அக்னிப்புரட்சி இன்றைய (07.11.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (07.11.2022) முக்கிய செய்திகள்.
* 5வது வந்தே பாரத் ரயில் – சோதனை ஓட்டம்.
சென்னை – மைசூரு இடையே செல்லும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சேவையை நவ.11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
* தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
* காங்கிரசை மக்கள் நம்ப மாட்டார்கள்: அமித்ஷா
இமாச்சலப் பிரதேசத்தின் காங்கரா மாவட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ”கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஊழல் செய்துவிட்டு இப்போது 10 உத்தரவாதங்களை காங்கிரஸ் அளிக்கிறது. மக்கள் காங்கிரசை நம்ப தயாராக இல்லை. இனியும் அவர்கள் ஏமாந்து போக மாட்டார்கள். பாஜக இங்கு அமோக வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.
* அவதூறு பரப்புபவர்கள் மக்களால் விரட்டபடுவார்கள்: பிரதமர்
குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “குஜராத்தில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் சக்திகள் கடந்த காலங்களில் மக்களால் விரட்டப்பட்டனர். வரும் தேர்தலிலும் அதுதான் நடக்க போகிறது. குஜராத்தில் இந்த முறை அதிக ஓட்டு வித்தியாசத்தில் பாஜக, வெற்றி பெறும் என்ற தகவல் டில்லியில் எனக்கு வருகிறது” என்றார்.
* குஜராத் பாலம் மீண்டும் கட்டப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள வான்கனேர் நகரில், டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பால விபத்து மிகவும் சோகமானது. குழந்தைகள் மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பாலம் மீண்டும் கட்டப்படும். பாஜக ஆட்சியில் விபத்துக்கு காரணமானவர்களை காப்பாற்ற முயற்சி நடக்கிறது” என்றார்.
* இங்கிலாந்துக்கு எதிரான போட்டி சவாலாக இருக்கும்: ரோகித் சர்மா
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் வரும் 10ம் தேதி மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ”இங்கிலாந்து ஒரு நல்ல அணி. ஆகவே அந்த போட்டி மிகவும் நல்ல போட்டியாக சவால் நிறைந்ததாக இருக்கும். ஜிம்பாப்பேவுக்கு எதிராக ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதையே அரை இறுதி போட்டியிலும் செய்வோம்” என்றார்.
* இனி ட்விட்டரில் த்ரட் போட தேவையில்லை – எலான் மஸ்கின் புதிய திட்டம்
ட்விட்டரில் குறிப்பிட வரிகளுக்கு மேல் எழுத முடியாது. ஒரு நீண்ட கருத்தை ட்விட்டரில் ஒருவர் தெரிவிக்க வேண்டும் என்றால், த்ரட் மூலம் ஒன்றின் கீழ் ஒன்றாகவோ, அல்லது மொபைலில் உள்ள ‘நோட் பேட்’ செயலியில் தட்டச்சு செய்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தோ மட்டுமே வெளியிட முடியும். இந்நிலையில், நீண்ட பதிவுகளை வெளியிடும் புதிய வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தப்போவதாக எலான்மஸ்க் தெரிவித்துள்ளார்.
* அமெரிக்க நாடாளுமன்ற தோ்தலில் 5 இந்திய-அமெரிக்கா்கள் போட்டியிடுகின்றனா்.
அவா்களில் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோ கன்னா, பிரமீளா ஜெயபால் ஆகியோா் ஏற்கெனவே அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ளனா். ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த அவா்கள் தற்போதைய தோ்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனா். அவா்களுடன் தொழிலதிபரான ஸ்ரீ தனேதரும் தோ்தலில் போட்டியிடுகிறாா்
* அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் – நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பதிவு
🔴 பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10% சதவீத இடதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
உச்சநீதிமன்ற தீர்ப்பால்
பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உறுதியானது
உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழக்கும் 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.
103 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் – உச்ச நீதிமன்றம்.
103 ஆவது அரசியல் சீர்திருத்த திட்டம் EWS என்ற தனி வகுப்பை உருவாக்குகிறது.
50 % மேல் இடஒதுக்கீடு கூடாது என்ற அடிப்படை உரிமையை இந்த ஒதுக்கீடு மீறவில்லை – நீதிபதி திரிவேதி.
10% இடஒதுக்கீடு: 3 நீதிபதிகள் ஆதரவு, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு.
இடஒதுக்கீடு 50% மீற அனுமதிப்பது என்பது மேலும் மீறல்களுக்கு வழிவகுக்கும்-நீதிபதி ரவீந்திர பட் எதிர்ப்பு.
முன்னேற்றம் அடைந்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது காலவரையறை இல்லாமல் தொடரக்கூடாது- உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா.
இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது – நீதிபதி தினேஷ் மகேஸ்வரி.
உள்நோக்கங்கள் கொண்ட காரணியாக இடஒதுக்கீட்டு கொள்கை மாறக்கூடாது-நீதிபதி பீலா திரிவேதி கருத்து.
* போக்குவரத்து விதிமீறல் அபராதம் – வழக்கு
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக வழக்கு
மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அபராதம் அதிகரிப்பால் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகளுக்கு கடும் பாதிப்பு – மனு
* 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு.
சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10%இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்பை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
* கூட்டணிக்கு தயார் – டிடிவி தினகரன்
திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
* காபி மட்டுமே சாப்பிட்டு 9 நாள் வாழ்ந்தாங்களா..!
தென் கொரியாவில் சிங்க் மைன் உடைப்பின் போது பாதாள குகையில் சிக்கிய ஊழியர்கள் 9 நாட்கள் கழித்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
56, 62 வயதுடைய 2 பேர் 190 அடி ஆழ குகையில் சிக்கியுள்ளனர். தொடர்ந்து, சீலிங்கில் கசிந்த நீருடன், கையில் இருந்த காபி தூளை கலந்து உண்டு 9 நாட்கள் வாழ்ந்துள்ளனர்.
இவர்கள் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், மீட்பு பணி மிரட்டலாக இருந்ததாக ஊழியர்கள் கூறினர்.
* கோட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்பாட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
தங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும் ஆரணி ஆற்றின் கரைகளை ஒட்டி பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பதாகவும் தங்களது வீடுகளை அகற்றக்கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர்.
* 2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை:
➤ 10ம் வகுப்பு – 06.04.23 முதல் 20.04.23 வரை
➤ 11ம் வகுப்பு – 14.03.23 முதல் 05.04.23 வரை
➤ 12ம் வகுப்பு – 13.03.23 முதல் 03.04.23 வரை நடைபெறுகிறது
* எந்த அடக்குமுறைகளையும் அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் என கூறி 10%இடஒதுக்கீடு வழங்குவதும்,அதை உச்சநீதிமன்றம் ஏற்பதும் சமூகநீதி மீதான தாக்குதல்- பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கண்டனம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்புக்கு பாமக நிறுவனர் இராமதாசு அய்யா கருத்து
* உச்சநீதிமன்ற தீர்ப்பு உச்சபட்ச அநீதி, சமூகநீதி மேல் விழுந்த பேரிடி.
உச்சநீதிமன்றத்தில் 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என விசிக சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்-விசிக தலைவர் திருமாவளவன்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து
* உச்சநீதிமன்றத்தில் சரித்திர தீர்ப்பு வந்துள்ளது; யாருக்கும் எங்கேயும் இதனால் பாதிப்பு இல்லை.
அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பலருக்கு இது உதவும்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
பிரதமர் மோடி கொண்டுவந்த இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு உறுதி என்ற தீர்ப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு.
* விதிமீறல்கள் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம்-சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
சென்னை கோட்டூர்புரத்தில் விதிகளை மீறிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயபாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் கருத்து.
* டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்களில் 90% பேரை வீட்டுக்கு அனுப்பும் எலான் மஸ்க்
ஃபேஸ்புக் நிறுவனமும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
* பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது-காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
2005-06 ஆண்டில் மன்மோகன் சிங் அரசு தான் இதற்கான முன்னெடுப்பை எடுத்தது.
சின்ஹோ ஆணையம் இது தொடர்பான அறிக்கை 2010ல் சமர்பித்தது; 2014ல் மசோதா தயாரானது- காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
* மும்பை: 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.
* SSCயின் புதிய அறிவிப்பு.. மத்திய துணை ராணுவ படையில் 24,369 காலி பணியிடங்கள்.
மத்திய துணை ராணுவ படையில் காலியாக உள்ள காவலர்கள் பணயிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது
நிறுவனம்: Central Reserve Police Force
காலி பணியிடங்கள்:24,369
பணியின் பெயர்: constable
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 – 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி இருந்தால் கூடுதல் சிறப்பு.
உடற்தகுதி:
குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
ஆண்கள்: உயரம் – குறைந்த பட்சம் 170 செ.மீ, மார்பளவு – 80 செ.மீ,
பெண்கள்: உயரம் – குறைந்தபட்சம் 157 செ.மீ . 1.6 கிமீ தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக நிலை 3 யின் படி ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/Agnipuratchi1
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்த தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை , புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
* மங்களூருவில் நம்பர் பிளேட் இல்லாத கார் மோதி ஓய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரி மரணம் அடைந்தார்
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மத்திய புலனாய்வுப் பிரிவில் உதவி இயக்குநராக இருந்தவர் ஆர்.எஸ்.குல்கர்னி (83). ஓய்வு பெற்ற பிறகு, மைசூரு அடுத்த மானசா கங்கோத்ரியில் வசித்து வந்தார். நேற்று காலை அவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது, நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று குல்கர்னி மீது மோதி விட்டு வேகமாக செல்வது பதிவாகி இருந்தது. இதனால், குர்கனி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிசேக அலங்காரத்தில் காட்சி தரும் சிவபெருமான்.
