைவெளியின்றி 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

* கடலூர்: வேப்பூர் அருகே உள்ள மலையனூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்பு.

கொலையா? தற்கொலையா? என உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

* டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிர்வாக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை:

டாஸ்மாக் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தினால் நடவடிக்கை பாயும்.

ஆய்வின்போது கடையில் இல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – நிர்வாக மேலாண் இயக்குநர்.

* ‘ட்ரூ காலர்’ – கருத்து கேட்கும் டிராய்!

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனில் அழைப்பவரின் பெயரைத் திரையில் பார்க்கும் திட்டம் தொடர்பாக டிராய் அனைத்து வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துகளை கேட்டுள்ளது.

இந்த முன்மொழிவை கட்டாயமாக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என மக்களிடம் டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், போனில் எண் சேமிக்கப்படாவிட்டாலும், அழைப்பை மேற்கொள்ளும் நபரின் பெயர் பயனாளரின் செல்போனில் தெரியும்.

* WHO: தினமும் 12000 பேர் உயிரிழந்து வருகின்றனர்

உலகில் தற்போது விபத்துகள் நடப்பது சகஜமாகிவிட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, விபத்துகள், வன்முறை மற்றும் பிற காரணங்களால் ஒவ்வொரு நாளும் 12,000 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் 5 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த ‘காயம் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள்’ சர்வதேச மாநாட்டில் WHO இதை தெரிவித்துள்ளது.

* மருத்துவமனையில் பிரபல கால்பந்து வீரர் பீலே

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள், வீரர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

* மெஸ்ஸியின் சா(சோ)தனை

இன்று அதிகாலை நடைபெற்ற போலந்துக்கு எதிரான கால்பந்து உலகக்கோப்பை ஆட்டத்தில் மெஸ்ஸி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நழுவவிட்டார்.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் 2 முறை பெனால்டி வாய்ப்பை நழுவவிட்ட 2ஆவது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸிக்கும் பெனால்டிக்கும் ராசி இல்லை என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

* 2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது

38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

* ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடைக்காக நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்ட மசோதா தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்த உள்ளார்.

* பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா: டிசம்பர் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள்- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

டிச.18ஆம் தேதி சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

* தவறாக பிரச்சாரம் செய்யும் மோடி: அழகிரி

பிரதமர் மோடி தவறான பிரச்சாரங்களின் மூலம் தன்னை தூக்கி நிமிர்த்திக்கொள்கிறார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி விமர்சித்து உள்ளார்.

பேட்டி அளித்த அவர், நாட்டின் பொருளாதாரம் வளரவில்லை. விவசாயிகள் தங்களின் பொருளுக்கு உரிய விலை இல்லாமல் வேதனைபடுகிறார்கள்.

இதற்கு தவறான பொருளாதார கொள்கையே காரணம் என்று கூறினார். முன்னதாக இந்திய பொருளாதாரம் வளர்வதாக மோடி பேசிய நிலையில் அழகிரி இவ்வாறு கூறியுள்ளார்.

* கார்கே மட்டுமல்ல காங்கிரஸே இப்படித்தான்”

காங்கிரஸார் பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை ராவணன் என கார்கே விமர்சனம் செய்தது குறித்து பேசிய அவர், கார்கே பேசியது அவரது மனநிலையை மட்டும் காட்டவில்லை. ஒட்டுமொத்த காங்கிரஸுமே அப்படித்தான் என்று விமர்சனம் செய்தார். மோடி ஒரு தனிநபர் அல்ல, அவர் மீது தேவையற்ற அவதூறு பரப்பி வருவதாகவும் பேசியுள்ளார்.

* உலகக்கோப்பை கால்பந்து – சில முடிவுகள்

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

பிரிவு டி-யில் உள்ள டென்மார்க் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டென்மார்க் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

* பிரிவு டி-யில் உள்ள பிரான்ஸ் – துனிசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி துனிசியா அணி வெற்றி பெற்றது

* பிரிவு சி-யில் உள்ள சவூதி அரேபியா – மெக்சிகோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

* ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் வழங்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னை மணலியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டதற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* 90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 81,913 மெட்ரிக் டன் யூரியா, 33,629 மெட்ரிக் டன் டிஏபி உரங்கள் இருப்பில் உள்ளன – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

* ஜல்லிக்கட்டில் காளைகள் 15 மீ தூரம் மட்டும் எப்படி ஓட முடியும்?- உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்.

ஜல்லிக்கட்டுப் போட்டி விதிமுறைகள் குறித்து தமிழக அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

“ஜல்லிக்கட்டில் காளைகள் 15 மீட்டர் தூர இடைவெளியில் எப்படி ஓட முடியும்?”

“வீரர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் காளையை தொட அனுமதியுள்ளதா?”

“100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன? ”

“ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா?”

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிப்புக்குழு எவ்வாறு கண்காணிக்கிறது? – நீதிபதிகள்

* தனது படத்தை விளம்பரப்படுத்த தெரு தெருவாக சென்று போஸ்டர் ஒட்டிய நடிகை

தான் நடித்த படத்தை விளம்பரம் செய்ய தெருதெருவாக சென்று போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அந்த நடிகையின் பெயர் நீரஜா.

இவர் ரங்கூன் சின்னத்தம்பி இயக்கிய ‘மஞ்சக்குருவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தை மக்களிடம் விளம்பரம் செய்ய நீரஜா தெருவில் இறங்கினார். படத்தின் போஸ்டர்களை சுமந்து வீதிவீதியாக சென்று சுவர்களில் ஒட்டினார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

* திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அசோக் குமார் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்ய ₹1 லட்சம் லஞ்சம் வாங்கிய சார்-பதிவாளர் பாஸ்கரன் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை.

* ஜல்லிக்கட்டு வழக்கு – தமிழக அரசு விளக்கம்

ஜல்லிக்கட்டுப் போட்டி விதிமுறைகள் குறித்து நீதிபதிகள் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்

தகுதி பெறும் ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் ஒரு காளையை தொட முடியும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன.

காளைகளுக்கு முன் வீரர்கள் நிற்க அனுமதியில்லை – தமிழக அரசு

* தேர்தல் வேட்புமனுவில்  கல்வித்தகுதி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு

* பொங்கல் பரிசு தொகுப்பு – பதிலளிக்க உத்தரவு.

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* குற்றாலம் செயற்கை நீர்வீழ்ச்சி வழக்கு – நீதிமன்றம் உத்தரவு

குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் தனியார் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு

சுற்றுலாத்துறை இயக்குனர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – தமிழக அரசு

முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

* இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் தொடங்கியது.

இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி.

டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய 4 பெரு நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஒட்டம் துவங்கியது.

ரூ, 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சியை புழக்கத்தில் விட்டு சோதனை.

டிஜிட்டல் ரூபாய்க்கு e₹-R என்ற குறியீட்டை டிஜிட்டல் முறையில் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

டிஜிட்டல் சோதனை ஓட்டத்தில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கிகள் பங்கேற்றுள்ளன.

* ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநர் கூறியது என்ன?

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (1ம் தேதி) ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்தோம். அவர் சில சந்தேகங்களைக் கேட்க அதற்கு பதிலளித்தோம். இந்த மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கவர்னர் உறுதி அளித்தார்” என்றார்.

* இந்தியாவில் கொடிய வெப்ப அலை – உலக வங்கி அதிர்ச்சி தகவல்

காலநிலை மாற்றத்தால் உலகளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், 2030ம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைகளுக்கு ஆளாகிற அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; மழை வருமா?

கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், ’தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

* சீன அரசை விமர்சித்த அலிபாபா நிறுவனர் ஜாக்மா ஜப்பானில் தஞ்சம்?

சீனாவின் ஆன்லைன் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா. இவரது நிறுவனத்தின் மீது சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஜாக் மா சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பின் ஜாக் மா திடீரென மாயமானார். இந்நிலையில் அவர் ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக தனது குடும்பத்துடன் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.77 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.01 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இன்று வரை மொத்தம் 41.52 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன.

error

Enjoy this blog? Please spread the word :)