அக்னிப்புரட்சி இன்றைய (05.01.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (05.01.2022) முக்கிய செய்திகள்.
* சீனா மீது WHO மீண்டும் குற்றச்சாட்டு:
சீனாவில் கடந்த 1 மாதமாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை லட்சக் கணக்கில் அதிகரித்தும், உண்மை தகவலை தர மறுப்பதாக உலக சுகாதார அமைப்பு மீண்டும் குற்றச்சாட்டு.
இது மற்ற நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், சீனா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி; சஞ்சு சாம்சன் விலகல்
TELEGRAM: t.me/agnipuratchi1
* இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருந்தார். சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பினை பெற்றார்.
இந்நிலையில் முதல் போட்டியின் பீல்டிங்கின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் இரண்டாம் போட்டிக்காக இந்திய அணியுடன் புனேவிற்கு செல்லவில்லை. அவர் சிகிச்சைக்காக மும்பையில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. காயமடைந்த சஞ்சு சாம்சன்க்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும்படி அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு சஞ்சு சாம்சன் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழாவை ஒட்டி தேரோட்டம் தொடங்கியது.
விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் வீதிகளில் வலம் வருகிறது.
* திருவள்ளூர்: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மணல் திட்டாக மாறிய சாலை; 2 அடி உயரத்திற்கு கடல் மணல் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.
கடல் கொந்தளிப்பு காரணமாக முகத்துவராப் பகுதியில் கடல் நீருடன் மணல் அடித்துவரப்பட்டுள்ளது.
* பொங்கல் பண்டிகையையொட்டி அரசுப் பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு.
பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக 16932 பேருந்துகள் இயக்க திட்டம்.
பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் முடிவு – போக்குவரத்து துறை.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல – சென்னை உயர் நீதிமன்றம்
ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரி தந்தைப் பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழாவை ஒட்டி தேரோட்டம்…
வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1610893185764687874?t=3cJbpwKlq7AOf3BP7cxs6A&s=19
விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் வீதிகளில் வலம் வந்தது.
* கரும்பு கொள்முதலில் முறைகேடு – எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி:
பொங்கல் தொகுப்புக்கு அரசு கரும்பு கொள்முதல் செய்வதில் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் முறைகேடு செய்கின்றனர்.
1 கரும்புக்கு ஒதுக்கீடு செய்த தொகை ரூ33; ஆனால் விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ18 வரை தான் தரப்படுகிறது -எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, போலீஸ் 19-ம் தேதிக்குள் பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை 29-ம் தேதி நடத்த அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி அளிக்க விண்ணப்பங்கள் தந்தது ஏற்புடையதல்ல என ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது
* லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
செல்வகுமார் என்பவரிடம் ரூ.8,000 லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் கைது செய்தனர்.
* அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடங்கியது; ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதங்களை முன் வைக்கிறார்.
ஜூலை 11 நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது
“ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு ஆண்டுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் தேவைப்பட்டிருக்காது” – ஓபிஎஸ் தரப்பு
“ஆனால் அப்போது அதனை செய்யாத எடப்பாடி பழனிச்சாமி, தற்போது புதிய பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது” – ஓபிஎஸ் தரப்பு
“கட்சியின் எந்த முடிவையும் இருவரும் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி ஆகும்; கட்சி தலைமை அலுவலகம், தேர்தல் முடிவுகள், நிர்வாகிகள் நியமனம் என அனைத்திலும் இருவரின் முடிவு இணைந்து எடுத்தால் மட்டுமே அது செல்லத்தக்கது” -ஓபிஎஸ் தரப்பு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
கட்சித் தலைமை அலுவலக பொறுப்பில் 10 ஆண்டுகள் இருந்தவர்கள் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும்.
10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி.மொழிய வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது- ஓபிஎஸ் தரப்பு
விதிமுறைகளை உரிய முறையில் மாற்றம் செய்யாமல் பழனிசாமி தரப்பினர் அவசரத்தில் எடுத்த முடிவுகளால்தான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது
ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கக்கூடிய கட்சியில் வெறும் 2,500 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவை எப்படி அங்கீகரிப்பது?- ஓ.பி.எஸ் தரப்பு
நாளை அனைத்து தரப்பினரும் வாதங்களை நிறைவு செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்; வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு.
* சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் : சச்சினுக்கு அடுத்தபடியாக மிக குறைந்த இன்னிங்ஸில் (162) 30 சதங்கள் அடித்து ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
159 – சச்சின்; 𝟭𝟲𝟮 – ஸ்டீவ் ஸ்மித்
* வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டிய விவகாரத்தில் உதவி பொறியாளர் சஸ்பெண்ட்!..
TELEGRAM: t.me/Agnipuratchi1
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் தரமற்ற இருளர் குடியிருப்பு கட்டிய விவகாரத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக 76 இருளர் பழங்குடியினர் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த குடியிருப்புகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி நேரில் ஆய்வு செய்தார். அந்த குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பந்ததாரர் பாபுவை நேரில் அழைத்து கண்டித்தார்.
இவ்வாறு பணிகளை மேற்கொண்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடித்து கொடுக்க நேரிடும் எனவும் ஆட்சியர் ஆர்த்தி ஒப்பந்ததாரரை எச்சரித்தார். இருளர் பழங்குடியினர் வசிப்பதற்காக ஊத்துக்காட்டில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா ரூ.4,62,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடப்பணிகளை ரத்து செய்துவிட்டு மாற்று ஒப்பந்ததாரர் மூலம் பணிகளை மேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தரமற்ற குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவனம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
* ஆளுநருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்!.
ஆளுநர் தமிழக அரசின் நிர்வாகத்தை கண்காணிக்கலாம், ஆனால் அரசியலில் ஈடுபடக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் தமிழக அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிடக் கூடாது எனவும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தருவதுதான் ஆளுநரின் வேலை எனவும் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
* நெருக்கடி காலத்தில் உதவியவர்களுக்கு நாமும் உதவுவதே நியாயம்” – விஜயபாஸ்கர்
TELEGRAM: t.me/agnipuratchi1
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அலையின் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மருத்துவத் துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிக செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இதைக் கண்டித்து பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதனைத் தொடர்ந்து, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஆனால், தங்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டால், அது நிரந்தரப் பணியாக இருக்காது என்றும், அதனால் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும் ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தான் நாங்கள் பணி நியமனம் செய்தோம். கொரோனா காலத்தில் பணிக்குச் சேரச் சொல்லி 8,500 பேருக்கு ஆணை அனுப்பினோம். ஆனால், அவர்களில் 2,400 பேர் மட்டும் தான் பணிக்கு வந்திருந்தார்கள்.
இரவுபகலாக தூங்காமல் கர்ப்பிணிகள், பெண்கள் வெளிமாவட்டத்தில் தங்கி; கிடைத்த இடத்தில் தங்கிச் சாப்பிட்டுப் பணி செய்த இவர்களுக்குப் பணிநியமனம் செய்ய அரசு யோசிப்பது ஏன்? கொரோனா காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதுதான் நியாயம். இது குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக கேள்வி எழுப்பும்” என்று தெரிவித்திருக்கிறார்.
* ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; நடிகையை விடுவித்த ஈரான் அரசு
TELEGRAM: t.me/agnipuratchi1
ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நடிகை தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்க சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அப்பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஹிஜாப் ஆடை கண்காணிப்பு சிறப்புக் காவல் படையை நீக்கி ஈரான் அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையில், தொடர் போராட்டத்தின் போது ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த நடிகையான தரனே அலி டோஸ்டி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவரை ஈரான் அரசு சிறையில் இருந்து விடுவித்தது. நடிகை தரனே அலி டோஸ்டி கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “தி சேல்ஸ்மேன்” என்ற படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
* நீலகிரியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்’ – இறுதிப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், சரிபார்த்தல் பணி கடந்த டிசம்பர் 9 தேதி நிறைவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி,
பெண் வாக்காளர்கள் 3.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 8,027 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக 6.66 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் என்றும், 1.7 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சிறிய தொகுதி சென்னை துறைமுகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க – elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு.
TELEGRAM: t.me/agnipuratchi1
* புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
மொத்தம் 10.02 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
* ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லக் கட்டுப்பட்டவர் அல்ல” – சென்னை உயர்நீதிமன்றம்
ஆளுநருக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராகப் பதவி வகித்து வருகிறார். ஆதாயம் தரும் இரட்டைப்பதவி வகிப்பதால், எந்தத் தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்க வேண்டும் என்றும், அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், பதவியில் இருக்கும் ஆளுநரோ, குடியரசு தலைவரோ நீதிமன்றத்திற்கு பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று கூறி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
* துப்பாக்கிச் சூட்டில் 130 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்கள் உட்பட 130 பேர் தற்செயலாக அல்லது வேண்டும் என்றே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
* இந்தியாவில் 5 கோடி பேர் கொடிய நோயால் பாதிப்பு
நாட்டில் 5.72 கோடி பேர் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது டெல்லி, மேற்கு வங்க மருத்துவ நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், அதிகமாக பெண்கள் 2.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக டினியோ கேப்பிட்டிஸ் எனப்படும் முடிப்பூஞ்சை தொற்றால் பள்ளி சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விழிப்புணர்வு இல்லாததே பாதிப்பு அதிகரிக்க காரணம் என கூறப்பட்டுள்ளது.
* டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க பரிந்துரை
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை
* கோயில் திருப்பணிக்கு ரூ. 50 கோடி நிதி.
தமிழகம் முழுவதும் உள்ள 2500 கோயில்களின் திருப்பணிக்காக ரூ. 50 கோடி நிதி ஒதிக்கீடு.
தலா 2 லட்சம் வீதம் கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“நாங்கள் மதவாதத்துக்கு தான் எதிரானவர்கள், மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல” – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
* ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்பவும் கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
* மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்!
அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் பணியிலிருந்து நீக்கம் செய்தனர்.
இவர்கள் வரிசையில் கடந்தாண்டு நவம்பர் மாதமே 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது அமேசான் நிறுவனம்.
இந்நிலையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பிய செய்தியில்,
தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது.
இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
* மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் – ஐ
சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு நாள்தோறும் 25க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதனால், மெட்ராஸ்-ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இது 5 நாட்களில் குணமடைய கூடியது என்றாலும், அலட்சியமாக இருக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
* அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தி, மருத்துவரைத் தகாத வார்த்தையால் திட்டிய கிராம உதவியாளர் மற்றும் அவரது சகோதரிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகிய இருவரும், தமது தந்தை கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் விஜயவதி என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது வேல்முருகன் மருத்துவரை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டியும், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியும் உள்ளார்.
சுவாமிநாதன், விருத்தாசலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், அரசு தரப்பு சாட்சியங்கள் தெளிவாக உள்ளதால் அரசு ஊழியர் வேல்முருகன் குற்றவாளி என உறுதி செய்து, “இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஐந்து ஆண்டுகள் என பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியதற்காக 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வேல்முருகனின் சகோதரி சுஜாதாவிற்கு 1000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 10 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனையை அரசு ஊழியரே சேதப்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* விமர்சனம் நல்லது – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
மதுரையில் பாமக கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், “நம் மீது விமர்சனங்கள் வருவது நல்லதுதான். அப்போது தான் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். பாமகவை பார்த்து அனைவரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதனால்தான் அதிகமான விமர்சனங்கள் வருகின்றன” என்றார்.
* உக்ரைன் தாக்குதல்; 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது ஜனவரி 1ம் தேதி உக்ரைனிய படைகள் நள்ளிரவில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் 300 வீரர்கள் காயமடைந்ததாகவும் உக்ரைன் கூறியது. ஆனால், “இந்த தாக்குதலில் 89 வீரர்கள் வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில், துணை தளபதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்” என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
* பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுங்கள்: ராகுல்காந்தி
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை உத்தரபிரதேசத்தை சென்றடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பஹ்பட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல், “பணவீக்கம் குறித்து மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு, 4 சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறுத்தைகள் காட்டில் சுற்றித்திரிவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன” என்று விமர்சனம் செய்தார்.
* இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய கொரோனா வகை தொற்று
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, சீனாவில் ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மேற்கு வங்கம் வந்த 4 பேருக்கு ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேற்கு வங்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் 4 பேருக்கு பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கும் பி.எஃப்.7 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் நால்வரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* சிக்கன் சாப்பிட்ட செவிலியர் மரணம்; பலருக்கு வாந்தி மயக்கம்
கேரளாவின் கொச்சி மாநகரில் கடந்த ஆண்டு ஓட்டலில் ஷவர்மா சிக்கன் சாப்பிட்ட மாணவி மரணமடைந்தது பரபரப்பும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதன் தாக்கம் மறையும் முன்பாக தற்போது அடுத்த மரணமும் ஏற்பட்டு கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் நகரைச் சேர்ந்த ரஷ்மி(35) அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸாக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஷ்மி கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அல்ஃபாம் சிக்கன் 65 மற்றும் குழிமந்தி பிரியாணி இரண்டும் சாப்பிட்டுள்ளார். இவற்றைச் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக ரஷ்மிக்கு வாந்தி மற்றும் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம், அதே ஒட்டலில் சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படவே அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கோட்டயத்தை அதிர வைத்திருக்கிறது.
இந்நிலையில், ரஷ்மியின் உடல்நிலை மோசமடையவே, பின்னர் அவர் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார். இதையறிந்த சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கோட்டயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் முதல் முறையல்ல. இது இரண்டாவதாக நடந்த சம்பவம். இதற்கு முன்பு இதே ஓட்டலில் சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் கோட்டயம் நகரசபை அதிகாரிகள் ஓட்டலை மூடி சீல் வைத்தனர். பின்னர், மீண்டும் ஓட்டல் திறக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிகழ்வுக்கு நாள் கடந்த இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்திய நிலையில் தயார் செய்யப்பட்ட சிக்கன் உணவுகளே காரணம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். சிக்கன் சாப்பிட்ட நர்ஸின் மரணம் கோட்டயத்தில் திகிலைக் கிளப்பியுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
