Home » அக்னிப்புரட்சி இன்றைய (03.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (03.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (03.01.2023) முக்கிய செய்திகள்.

* இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்!

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியது.

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை, நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க விரிவான ஏற்பாடு.

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

* லாரி மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு.

கடலூர்: வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து.

ஒரே காரில் பயணித்த 2 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – போலீசார் விசாரணை.

* தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஜனவரி 7 வரை மட்டும் மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.

* ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி நடத்திய இரு கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

* இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குருதாஸ்பூர் அருகே ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்து கருத்து தெரிவித்த திரைவிமர்சகரை மிரட்டுவதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஸ்மியின் அலுவலகத்திற்குள் நுழைந்து ரஜினி ரசிகர்கள் மிரட்டியது நாகரிகமற்ற செயல் எனவும் மாற்று கருத்தை தெரிவித்த பிஸ்மியை ஒருமையில் பேசி மிரட்டுவது கவலை அளிப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்

* குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு…

மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 கருத்துக்களை தமிழக அரசு வழங்கியிருந்தது

7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதியில் தமிழகம் உட்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் தேர்வு

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,191க்கும் சவரன் ரூ.41,528க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75.50க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

* நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (ஜன.04) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விடுமுறையை ஈடுசெய்ய ஜன.21ம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

* மின்சார வாரியத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை

101 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* அதிமுக கடிதம் வாங்க மறுப்பதாக தேர்தல் அதிகாரி தகவல்.

இரட்டைத் தலைமை விவகாரம்: கடிதத்தை அதிமுக வாங்க மறுப்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தெரியப்படுத்தினார் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு 2 முறை கடிதம் அனுப்பியும் பழனிசாமி தரப்பு 2 முறையும் திருப்பி அனுப்பியுள்ளது.

இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்தியுள்ளார் சத்யபிரதா சாகு.

* 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவிப்பு.

அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

* முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு; https://gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பிப்ரவரி 4 முதல் 12-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது!

* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த  ஏகாகதசி பெருவிழா இராப்பத்து உற்சவ 2ம் நாள்:

ஸ்ரீ நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி பரமபத வாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி”

“காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார்”

ராணி வேலு நாச்சியாரின் தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் – பிரதமர் மோடி ட்வீட்

* தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

* சீனாவில் கொரோனா பரவலால் முடங்கி கிடந்த ஃபாக்ஸ்கான் செல்போன் தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கியது.

சீனாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதாக கூறப்பட்ட போதிலும் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளதாக ஃபாக்ஸ்கான் தெரிவித்திருக்கிறது. ஐ போன் – 14 மாடல் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் 90 சதவீதம் திறனில் இயங்குவதாக அறிவித்துள்ளது.

* இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிபொழிவால் சுமார் 90 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

சாலைகளில் பல அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால் 92 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சிம்லா, மணாலி உள்ளிட்ட இடங்களில் குறைந்தபட்சம் 4 டிகிரி முதல் மைனஸ் டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

* 9 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது ராகுலின் நடைபயணம்

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மிருக்கு நடைபயணம் செய்து வருகிறார். பனிக்காலத்தை முன்னிட்டு 9 நாட்கள் இப்பயணத்திற்கு விடுமுறை கொடுத்திருந்த ராகுல் காந்தி, இன்று (ஜனவரி 3) மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். உத்தரபிரதேசத்தில் இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது.

* கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?”

விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* வெளியில் இருந்து உணவு பொருட்கள், தண்ணீர் கொண்டு வருவதை தடைசெய்ய தியேட்டர்களுக்கு அதிகாரம் உண்டு – உச்சநீதிமன்றம்.

அதே நேரத்தில் இலவசமாக குடிநீர் தரவும், குழந்தைகளுக்கு தேவையான உணவு கொண்டு வர பெற்றோருக்கு தியேட்டர்கள் அனுமதியளிக்க வேண்டும் என உச்சநீதிமள்ற நீதிபதிகள் உத்தரவு.

* எங்கள் நாட்டு மக்களை குறிவைக்கிறீர்: சீனா

சீனாவில் பிஎஃப்7 வகை கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கட்டாயப்படுத்தின.

இந்நிலையில், தங்கள் நாட்டுக்குள் வரும் சீன பயணிகளை சில நாடுகள் குறிவைத்து கட்டுப்பாடு விதித்துள்ளன. இதனை ஏற்க முடியாது.

எதிர் நடவடிக்கையை எங்களால் மேற்கொள்ள முடியும் என சீன அரசின் முக்கிய புள்ளி மாவொ நிங் கூறினார்.

* விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல்: போலீசில் ஆஜர்படுத்தப்பட்ட  தி.மு.க.வினர் இருவரும் மன்னிப்பு கேட்பதாக எழுதி கொடுத்தனர்

`மேல்நடவடிக்கை தேவையில்லை’ என்று பெண் போலீசும் கூறியதால் சமாதானமாக சென்றனர்

சென்னை, ஜன.3-

விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமத்தில் தசரதபுரம் போலீஸ் பூத் அருகில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அத்துமீறியதாக புகார்

அங்கு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வரும் இளம் பெண் போலீஸ் ஒருவர் சக காவலர்களோடு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தார்.

அப்போது 2 இளைஞர் கள் பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக அத்து மீறலில் ஈடுபட்ட தாக கூறப் படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் இதுபற்றி சக காவலர் களிடம் இதுபற்றி தெரிவித்தார்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் இருவரையும் பிடித்து கடுமையாக கண்டித் தனர். இதனால் பயந்துபோன இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கூட்டத் தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் வந்து பார்த்தனர்.

தி.மு.க. நிர்வாகிகள்

அப்போதுதான் போலீஸ் பிடியில் சிக்கி இருப்பது தி.மு.க. பிரமுகர்கள் என்பது தெரியவந்தது. ஒருவரது பெயர் பிரவீன். 23 வயதான இவர் சாலி கிராமம் மதியழகன் நகரை சேர்ந்தவர் ஆவார். 129-வது வட்ட இளைஞர் அணியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இன்னொரு வரின் பெயர் ஏகாம்பரம்.24 வயதான இவர் சின்மயா நகர் அய்யப்பா நகர் அண்ணா தெருவை சேர்ந்த வர் என்றும், இவரும் இளைஞர் அணியில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் விசா ரணைக் காக அழைத்துச் சென்ற போது தி.மு.க. நிர்வாகிகள் தலையிட்டு போலீசுடன் சமரசம் பேசினர். இந்த பிரச்சினையை பெரி தாக்க வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தி.மு.க. நிர்வாகி களை கைது செய்யாமல் அங்கேயே விட்டு விட்டுச் சென்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர்.

தனக்கு நேர்ந்த அவமானம் தொடர்பாக பெண் போலீஸ் விருகம் பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலும் அத்துமீறல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோயம் பேடு துணை கமிஷனர் குமார் முன்பு நேற்று பிற்பகல் 2.15 மணி அளவில் தி.மு.க. நிர்வாகி களை பிரவீன், ஏகாம்பரம் இருவரும் ஆஜர்படுத்தப் பட்டனர்

அப்போது இருவரும் கூட்ட நெரிசலில் தங்களது கை பெண் போலீஸ் மீது தவறுதலாக பட்டிருக்கலாம் என்றும், தங்களுக்கு அதுபோன்ற நோக்கம் எதுவும் இல்லை எனவும் அதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெற்று இருந்தால் அதற்கு பெண் போலீசிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றோம் எனவும் எழுதி கொடுத்தனர்

நடவடிக்கை தேவை இல்லை

இதைத் தொடர்ந்து பெண் போலீசும் தான் அளித்த புகார் மீது மேல் நடவடிக்கை ஏதும் தேவை இல்லை என்று எழுதி கொடுத்தார். இதையடுத்து இருதரப்பிலும் சமாதான மாக சென்று விட்டனர். முன்னதாக பெண் போலீஸ் தனது இடுப்பை பிடித்து தி.மு.க. நிர்வாகிகள் கிள்ளியதாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சிறுவர்களுக்கு மரண தண்டனை. உச்சகட்ட கொடூரம்

ஈரானில் ‘ஹிஜாப் எதிர்ப்பு’ போராட்டத்தில் கலந்து கொண்ட 2 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இதேபோல 2 இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரானில் 3 மாதங்களுக்கும் மேலாக ‘கட்டாய ஹிஜாப்’ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்., 15,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* அடகு வைக்கப்படும் குழந்தைகள்’ – உயர் நீதிமன்றம்

பெற்றோரின் தேவையற்ற அகம்பாவ சண்டையால் குழந்தைகள் அடகு வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக்கோரி அமெரிக்க வாழ் இந்தியர் தொடர்ந்த வழக்கில், படிப்பு, வாழ்க்கை முறையை கருதி 6 வாரத்திற்குள் குழந்தைகளை அமெரிக்க அழைத்துச் சென்று தந்தையிடம் ஒப்படைக்க தாய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 – இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

163 ரன்கள் இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை

error

Enjoy this blog? Please spread the word :)