அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (06.11.2022) முக்கிய செய்திகள்.
* டி20 உலகக்கோப்பை – அரையிறுதியில் இந்தியா:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி.
நெதர்லாந்து அணியிடம் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா – அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா.
பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்திற்கு 4வது அணியாக அரையிறுதி செல்ல வாய்ப்பு.
* தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைய சாதகமான சூழல் உள்ளது
உருவான நேரத்தில் இருந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழ்நாடு புதுச்சேரி கரையை நோக்கி நகர்ந்து வரும் – வானிலை மையம்
* ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரி வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Nursing Officer
காலியிடங்கள்: 433
சம்பளம்: மாதம் ரூ. 44,900
வயதுவரம்பு: 01.12.2022 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம் முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பணி அனுபவம்பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள். தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும். கேள்வித் தாள் பொது அறிவு, பொது நுண்ணறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவில் இருந்து 30 சதவீத கேள்விகளும், செவிலியர் பாடப்பிரிவில் இருந்து 70 கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,200, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1,500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https:://www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.12.2022 ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.12.2022
TELEGRAM: t.me/Agnipuratchi1
* லஞ்ச ஒழிப்பு: விழிப்புணர்வு குறும்படம்!
உங்களை சுற்றி ஊழல் நடக்கிறதா? PIDPI முறையில் புகார் அளியுங்கள்…
* டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி.
11 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி; இதன்மூலம் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்பு உண்டாகியுள்ளது.
* ஆவின் பால் விற்பனை படுத்தது!?
ஆரெஞ்ச் மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட், நேற்று புதிய விலையில் ஆவின் பாலங்களுக்கும், கடைகளுக்கும் விற்பனைக்கு வந்தது. ஆரஞ்ச் பால் லிட்டருக்கு 12 ரூபாயும், சிவப்பு நிற பால் 8 ரூபாயும் உயர்த்தப்பட்டதால், அவற்றை வாங்குவதற்கு, பலரும் ஆர்வம் காட்டவில்லை. வர்த்தக ரீதியாக, இவற்றை பயன்படுத்துவோரும் வாங்கவில்லை. சென்னையில் விற்பனைக்கு வந்த 13 லட்சம் லிட்டர் பாலில், 60 முதல் 70 சதவீதம் மட்டுமே விற்கப்பட்டது. வாங்கிய பால் விற்பனையாகாததால், ஏஜன்ட்கள் மற்றும் ஆவின் பாலகங்கள் நடத்துவோர், நஷ்டத்திற்கு தள்ளப்பட்டனர். பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டதால், கிராமங்களில் ஐந்து மாதங்களாக, ஆவின் பால் விற்பனை களைகட்டியது. ‘ஆவின் கோல்ட்’ என்ற பெயரில் குறைந்த விலையில் விற்கப்பட்ட பாலின் விலையும், பல்வேறு மாவட்டங்களில் உயர்ந்தது. பால் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதால், பால் பாக்கெட் கொள்முதலை, ஆவின் ஏஜன்ட்கள், பாலகங்கள் நடத்துவோர், பால் வியாபாரிகள் பெருமளவில் குறைத்துள்ளனர். இதனால், ஆவின் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
* அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.
இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி.
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது என கூறுகிறார்”
“அதிமுக ஒன்றாகதான் உள்ளது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்”
நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
* மதுரை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகளில் டீ, காபி விலையை ₨15 ஆக உயர்த்த முடிவு
ஆவின் பால் விலை உயர்வு எதிரொலியாக மதுரை மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கம் அறிவிப்பு
* கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களை உள்ளடக்கிய வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உத்வேகம் அடையும் – மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத்
* பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை அதிகரிப்பது குறித்து ஐ.நா. பருவநிலை மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. – மத்திய அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ்
* உலக அளவில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.
– ஆயுஷ்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்
* இமாச்சலப் பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் – பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி தலைவர் ஜே.பி.நட்டா
மாணவிகளுக்கு இலவச சைக்கிள், உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி என வாக்குறுதி
ஹிம்மாச்சலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: நட்டா
* நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் ஜப்பானியர்கள் தமிழில் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்
தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு உள்ளதால் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யும் பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்
* பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீஸ் கைது செய்தது.
* இத்தாலியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அப்புலியா அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர்.
* தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை: தென்னாப்பிரிக்கா கேப்டன்
டி20 உலக கோப்பையில் நெதர்லாந்திடம், தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, “இந்த தோல்வி மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பு வரை நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். நிச்சயமாக இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. நான் டாஸில் தவறான முடிவை எடுத்து விட்டேன் என நினைக்கிறேன்” என்றார்.
* டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்
360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து தனது அதிரடி ஜாலத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜிம்பாப்பேவுக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் குவித்த அவர் 2022ம் ஆண்டு டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் 2022ல் மட்டும் 28 போட்டிகளில் விளையாடி 1026 ரன்கள் குவித்துள்ளார், இதில்1 சதம், 9 அரைசதம் அடங்கும்.
* உலக பாரா பேட்மிண்டன் – தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார்
ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை வீராங்கனை மனிஷா ராமதாஸ் தங்கம் வென்றார். இவர் ஜப்பான் வீராங்கனை மாமிக்கோ டொயட்டாவை 21-15, 21-15 என்ற நேர் செட்டில் வென்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் தமிழ்நாடு வீராங்கனை ஆவார்.
* தமிழ்நாடு பேட்மிண்டன் வீராங்கனைக்கு தமிழிசை வாழ்த்து
தங்கப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த வாழ்த்து செய்தியில், “உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு வீராங்கனை மனிஷாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல உலக சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்” என்றார்.
* விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.எல்.ராகுல்
இந்திய வீரர் கே.எல்.ராகுல் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டானதால், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் வங்கதேசம் (50 ரன்கள்), ஜிம்பாப்வே (51 ரன்கள்) அணிகளுக்கு எதிராக அதிரடி அரைசதம் அடித்து விமர்சனங்களுக்கு கே.எல்.ராகுல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
* இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி இராமதாஸ்
ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த பேட்டியில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டுமென்றே அளுநர் எதிர்க்க கூடாது. இதனை இருவரும் கடைபிடிக்க வேண்டும். முதல்வர் ஆளுநரை சந்தித்து, பிரச்சனையை பற்றி பேசி தீர்க்க வேண்டும். அரசுக்கு, ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்” என்றார்.
* வெளிநாடு வாழ் ட்விட்டர் ஊழியர்களுக்கும் சிக்கல்; 60 நாள் கெடு
ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ஏராளமான ஊழியர்களை நீக்கி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா, எல் 1 விசா உள்ளிட்ட விசாக்கள் மூலம் பணியாற்றும் ட்விட்டர் ஊழியர்களில் பலர் பணியில் இருந்து விலக 60 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 625 – 670 ஊழியர்கள் ஹெச் 1 பி விசா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* 13% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் லிஃப்ட்
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான லிஃப்ட் என்ற நிறுவனம் 683 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது மொத்த ஊழியர்களில் 13% ஆகும். உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் செலவுகளை குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த பணி நீக்க நடவடிக்கை காரணமாக 32 மில்லியன் டாலர் வரை செலவு மிச்சமாகும் என்று லிஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
* கார் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா மோட்டார்ஸ்
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விலையை வரும் 7ம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. கார்களின் மாடலுக்கு ஏற்ப 0.9% அளவுக்கு விலை ஏற்றம் காணலாம் என கூறப்படுகிறது. வாகன உதிரி பாகங்களின் செலவினங்கள் அதிகரித்ததால் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
* மதுரை : கல்லூரி முன்பு ரகளை செய்த 6 பேர் கைது.
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி முன்பு மதுபோதையில் ரகளை செய்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
* டி20 உலகக்கோப்பை – ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி.
115 ரன்களுடன் 17.2 ஓவரில் ஜிம்பாப்வே அணி ஆல்-அவுட்.
* கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய 3 இடங்களிலும் அமைதியான முறையில் நடைபெற்றது ஆர்.எஸ்.எஸ். பேரணி.
41 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது
கடலூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தொண்டர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து சென்ற காட்சி……
* ஆர்.எஸ்.எஸ். பேரணியை தான் எதிர்க்கிறோம்”
ஆர்.எஸ்.எஸ் எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்
பாஜக பேரணியை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை, ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்க்கிறோம்
மக்கள் புரிந்துக் கொண்டால் ஆர்எஸ்எஸ் இந்தியாவிலேயே இருக்காது. மனுஸ்மிருதி பிரதிகளை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்த பின் – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
* மக்கள் புரிந்து கொண்டதால் தான் ஆர் எஸ் எஸ்ன் குழந்தையான பா ஜ கவின் ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. வி சி க, எப்படிப்பட்ட இயக்கம் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டதால் தான் சொந்த சின்னத்தில் போட்டியிட அச்சப்பட்டு தி மு க வின் சின்னத்தில் போட்டியிட்டது, தட்டுத்தடுமாறி தி மு கவின் தயவோடு உங்களால் பாராளுமன்ற உறுப்பினராக முடிந்தது. தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தினால், வி சி க அரசியலிலேயே இருக்க முடியாது.
நாராயணன் திருப்பதி, பாஜக
* ஏரியில் விமானம் விழுந்த விபத்து: 26 பேர் மீட்பு.
43 பயணிகளுடன் சென்ற விமானம் தான்சானியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
ஏரியில் விழுந்த விமானத்தில் இருந்து இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள், உள்ளூர் மக்கள் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15பேரை விடுவிக்க வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
நவ8ம் தேதி தங்கச்சி மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்-மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
* முன்னாள் இந்திய உளவுத்துறை (Intelligence Bereau) அதிகாரி ஆர்.என். குல்கர்னி கொலை.
மைசூரு இல் மாலை நடைப் பயிற்சி சென்றபோது கார் மோதியதால் மரண மடைந்தார். சி.சி.டீ.வி. கேமரா பதிவைப் பார்த்ததில் வாகனத்திற்கு உரிய நம்பர் பிளேட் இல்லை என்பது தெரிய வந்தது.
Facets on Terrorism in India and Sin of National Consquences என்ற புத்தகம் எழுதியுள்ளார்.
உளவுத்துறையில் பயிற்சியாளராகவும் அயல் நாடுகளிலுள்ள இந்திய தூதராலயங்களில் அரசுப் பணிகளில் சேவை புரிந்துள்ளார்.
* மைதானத்துக்குள் நுழைந்த ரோஹித் ரசிகருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை, பெரிய திரையில் அறிவித்த மெல்பர்ன் மைதான நிர்வாகம்.
ஜிம்பாப்வே – இந்தியா போட்டியின்போது, கேப்டன் ரோஹித் சர்மாவை காண திடீரென மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகருக்கு ₹6.5 லட்சம் அபராதம் விதிப்பு.
* தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் 3 பேரை தாக்கிய கரடி பிடிபட்டது
நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான குழு, காவல் துறையினர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி கரடியைப் பிடித்துள்ளனர்
* தற்போது நாட்டு மக்கள் கைகளில் உள்ள ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் அச்சிடப்பட்ட பணத்திலிருந்து வங்கியிடம் உள்ள தொகையை கழித்தால் மக்களிடம் உள்ள தொகை தெரியவரும். 2016, நவ.4-ல் நிலவரப்படி ரூ.17.97 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் பொதுமக்களிடம் இருந்தது. 2016 நவ.8-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது. பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் கைகளில் இருந்த ரொக்கப்பண மதிப்பு 2017 ஜனவரியில் ரூ.7.8 லட்சம் கோடியாக சரிந்தது. புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதும் மக்கள் கையில் உள்ள ரொக்கப்பணத்தின் அளவு அதிகரித்தது.
* இடைத்தேர்தல் முடிவுகள்
👉உத்திரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கோலா கோக்ராநாத் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 90,512 வாக்குக்கள் பெற்று தோல்வியடைந்தார்.
👉 தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி 88,716 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
டிஆர்எஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 79,630 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
👉 பீகார்: கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1,794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி பெற்றார்.
அதே தொகுதியில், அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி வேட்பாளர் 12,214 வாக்குகளையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 8,854 வாக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
