Home » அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (07.01.2022) முக்கிய செய்திகள்.

* சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் கூச்சல் போட்டதுடன், அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்திய சம்பவம்.

ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் 100 மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு  சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்பு.

மாணவர்கள் முன்னிலையில் யோகா பயிற்சி செய்து காண்பித்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

* சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதையான ‘ஸ்பேர்’ வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தி கார்டியன் ஊடகம் ஒரு தகவலை வெளியிட்டு  அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது

TELEGRAM: t.me/Agnipuratchi1

* சசெக்ஸ் பிரபுவான ஹாரி , இப்போது வேல்ஸ் இளவரசராக உள்ள தனது சகோதரர் வில்லியம் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக 6 பக்க குறிப்பை தி கார்டியன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமின் முன்னாள் மனைவி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்லே பற்றிய வாக்குவாதத்தின் போது, ​​வில்லியம் , இளவரசர் ஹாரியை தாக்கியதாக தெரிகிறது.

செய்தி வெளியீடு மூலம் பெறப்பட்ட பகுதிகளின்படி, வில்லியம், மேகனை கடுமையாக பேசியுள்ளார். இது பற்றி பேச தொடங்கியது விவாதமாகி கைகலப்பாக மாறியது. “எல்லாம் மிக வேகமாக நடந்தது. அவர் என் காலரைப் பிடித்து, என் நகையோடு பிடித்து இழுத்து தரையில் தள்ளினார். நான் நாய்க்கு தீனியிடும் கிண்ணத்தில் விழுந்தேன். அது உடைந்து என்னைகாயப்படுத்தியது. முதுகில் காயம் ஏற்பட்டது. நான் ஒரு கணம் அங்கேயே படுத்து, கொஞ்சம் தெளிந்த பின்னர் எழுந்து வந்தேன்” என்று இளவரசர் ஹாரி தனது புத்தகத்தில் பகிர்ந்துள்ளார் என தகவல்.

William attack claim, Taliban ‘kills’ and Meghan’s ‘baby brain’ remark detailed in reports on Harry’s new book.

* குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க முடிவு செயப்பட்டுள்ளது.

நயாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு செயப்பட்டுள்ளது.

* சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்படுகிறது

TELEGRAM: t.me/agnipuratchi1

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை கடந்த 7 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அந்த பகுதியில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்டமிட்டுள்ளது.சென்னையில் உள்ள 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான ஆய்வு பணியை சி.எம்.டி.ஏ. தொடங்கி உள்ளது.

அண்ணாசாலையில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் 3 கி.மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த சாலை 20 மீட்டரில் இருந்து 30.5 மீட்டர் வரை அகலப்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கான நிலத்தின் திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் ரோடு, கிரிம்ஸ் ரோடு, நியூ ஆவடி ரோடு மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 6 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலைகளை குறைந்த பட்சம் 18 மீட்டர் வரை விரிவுபடுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அடையாறு எல்.பி.ரோடு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, ஹண்டர்ஸ் ரோடு ஆகியவை அகலப்படுத்தும் திட்டத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.

சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

சர்தார் படேல் சாலை விரிவாக்கத்திற்கான நிலம் தனியாரிடம் எடுக்க விரைவில் இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணி திங்கட்கிழமை முடியும். எத்திராஜ் சாலை விரிவாக்க ஆய்வு பணி விரைவில் தொடங்க உள்ளது.இந்த சாலை பாந்தியன் ரோடு ஜங்சன் மற்றும் எழும்பூர் கூவம் வரை 18 மீட்டர் அகலத்திற்கு விரிவு படுத்தப்படுகிறது. இதே போல கிரிம்ஸ் ரோட்டில் இருந்து பாந்தியன் ரோடு, அண்ணாசாலை வரை 18 மீட்டர் அகலத்திற்கு விரிவு படுத்தப்படுகிறது.

அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல் கட்டமாக 7 சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொது போக்கு வரத்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்படும்.

ஈ.வே.ரா.பெரியார் சாலையில் இருந்து நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம் குடிநீர் திட்டப்பணி வரை 18 மீட்டர் அகலமும், திருவள்ளூர் ரோடு சந்திப்பில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வரை 18 மீட்டர் அகலமும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அடையாறு எல்.பி. ரோடு 30.5 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.41,768க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 உயர்ந்து ரூ.5,221க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.74.40க்கு விற்பனையாகிறது.

* சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்: பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தியுள்ளார்.

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படவுள்ளன. இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பிஹார் மாநில அரசுக்கு எனது பாராட்டுகள்.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்தக் கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பிஹார். ஏற்கெனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.

* அடிக்கு குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்

விவசாயிகளிடமிருந்து 6 அடிக்கும் குறைவான கரும்புகளை கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு அய்யா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கரும்பு கொள்முதலில் இதுவரை எந்த முறைகேடு புகார்களும் எழவில்லை என்பது மனநிறைவு அளிக்கிறது.

6 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பதால் அதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. ஆனால், காலமும், சூழலும் இந்த விஷயத்தில் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

6 அடி உயரத்திற்கும் குறைவான கரும்புகளை தோட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிடுகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் கரும்புகள் வீணாகி விடும். பொங்கலுக்கு இன்னும் 8 நாட்கள் இருப்பதால் அகற்றப்படும் கரும்புகளை சந்தையிலும் விற்க முடியாது.

கரும்பின் உயரம் சில காரணங்களால் குறைவது இயல்பு. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை. அதனால் உழவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், 5 அடிக்கும் கூடுதலான உயரம் கொண்ட கரும்புகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

* செம்மரம் கடத்திய வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் கைது.

பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் ரூ.48 கோடி செம்மரம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரணை.

பாஸ்கரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கைது; எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

* செவிலியர்களை பணியமர்த்த மீண்டும் நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகள் உடன் இன்று மாலை பேச்சுவார்த்தை.

மீண்டும் செவிலியர்களை பணி அமர்த்துவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

2,300 பேரை பணியில் அமர்த்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செவிலியர்களின் சொந்த ஊரிலேயே பணி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

திமுக அரசு செவிலியர்களை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள இடஒதுக்கீடு அடிப்படையிலேயே பணி நிரந்தரம் செய்ய முடியும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

* பீகார் மாநிலத்தில் முதற்கட்ட சாதிவாதி கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும்  நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

* குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்.

செகந்திராபாத் – அகர்தாலா சிறப்பு ரயிலில் பயணித்த 19 மாத குழந்தை, தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைந்துள்ளது இந்திய ரயில்வே.

‘அவர்கள் தவறுதலாக பொம்மையை ரயிலிலேயே விட்டுச்சென்றுள்ளனர்; பயணத்தின்போது குழந்தைக்கு பொம்மை மீதிருந்த பிணைப்பை கண்ட பக்கத்து இருக்கையில் இருந்தவர், பொம்மையை எங்களிடம் தந்து குழந்தையிடம் அதை ஒப்படைக்க சொன்னார்’ – இந்திய ரயில்வே.

* கடலூர்: நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இரண்டு நாள் நடைபயணம் துவங்கியது.

நெய்வேலி அருகே வானதிராயபுரம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்துடன் நடை பயணம் துவங்கியது.

இன்று வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை நடைபெறுகின்றது.

என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது, சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைப்பு.

* சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை.

சுமார் எட்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள்.

வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை; மகர ஜோதியை காண இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு.

சபரிமலையில் ஜோதி தெரியும் இடங்களில் ஆங்காங்கே நின்று தரிசனம் செய்ய அறிவுறுத்தல்.

* நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு பிடிவாரண்ட்.

இருவரையும் ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஐகோர்ட் கிளை ஆணை.

* 12ஆம் வகுப்பு படித்தால் போதும் – சென்னை மாநகராட்சியில் வேலை!

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள ஏஎன்எம், லேப் டெக்னீசியன் ஆகிய காலியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர் – கிரேட்டர் சென்னை மாநகராட்சி

பதவி – ஏஎன்எம், லேப் டெக்னீசியன்

காலியிடங்கள் – 221

கல்வித்தகுதி – 12வகுப்பு,ஏஎன்எம், லேப்டெக்னீயன்

சம்பளம் – 8,400 – 15000

பணியிடம் – சென்னை

விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் – இல்லை

முகவரி – The Member Secretary,

Chennai City Urban Health Mission,

Public Health Department, Ripon Buildings,   Chennai – 600003

இணையதள முகவரி – https://chennaicorporation.gov.in/gcc/

கடைசி தேதி – ஜனவரி 19,2023

TELEGRAM: t.me/agnipuratchi1

* இந்தியா என்ற ஒரு நாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஆளுநர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என்கிறார். எப்படி அழைப்பது என அவர் சொல்லித்தர வேண்டாம். தமிழகம், தமிழ்நாடு என்பது பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பதுதான் நம்முடைய நாடு. பல மாநிலங்கள் சேர்ந்ததுதான் இந்திய அரசாங்கம். இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. இந்தியா ஒரு தேசம்” என்றார்.

* எங்கள் நாடு தமிழ்நாடு – சீமான்

தமிழ்நாடு என்பதைவிடத் தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆளுநருக்கு ஒரு வேலையும் இல்லாததால் இப்படிப் பேசி வருகிறார். எங்கள் நாடு தமிழ்நாடு. விருப்பம் இல்லை என்றால் இங்கிருந்து வெளியேறுங்கள்” என்றார்.

* புதிய சைபர் க்ரைம் புகார்கள் – எச்சரிக்கும் டிஜிபி

தமிழ்நாட்டில் புதிதாக சைபர் க்ரைம் தொடர்பான புகார்கள் பதிவாகி வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு மக்களுக்கு எச்சரித்துள்ளார். அதில், “உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அது வேண்டுமானால் நம்பர் 1 அழுத்தவும் என வரும். அப்படிச் செய்தால் அந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளதாக அர்த்தம். உங்களை விசாரிக்க வேண்டும் எனப் பயம் காட்டி பணத்தைப் பறிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

* பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவராக சேட்டன் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேட்டன் சர்மா, தலைமையிலான தேர்வுக்குழு கடந்தாண்டு நவம்பரில் கலைக்கப்பட்டது.

இன்று பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், தேர்வுக்குழு தலைவராக சேட்டன் ஷர்மா மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

உறுப்பினர் பதவிக்கு, தெற்கு மண்டலத்தில் இருந்து எஸ்.சரத், மத்திய மண்டலத்தில் இருந்து எஸ்எஸ் தாஸ், கிழக்கு மண்டலத்தில் இருந்து சுப்ரடோ பானர்ஜி, மேற்கு மண்டலத்தில் இருந்து சலீல் அங்கோலா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த பதவிகளுக்கு 600 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் தீவிர ஆய்வுக்கு பிறகு, நேர்முக தேர்வுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் முடிவில் 5 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

* அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்: நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா 22-23
இராப்பத்து ஆறாம் திருநாள்
திருமாமனி மண்டபத்தில்  07.01.2023

இன்று நம்பெருமாள், முத்தரசன் கொறடு என்னும் ராஜ முடி சாற்றி, மார்பில் பிராட்டி பதக்கம், சந்திர கலை, மகரி, புஜ கீர்த்தி,  அடுக்கு பதக்கங்கள், தங்கப்பூண் பவள மாலை, 6 வட முத்து சரம்,  சின்ன கல் ரத்தின அபய ஹஸ்தம், பின் சேவையாக பங்குனி உத்திர பதக்கம், கெம்புக்கல் ரங்கோன் அட்டிகையில் சேவை  சாதிக்கிறார்..

* ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா.

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத கறி விருந்து திருவிழா நடந்தது.

இதில், 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

திருமங்கலம் அருகே அனுப்பபட்டியில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது.

இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.

விழாவில் பலியிடப்படும் ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்ட மாட்டார்கள்.

முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர்.

பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.

50 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.

சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர்.

இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

* கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கொரோனா வைரஸ் மற்றும் அதன் திரிபு வைரஸ்களுக்கு எதிராக நோய்யெதிர்ப்பாற்றல் எந்த வகையில் செயல்படுகிறது என்ற ஆய்வில், கோவாக்சினை விடவும் கோவீஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஒருக் கூற்றையே உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கொரோனா பாதிக்காமல், கோவிஷீல்டு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்களைக் காட்டிலும் மிக அதிகமான நோய்எதிர்ப்பாற்றலும், அதிக காலம் எதிர்ப்பாற்றல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, காலப்போக்கில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவந்த போதிலும், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில், மிக நீண்ட காலத்துக்கு ஆன்டிபாடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய சிறந்த நகரங்களின் பட்டியலில் நாட்டில் சென்னை முதலிடம் வகிப்பதாக அவதார் குழுமம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. 

பெண்களின் வேலைவாய்ப்பிற்கு உகந்த சுற்றுச்சூழலை வளர்க்கும் நகரங்களைக் கண்டுப்பிடிக்கும் இந்த ஆய்விற்காக 111 நகரங்களில் உள்ள 300 நிறுவனங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

*முதலிடத்தில் சென்னை

பெண்களின் பாதுகாப்பாக பணிபுரிய உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக புணே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டணம், கொல்கத்தா, கோவை, மதுரை ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. 

சென்னை பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான நகரமாக மட்டுமல்லாமல், அதிக அளவிலான பெண்கள் பணிபுரியும் நகரமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புணேவில் அதிக அளவிலான பெண்கள் தனியாக தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். 

* ஐடிஐ படித்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை!

TELEGRAM: t.me/agnipuratchi1

ஏர் இந்தியாவின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Handyman, Ramp Service Executive பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

பதவி – Handyman, Ramp Service Executive

காலியிடங்கள் – 50

கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ,டிப்ளமோ

சம்பளம் – 17,520-21,300

வயது வரம்பு – அதிகபட்சம் 28

பணியிடம் – லக்னோ

தேர்வுமுறை – உடல் சகிப்புத்தன்மை சோதனை

டிரேட் டெஸ்ட், டிரைவிங் டெஸ்ட்

நேர்காணல்

இணையதள முகவரி -https://www.aiasl.in/

விண்ணப்பக்கட்டணம் – All Other Candidates: Rs. 500/-

SC/ ST/ Ex-Servicemen Candidates: Nil\\

விண்ணப்பிக்கும் முறை – நேரடி நேர்காணல்

முகவரி – Community Center, Opposite New AAI building,

Chaudhari Charan Singh International Airport,

Amousi, Lucknow- 226009.
நேர்காணல் தேதி – ஜனவரி 25,2023

* திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி வருகிறது – விசிக தலைவர் திருமாவளவன்.

திரையுலகம் கார்ப்பரேட் மயமாகி வருகிறது; எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயமாக்குவது ஆபத்தானது.

அதைத் தடுக்க போராடவேண்டியுள்ளது.
ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும்?

தொழிலாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இது தொழில் போட்டி மட்டுமல்ல; தொழிலாளர்களின் உரிமையையும் பறிப்பதாகும்.

யாருக்கும் எதிராக நான் பேசவில்லை; எனக்கும் சமூகப் பொறுப்பு உள்ளது- இரும்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

* திருவள்ளுவர் தெற்கு மாவட்டம் மதுரவாயல் வடக்கு பகுதி செயற்குழு கூட்டம் (07.01.223) அன்று பகுதி செயலாளர் மேட்டுக்குப்பம் ஆர். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மதுரவாயில் 148 வட்ட செயலாளர் சீராளன் இல்லத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆலப்பாக்கம் து.சேகர், மாவட்டத் தலைவர் செம்பரம்பாக்கம் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர்.ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் எம்.சி.தேவராஜ், ஏ.கே. சூரிய பிரகாசம், டி செல்வராஜ், பசுமைத்தாயகம் மோகன் வட்ட செயலாளர் தனிகாசலம், ஏ ஜி பி ரவி, தமிழரசன், குமரன், தினேஷ் பாபு, சங்கர், அன்பு, பூங்காவனம், குமார் உள்ளிட்ட 91, 92 ,143,144,145,146,147, 148 பகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

* இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

error

Enjoy this blog? Please spread the word :)