Home » அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2023) முக்கிய செய்திகள்.

* பரபரப்பான அரசியல் சூழலில் ஏனாம் தொகுதிக்கு புறப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தொகுதிக்குள் முதல்வரை நுழையவிடமாட்டோம் என எம்.எல்.ஏ. கூறியிருந்ததால், ஏனாம் மற்றும் ஆந்திர எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

* ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நாள் உயிரோடு இருக்கமாட்டார்? .. ரகசியத்தை உடைத்த உக்ரைன் உளவுத்துறை அதிகாரி!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களைக் கடந்து இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போரை நிறுத்த பல முறை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யாப் போர் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கிரிலோ புடானோவ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

இது குறித்துப் பேசிய கிரிலோ புடானோவ், ” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டார். இந்த தகவல் எங்களுக்கு புதினுடன் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவிவந்த நிலையில் உக்ரைன் உளவுத்துறைத் தலைவரின் இந்த செய்தி உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* சென்னையில் இன்னும் 8 நாட்களுக்கு இரவில் குளிர் நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்னும் 8 நாட்களுக்கு இரவில் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த  2 தினங்களாக  சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு  எந்த அளவிற்கு குளிர் நிலவுகிறது என்றால், குளிரினால் மாரடைப்பு , ரத்த அழுத்தம் அதிகரிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.  

இந்த நிலையில் சென்னையில் ஜனவரி பாதி வரை அதாவது 15-ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் மழை முடிவுக்கு வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24-25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஜனவரி மாதத்தின் மத்தியில்  இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை நகர தொடங்கும் என்றும், இது இரவு வெப்ப நிலையை குறைக்கலாம். அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழையை எதிர் பார்க்கலாம் என்றும் அதன் பிறகு வறண்ட வானிலை இருக்கலாம்  எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

TELEGRAM: t.me/agnipuratchi1

* பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது: நிதி ஆயோக் தரப்பில் விளக்கம்!..

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த போலியானது என நிதி ஆயோக் கூறியுள்ளது.

இதுதொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் தகவல் வெளியிட்டிருப்பதாக ஒரு போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த ஒரு பட்டியலையும் நிதி ஆயோக் எந்த வடிவத்திலும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* சாதி உணர்வை வளர்ப்பதை தவிருங்கள்: பொன்முடி

கல்லூரிகளில் ஆசிரியர்கள் சிலர் சாதிய உணர்வை வளர்ப்பதாகவும், சாதிய பாகுபாடு இருப்பதாகவும் தனக்கு பெரும்பாலான புகார்கள் வருவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள், மாணவர்களிடையே சாதி வெறியை ஊட்டி சண்டையை வளர்க்கக்கூடாது.

அவற்றை எல்லாம் சரி செய்து நாம் தமிழர்கள், நாம் மனிதர்கள் என்ற எண்ணம் வளர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

* உழைக்காமல் யாருக்கும் எந்த பொறுப்பும் கிடைக்காது

சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகியிருக்கும் என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்க தலைவர்களின் வரலாறு முழுமையாக கிடைத்திருந்தால், பல அரிய தகவல்கள் மக்களுக்கு கிடைத்திருக்கும். இந்த கட்சியில் உழைக்காமல் யாரும் எந்த பொறுப்புக்கும் வந்துவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

* சீனாவில் விபத்து: 17 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஜியாங்ஸி மாகாணம் நாஞ்சாங் கவுன்ட்டி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 22 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதில் சிலரின் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

TELEGRAM: t.me/agnipuratchi1

* திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் வாடகை உயர்வு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்க வசதியாக திருமலையில் 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

இந்நிலையில், கவுஸ்தபம், நந்தகம், பாஞ்ச ஜன்யம், வகுலமாதா தங்கும் அறைகள் வாடகை ₹600-ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாராயணகிரி தங்கும் விடுதிகளில் ₹150-ல் இருந்து ₹750

கார்னர் சூட் வாடகை ₹2,200
ஸ்பெஷல் டைப் காட்டேஜ் வகைகள் ₹750-ல் இருந்து ₹2,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

* கிருஷ்ணகிரி: கர்நாடக அரசுப் பேருந்து – இருசக்கர வாகனம் மோதி விபத்து

இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
விபத்தில் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்த கர்நாடக அரசுப் பேருந்து

* எங்களுக்கும் உதவித்தொகை வேண்டும்:

தெலங்கானா: வழுக்கை தலை உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, தங்களுக்கு உதவித்தொகையாக ₹ 6000 வழங்குமாறு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவிடம் கோரிக்கை வைத்த வினோதம்.

தங்களையும் மாற்றுத்திறனாளிகளாக கருதி உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், வழுக்கையாக இருப்பதால், சமுதாயத்தில் பல இன்னல்களுக்கு ஆளாவதாகவும், திருமணம் நடப்பதிலும் சிக்கல் உள்ளதாகவும் வேதனை.

* புதுக்கோட்டை: ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது; 500 காளைகள், 235 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

மேளதாளங்கள் முழங்க காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; ஆட்சியர் கவிதா ராமு, உறுதிமொழி வாசிக்க, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

* டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களுக்கு, குளிர் அலை மற்றும் மோசமான மூடு பனி காரணமாக ரெட் அலர்ட் விடுத்ததுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* நாசா அனுப்பிய செயற்கைக்கோள் கீழே விழுகிறது.

38 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1984-ல் பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய அமெரிக்கா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது.

2450 கிலோ எடையுள்ள காலாவதியான செயற்கைக்கோள், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவில் பூமியை நோக்கி விழும் என நாசா தகவல்.

சுற்றுப்பாதையில் இறங்கி புவியீர்ப்பு விசைப் பகுதிக்குள் நுழைந்த உடனே, செயற்கைக்கோள் தீப்பிடித்து எரிந்துவிடும்.

எனினும் எரியாத சில பகுதிகள் மட்டும் பூமியில் வந்து விழும் என நாசா விளக்கம்.

* ‘மார்ச் 5ல் உண்ணாவிரத போராட்டம்- ஜாக்டோ ஜியோ’

பிப்.12ஆம் தேதி ஆயத்த மாநாடு; மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்; மார்ச் 24ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் – ஜாக்டோ ஜியோ.

error

Enjoy this blog? Please spread the word :)