அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (02.11.2022) முக்கிய செய்திகள்.
🔴 தொடர் கன மழை காரணமாக இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்:
பள்ளி, கல்லூரிகள்: சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர்.
பள்ளிகளுக்கு மட்டும் : வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம். விடுமுறை
* தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை மையம் வார்னிங்
இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை
🔴 டிவிட்டர் ‘ப்ளூ டிக்’கின் விலை மாதம் 8 டாலர் – எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு
ஒவ்வொரு நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப விலை மாறுபடும் எனவும் தகவல்
* ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு
ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக அழைப்பு
திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிகளுக்கு டி.ஆர்.பாலு கடிதம்
* டிஜிட்டல் ரூபாய்: முதல் நாளில் ரூ.275 கோடிக்கு வணிகம்!
இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே ரூ.275 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ம ரூபாயைப் பயன்படுத்தி எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிளும் பரிவர்த்தணைகளை மேற்கொண்டன.
எண்ம ரூபாய் வரவு வைக்கப்பட்டு அதன் மூலம் கடன் பத்திரங்களை வாங்க வங்கிகள் தொகையை செலுத்தின.
தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது.
* பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க அரசு முடிவு
புதுடில்லி : பாக்., ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் ஆகிய நம் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, குஜராத்தின் ஆனந்த், மெஷனா ஆகிய மாவட்டங்களுக்கு வந்து, ஏராளமானோர் இங்கு பல ஆண்டுகளாக அகதிகளாக தங்கியுள்ளனர்.
ஹிந்து, சீக்கியர், புத்த, ஜெயின், கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இவர்களுக்கு, இந்திய குடியுரிமை சட்டம், 19௫௫ன் கீழ் குடியுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த குடியுரிமை சட்டத்துக்கும், 2019ல் அறிவிக்கப்பட்ட, சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், 2019ல் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்னும் சட்ட வரைவாக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் கீழ் யாருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவும் இல்லை.
குஜாரத்தின் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, 1955ம் ஆண்டு சட்டத்தின் கீழ் தற்போது குடியுரிமை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எனவே, இந்த இரண்டு மாவட்டங்களிலும் வசிக்கும் மேற்கண்ட மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர், அதிகாரிகளிடம் தகுந்த சான்றிதழ்களை அளித்து, இந்திய குடியுரிமைக்காக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதையை போக்குவரத்து போலீசார் அடைத்துள்ளனர். அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம் சுரங்ப்பாதை வழியாக செல்ல தடை விதித்துள்ள போலீசார், மாற்றுப்பாதையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
* சிலை கடத்தல் – 6 பேருக்கு சிறை…
அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 சிலைகள் திருடப்பட்ட வழக்கு
சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை. – கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
* கிறிஸ்தவர்கள் கல்லறை திருநாள் இன்று அனுசரிப்பு- இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி(இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும்.
பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.
இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள்.
* அமைச்சர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்.
அமைச்சர்கள் சேகர்பாபு, கே என் நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ் குமார் ஆணையர் ககன் தீப் சிங் மற்றும் துணை ஆணையர்கள் பங்கேற்பு.
சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் வாரியம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.
* தஞ்சாவூரில் தொடங்கியது சதய விழா.
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,037 ஆவது சதய விழா மங்கல இசையுடன் தொடங்கியது.
சதய விழா இன்றும், நாளையும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
* மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
* கரூரில் சிவா டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் கேவி டெக்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவிலும் வருமானவரித்துறையினர் சோதனை.
* ஆவின் ‘டிலைட்’ என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்.
குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
500 மி.லி. பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.30க்கு விற்பனை.
எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிப்பு.
சென்னையில் ஆவின் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் பெறுவது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு மண்டல வாரியான பொறுப்பு அலுவலர்களின் தொடர்பு எண்கள் வாடிக்கையாளர் சேவை இலவச எண்: 18004253300
* சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உள்ளிட்டோரும் ஆய்வு.
மழை மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* ஹைதராபாத் : ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.
* கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் சென்னையை மட்டுமல்லாது தமிழகத்தையை அதிமுகவினர் சீரழித்துள்ளனர்.
அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் ஒன்றரை வருடங்களுக்குள்ளேயே முடித்துவிடுவோம் என நம்பிக்கையுள்ளது- முதலமைச்சர்.
சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
* நானே ராஜா, நானே மந்திரி போர்டு உறுப்பினர்கள் கூண்டோடு டிஸ்மிஸ்; டிவிட்டரில் மஸ்க் ரணகளம்..
நியூயார்க்: டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் தனது அடுத்த அதிரடியாக போர்டு உறுப்பினர்களை கூண்டோடு நீக்கி, அவர் மட்டுமே ஒற்றை தலைமையாக அறிவித்துள்ளார். பிரபல சமூக ஊடகமான டிவிட்டரை சமீபத்தில் வாங்கிய, உலகின் நம்பர்-1 பணக்காரரான எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார்.
டிவிட்டர் சிஇஓ.வாக இருந்த இந்திய வம்சாவளி பராக் அகர்வால் உள்ளிட்டவர்களின் வேலையை காலி செய்த மஸ்க், டிவிட்டரில் புளூடிக் கணக்கு வேண்டுமென்றால் மாதம் ரூ.1600 கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார். பல அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் அவர்களின் சரிபார்க்கப்பட்ட உண்மையான கணக்கு என்பதற்கு அங்கீகாரமாக ‘புளூடிக்’ வழங்கப்படுகிறது. இதற்கு மாத கட்டணம் செலுத்த வேண்டுமென்ற மஸ்க்கின் திட்டம், உலக முழுவதும் டிவிட்டர் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக டிவிட்டரின் ஒட்டுமொத்த போர்டு உறுப்பினர்களை கூண்டோடு நீக்கி விட்டு, அவர் மட்டுமே போர்டு உறுப்பினர் என பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திடம் நேற்று ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய போர்டு தற்காலிகமானது எனவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடியது போர்டு உறுப்பினர்களே. அப்படியிருக்கையில், மஸ்க் மட்டுமே போர்டு உறுப்பினராக இருப்பதால் அவர் இஷ்டத்திற்கு எந்த முடிவையும் எடுக்கலாம்.
ஏற்கனவே, டிவிட்டரில் மஸ்க்குக்கு பிறகு அதிகமான பங்குகளை (ரூ.15.5 ஆயிரம் கோடிக்கு) சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலாலின் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
அரசியல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய டிவிட்டர் போன்ற பிரபல சமூக ஊடகத்தில், அமெரிக்க அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சவுதி நிறுவனம் அதிக பங்குகளை கொண்டிருப்பது அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* ஒரு கனமழைக்கே சென்னை சாலைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் வடிகால் பணிகள் 40%கூட முடியவில்லை – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
* திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான்
– கர்நாடகாவில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை.
* அந்தமான் விமான நிலைய பராமரிப்பு பணிகளாலும், அங்கு நிலவும் மோசமான வானிலையாலும், சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 7 விமானங்கள், அங்கிருந்து வரும் 7 விமானங்கள் என 14 விமானங்கள் வரும் 4ம் தேதி வரை ரத்து
* செங்கல்பட்டு: பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் 9444272345, இலவச தொலைபேசி எண் 1077 , தொலைபேசி எண்கள் 044 27427412 – 27427414 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
10 ஆண்டுகள் இலங்கைக்கு வரக்கூடாது என ஊர்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனை
கடந்த 20ம் தேதி எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது
* 🏏 உலக கோப்பை சூப்பர்12 சுற்று
5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து
* டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் முதலிடம்.
சமீபத்திய போட்டிகளில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 863 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக முகமது ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
* நாகூர் தர்கா சந்தனக் கூடு கந்தூரி விழாவுக்கு தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கோரிக்கையை ஏற்று வனத்துறை சார்பில் 45 கிலோ சந்தனக்கட்டைகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
* ஆவடி பசுமை பூங்கா அமைந்துள்ள பருத்திப்பட்டு ஏரி நிரம்பியது
31 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரி முழுவதுமாக நிரம்பி, உபரி நீர் கால்வாய் மூலம் நீர் வெளியேறி வருகிறது.
* டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.
வங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடிவருகிறார்.
இன்று அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது, டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.
டி20 உலக கோப்பையில் 1016 ரன்களை குவித்த இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே தான் முதலிடத்தில் இருந்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது டி20 உலக கோப்பையில் 1017 ரன்களை எட்டி டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் (965 ரன்கள்) 3ம் இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா 921 ரன்களுடன் 4ம் இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா அவரது வழக்கமான அதிரடி இன்னிங்ஸ்கள் சில ஆடினால் விராட் கோலியை பின்னுக்குத்தள்ள வாய்ப்புள்ளது.
* கோவை: உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள சில குடியிருப்புகளில் NIA அதிகாரிகள் சோதனை
* வடகிழக்கு பருவமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழப்பு
எந்த இடங்களில் பிரச்சனை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி வைப்போம்; பருவ மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
– வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
* ஆர்.எஸ்.எஸ் பேரணி குறித்த வழக்கு – அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு என உயர் நீதிமன்றம் அறிவிப்பு.
கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை – ஆர்.எஸ்.எஸ்.
3 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டன. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அனுமதி வழங்க தயார்.
மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது. நவம்பர் 6 ல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது – காவல்துறை.
* மீண்டும் இஸ்ரேல் பிரதமராகிறார் நெதன்யாகு.
மீண்டும் இஸ்ரேல் பிரதமராகிறார், பெஞ்சமின் நெதன்யாகு.
85 சதவீதம் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் நெதன்யாகு தொடர்ந்து முன்னிலை.
பெரும்பான்மை பலத்துடன், மீண்டும் பிரதமராகிறார் நெதன்யாகு.
* ஆந்திராவில் டிராக்டர் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூரைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் டிராக்டரில் வேலைக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு பலியாகினர்.
பல்தூரு, பார்வதி, சங்கரம்மா, வண்ணம்மா, ரத்தினம்மா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
* வாடிக்கையாளர் சேவை மையம் எண் 1070
வடகிழக்கு பருவமழை கால கட்டங்களில் சாலையில் மரங்கள் சாய்தல், மண் சரிவுகளால், வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் சேதம் அடையும் நிலையில் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வாடிக்கையாளர் சேவை மையம் 1070 எண்ணை தொடர்பு கொள்ளலாம் நெடுஞ்சாலைதுறை அறிவிப்பு
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், சட்டமன்ற செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார் ஆளுநர்;
மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி, இந்தியா மதம் சார்ந்த நாடுதான் எனப் பேசுகிறார் ஆளுநர்” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
* முதலமைச்சர் ஸ்டாலினுடன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு:
திமுக பொருளாளர் டிஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோரும் சந்திப்பில் பங்கேற்பு
* இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமானது.
டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி த்ரில் வெற்றி.
* 2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு. வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் பொதுமக்கள்.
அரசை நம்பாமல் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வெண்டும். என அரசு கூறியுள்ளது.
மின்சார கம்பிகள், தேங்கிய மழைநீர் பள்ளங்களை கவனித்து செல்ல வேண்டும் இதில் இருந்தே தெரிகிறது அரசின் செயல்பாடுகள் – முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
* மம்தாவுடன் அரசியல் எதுவும் பேசவில்லை, இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை பற்றி கலந்துரையாடுவது வழக்கம்தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமானது-மம்தா பானர்ஜி.
* சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு:
சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களின் சொந்த நிதியில் பரமாரிக்கப்படுகிறதா ?
தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து சிதம்பரம் கோயிலில் தினசரி பூஜைகள் நடைபெறுகிறதா ?
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைகளின் வரவு செலவு கணக்குகள்; திருக்கோயில் நிலத்தின் உரிமை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட விவரங்களை வரும் 15 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.
* “தமிழ்நாடு அரசியல் நிலவரம், தேசிய அரசியல் உள்ளிட்டவைகள் குறித்து உரையாடினோம். தற்போது, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்தி வரும் வலதுசாரி அரசியலின் பேராபத்து குறித்து, எனது கருத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்தேன்”
– துரை வைகோ
* “திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அதிமுக மீது குற்றம் சொல்லி பிரச்னைகளை திசை திருப்ப வேண்டாம்”
“மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் காக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் கடமை திமுக அரசுக்கு உண்டு”
“இன்றும் கொளத்தூர் பகுதி வெள்ளத்தில் மிதந்து கொண்டுதான் உள்ளது. இது வெட்க கேடானது”
– எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர்,அதிமுக
* நாட்டு வெடிகுண்டுடன் 2 ரவுடிகள் கைது
சென்னை : போரூரில் நாட்டு வெடிகுண்டுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் தினேஷ், அஜீம் கைது
நாட்டு வெடிகுண்டுகள், 2 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் – போலீசார் விசாரணை
* வாட்ஸ் அப்-பில் இருந்து, கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியாவில் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்திற்கும் அதிகமான மோசடி செய்யும் கணக்குகள் முடக்கப்பட்டது.
தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் திருத்தப்பட்ட புதிய ஐடி விதிகளின் கீழ், மேலும் 26.85 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டது.
வாட்ஸ்அப் பயனர்களிடமிருந்து பெற்றப்பட்ட நெகடிவ் பின்னூட்டம், ஸ்பேம், தேவையில்லாத விளம்பரங்கள், மோசடி புகார்கள் மற்றும் ஆபாச செய்திகள் புகைப்படங்கள் அனுப்பும் கணக்குகள், பயனர்கள் ப்ளாக் செய்த கம்பெனி விளம்பர கணக்குகளை தடை செய்யப்பட்டுள்ளது.
🔴 புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் அறிவிப்பு!
* ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ள நீரில் தத்தளிக்கிறது”
“வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது”
“முதலமைச்சர் தொகுதியான சென்னை கொளத்தூரில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் விடிய விடிய தூங்காமல் மக்கள் தவித்தனர்”
“மழை நீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அதிகாரிகள்,அமைச்சர்கள் வந்து பார்வையிடவில்லை எனவும் மக்கள் குமுறுகின்றனர்”
– விஜயகாந்த், தேமுதிக தலைவர்
* ஆசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி
டெல்லியில் நடைபெற்று வரும் தொடரில், மகளிர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா பி வி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல்
