அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (04.11.2022) முக்கிய செய்திகள்.
* பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்
இதைத் தொடர்ந்து அஜித் மோகன் இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் எனப் படு தீவிரமாக இருக்கும் மெட்டா-வின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க்-ல் சேர உள்ளார்
* மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சதய விழாவைக் முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோவிலின் வீடியோ…
🔴 மழை: இன்று விடுமுறை அறிவிப்பு விவரம்
சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தஞ்சாவூர்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவள்ளூர்: ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்கால்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
TELEGRAM: t.me/Agnipuratchi1
* தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.
மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும்.
கடலூர், விழுப்புரம்,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் மின்கசிவு காரணமாக குளிர்பதன பெட்டி வெடித்து மூச்சுத்திணறி 3 பேர் உயிரிழப்பு
கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரது வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து கிரிஜா (63), அவரது தங்கை ராதா (55), உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழப்பு
* திட்டக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையின் நிலை!
செய்திக்கதிர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்.
சாதாரண மழைக்கு பேருந்துகள் நிறுத்த முடியாத வகையில் குண்டும் குழியுமாக மாறிவிடுகின்றன. இது தவிர பணிமனையில் முறையான கழிவறை வசதி இல்லை என்றும் புகார் கூறப்படுகிறது.
பேருந்தும் பணிமனையின் உள்ளே மற்றும் வெளியே சீர்செய்ய வேண்டும் என, நடத்துநர்கள், ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
* ⚽️ ஜெர்மனி கால்பந்து வீரர் டிமோ வெர்னர் கடுமையான காயம் காரணமாக கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து விலகல்…
* ஆவின் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்வு..!
தற்போதுள்ள ஆவின் ஆரஞ்ச் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலை மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 46க்கே புதுப்பிக்கப்படும்.
சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60 ஆக 05.11.2022 முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
* காற்று மாசு காரணமாக டெல்லியில் ஆரம்பப் பள்ளிகள் நாளை முதல் மூடப்படுகிறது – முதலமைச்சர் கெஜ்ரிவால்.
காற்று மாசு சீரமையும் வரை இளம் சிறார்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிப்பு .
5ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளின் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை.
* தமிழறிஞர் நெடுஞ்செழியன் காலமானார்.
திராவிட இயக்க பேச்சாளர், தமிழறிஞர் நெடுஞ்செழியன் உடல்நல குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
கடந்த ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது, இவருக்கு வழங்கப்பட்டது.
* வாணிப நோக்கத்துடன் தான் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற தனியார் நிறுவனங்கள் ரூ.70 வரை விற்கின்றனர். ஆனால் ரூ.10 குறைத்து ரூ.60க்கு விற்பனை செய்கிறோம்- அமைச்சர் நாசர்.
அதிமுக ஆட்சியில் ரூ.53 கோடி மட்டும்தான் தீபாவளி இனிப்பு விற்பனை.
தற்போது ரூ.116 கோடி விற்பனை ஆகியிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் மூழ்கிப்போன ஆவின் நிறுவனம்,நீர்மூழ்கிக் கப்பலாக இப்போது பயணிக்கிறது-அமைச்சர் நாசர்.
* அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கான நடைமுறைகள் என்ன?- கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு மருத்துவமனைகளில் காலாவதி ஆகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
காலாவதி மருந்து வினியோகம் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.
* மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் – திருவிதாங்கோடு தேவசம்போர்டு.
நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும்.
மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும்.
* மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள் பலி.
கர்நாடகா: தும்குரு மாவட்டம், ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் ‘தாய்’ அட்டை இல்லாததால், தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணியை திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
வீட்டுக்கு திரும்பி வந்த பிறகு பிரசவம் ஆனதில் கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழப்பு.
* வாட்ஸ் அப் செயலியில் 2 அப்டேட்டுகள் அறிமுகமாகவுள்ளன!
வாட்ஸ் அப் செயலியில் 2 முக்கியமான சூப்பர் அப்டேட்டுகள் அறிமுகமாகவுள்ளன!
வாட்ஸ் அப் குழுவில் அதிகபட்சமாக 1024 பேரும்,
வீடியோ காலில் அதிகபட்சமாக 32 பேரும் இணையலாம் என மெட்டா நிறுவனம் அறிவிப்பு.
* தமிழக முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
நவ.6ஆம் தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்குக- உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் நீதிபதி உத்தரவு.
* மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் மாற்றம்
புதிய இணையதளத்தில் நன்கொடை மட்டும் திருக்கோவிலில் நடைபெறும் உபய சேவைகளுக்கு கட்டணங்கள் போன்றவற்றை இந்த இணையதளம் மூலம் செலுத்தலாம் என அறிவிப்பு
https://maduraimeenakshi.hrce.tn.gov.in
* திருச்சியில் 100 வீடுகளை இடிக்க உத்தரவு:
திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
விதிமுறைகளை மீறி குடியிருப்புகளை கட்ட உதவிய அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதிகள்.
* நவம்பர் 9ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதியை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
* நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் ஜோஸ்வா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
நியூசிலாந்து அணி பேட்டிங்கின் போது 19-வது ஓவரில் கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீசம், மிட்செல் சான்ட்னரை வீழ்த்தினார். டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டில் 39 விக்கெட் எடுத்து அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
* சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை.
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை.
பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்பில் குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி சிவசேனா தலைவர் உயிரிழப்பு.
இன்று பஞ்சாப் திப்பா சாலை கிரேவால் காலனியில் உள்ள பஞ்சாப் சிவசேனா தலைவர் அஸ்வனி சோப்ராவின் வீட்டின் அருகே சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
* டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் வெளியேறியது இலங்கை.
* தொண்டர்களின் இயக்கமாகதான் அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். – மதுரையில் ஓபிஎஸ் பேட்டி
தொண்டர்களின் கையில் வலுவான இயக்கமாக உள்ளது அதிமுக
தொண்டர்களை ஒருங்கிணைத்து அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – ஓபிஎஸ்
* இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்.”
“பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். – அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர்
* இந்தி படித்தவர்களுக்கு வட இந்தியாவில் வேலை இல்லாது, தமிழகத்தில் வந்து கூலி வேலை செய்கின்றனர் – போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
அமித்ஷா இந்தி திணிப்புக்கான குரல் எழுப்பியவுடன், அதை எதிர்த்து முதல் குரல் எழுப்பியது தமிழக முதல்வர். அதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு குரல் எழுந்தது.
மஹாராஷ்டிராவில் மராத்தி படித்தவர்களுக்கு வேலை இல்லை. மாறாக இந்தி படித்தவர்களுக்கு வேலை செல்கிறது. இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் ஏற்படும். அவரவர் தாய்மொழி அழியும் நிலையும் ஏற்படும்.
ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே மொழி எனும் அடிப்படையில் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு துடிக்கிறது.
இன்று ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு-ஒரே சீருடை என்பவர்கள் நாளை ஒரே நாடு- ஒரே உடை, ஒரே நாடு-ஒரே உணவு என்பர். இது ஆபத்தான ஒன்று.
தமிழகத்தில் பாஜக என்பது நோட்டாவோடு போட்டி போடும் கட்சி. இருந்தும் ஏன் திமுக பாஜகவை எதிர்க்கிறது?. பாஜக தமிழகத்தின் உள்ளே வந்தால் தமிழ் மொழி அழியும். நம்முடைய பண்பாடு அழியும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எதிர்க்கும் ஒரே சக்தி திமுகதான் – திருச்சியில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.
* தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தொடர் மழையால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
