அக்னிப்புரட்சி இன்றைய (06.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (06.01.2023) முக்கிய செய்திகள்.
* 2வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
முதலில் ஆடிய இலங்கை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
* நெல்லை தாமிர சபை ஆருத்ரா திருநடனம்!
Watch: https://youtu.be/lJl_Lb-Wx7Y
* புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முகூர்த்தக்கால் நடப்பட்டது
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் முத்தாலம்மன் கோயில் அருகில் நடப்பட்டது
17ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று நடந்த இந்த முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* 6 ஆவது நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்:
சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் ஒப்பந்த செவிலியர்கள் 6ஆவது நாளாக போராட்டம்.
கொரோனா காலத்தில் பணியமர்த்திய செவிலியர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
* நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் நூல் வெளியீடு:
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டை முன்னிட்டு அவர் எழுதிய கட்டுரைகள், தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை சென்னை இலக்கிய திருவிழா துவக்க விழாவில் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத்திட்டம் பிரிவில் 29 புத்தகங்களும், இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் 36 புத்தகங்களும், சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு 10 புத்தகங்கள் உட்பட 100 நூல்கள் வெளியிடப்பட்டன.
* திமுக ஆட்சி தமிழுக்கான ஆட்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத சின்னமாக இருக்கும்.
மத – சாதியவாதத்தால் பிளவுறும்போது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரி மனிதனை ஒன்றாக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரி மனித சமுதாய வேறுபாடுகளை களைகிறது.
தெய்வத்தால் ஆகாது எனினும் என்ற திருக்குறளை விட தன்னம்பிக்கை வரி வேறு உண்டா?-சென்னை இலக்கிய திருவிழாவை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சான்று வழங்கும் பணி தீவிரம்.
மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
காளைகளுக்கான தகுதிச் சான்று அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது.
நாட்டு இன காளைகளாக இருக்க வேண்டும், மூன்றரை வயது நிரம்பியிருக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன.
* இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்- தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.
காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை வழங்க முடிவு-டிஜிபி சைலேந்திர பாபு.
* மத்திய பிரதேசம்: ரிவா மாவட்டத்தில் உள்ள கோயில் மீது விமானம் மோதிய விபத்தில் விமானி உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயம்.
* தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரியிலும் ஜெயின் சமூகத்தினர் அமைதி ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஜார்க்கண்ட்டில் உள்ள ஸ்ரீ சம்மத் சிகர்ஜி ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி, சேலம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஜெயின் சமூகத்தினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
* ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.304 சரிந்து ரூ.41,520க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.304 சரிந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,190க்கும், சவரன் ரூ.41,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* என்எல்சியை வெளியேற்றக் கோரி நாளை முதல் இரு நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறேன்- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்திற்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. மேலும், விளைநிலங்களை காப்பாற்ற என்எல்சி நிறுவனத்தை கடலூரில் இருந்து வெளியேற்றக் கோரி போராட்டம் நடத்தப்படும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
* அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் காலமானார்.
அருமை நண்பர் வி.எம்.சுதாகர் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.
* சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்.
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம்; அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும்.
நகரத்தில் உள்ளவர்களுக்கு ஜல்லிக்கட்டின் அருமை பெருமையை புரியவைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
* தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து உற்சவ 5ம் நாள்:
ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.
* இந்திய அளவில் டிரெண்ட் ஆன ‘தமிழ்நாடு’ ஹேஷ்டேக் – காரணம் என்ன?
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘தமிழ்நாடு’ ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும்.
இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட ‘தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும்’ என்றார். தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டுவிட்டரில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியின் ‘தமிழகம்’ கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். ‘தமிழ்நாடு’ ஷேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. பலரும் அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட் செய்து வருகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடிவு..!!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆய்வு நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவையின் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதே சமயம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் விடுதலை செய்யப்பட்ட 5 பேரை தண்டிக்க வேண்டும் என்றும் கோகுல்ராஜின் தாயார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவதியிடம் விசாரணை நடைபெற்றது. அச்சமயம் வீடியோ காட்சிகளை கொண்டு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அப்போது விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் முன்னுக்கு பின் மாறி மாறி சாட்சியம் அளித்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டது.
மேலும் பிறழ் சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது சென்னை உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. கர்ப்பமாக உள்ள சுவாதிக்கு பதில் அவரது கணவரிடம் குற்றச்சாட்டுக்கான மெமோவை ஐகோர்ட் வழங்கியது.
வழக்கில் கோகுல்ராஜின் தாயார், அரசு, காவல்துறை தரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு செய்தனர்.
கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழியை பற்றி அறியவும் ஜனவரி 22ல் நேரில் செல்வதாக நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து எழுத்தாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதை வழங்கினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” காலையில் இலக்கிய திருவிழா, மாலையில் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் தமிழாட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை இரண்டும் சாட்சியாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடந்தது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்குவது நாட்டில் அறிவு ஒளி பரவ வேண்டும் என்பதற்காகத்தான். வீட்டிற்கு ஒரு நூல் நிலையம் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் பேரறிஞர் அண்ணா. அவரின் நோக்கத்தை உருவாக்கவே மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சிகள், இலக்கிய விழாக்களை நடத்த இந்த அரசு உதவி செய்து வருகிறது.
தமிழின் மீதும் புத்தகங்கள் மீதும் எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் மாறாக் காதல் கொண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். கடந்த ஓராண்டில் தமிழுக்கும், எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அளவில்லாத ஆக்கப்பணிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல காக்கின்றன. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். அடையாளம் போய்விட்டால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழந்து விடுவோம்.” என தெரிவித்துள்ளார்.
* பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம்
கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தேவைப்படுவதால் அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரி தொடங்கி வரும் 12ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
* ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு:
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
காளையர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.
காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்- தமிழக அரசு.
* புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர்
சென்னை, நந்தனத்தில் 46வது புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மொழி ஒரு இனத்தின் உயிர்; மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம்.
புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு.
* கடைசியா இப்படி இறங்கிட்டாங்களே…
Watch: https://youtu.be/lOY-m81OuvQ
இன்றைய அரசு ஊழியர்களின் நிலை?
* தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.
கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன் அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர்.
மேலும் அறங்காவலர் தேர்வுக்காக மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தருசன் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
வீடியோ: https://twitter.com/IndiaNewsDigest/status/1611401773843087360?t=5yCsnjUpwXDiCMmriU87Zg&s=19
ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர மூர்த்தியும் – சிவகாமசுந்தரியும் திருநடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
