Home » அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (08.11.2022) முக்கிய செய்திகள்.

* தமிழக ஆளுநர், அவரின் கடமையை செய்து கொண்டு இருக்கிறார் – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஆளுநர் தேவையில்லை என சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என ஓபிஎஸ் ஆவேசம்.

* நடுக்கடலில் 317 அகதிகளுடன் தத்தளித்த படகு

குழந்தைகள், முதியவர்கள் என 317 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது.

அகதிகளை அழைத்துச் சென்றவர் கடலில் குதித்து தப்பிச் சென்றுவிட்டார்.
உதவிக்கோரி படகில் இருந்தவர்கள் இலங்கை அரசுக்கு தகவல் அனுப்பினர்.

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று உடனடியாக களத்தில் இறங்கியது வியட்நாம் கடற்படை. படகில் தத்தளித்தவர்களை வியட்நாம் காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது.

* முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி!”

“வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் மீதானப் பேரிடி!” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

* அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் – சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது

* கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழந்தது. மசாலா வியாபாரியை கடித்து குதறிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் காட்டில் விடப்பட்ட கரடி உயிரிழந்ததாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

* பொள்ளாச்சி அருகே எலிக்காய்ச்சல்! கர்ப்பிணிப் பெண் பலி

கோவை: எலிக் காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள பணிக்கம்பட்டி பகுதியில் 23 வயதான வனிதா என்ற இளம்பெண் வசித்து வந்தார். ஐந்து மாத கர்ப்பிணியான வனிதாவுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வனிதா கோவை பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் ஓரளவு சரியான நிலையில் வீடு திரும்பிய வனிதா தீபாவளி பண்டிக்கைக்காக அன்னூர் சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 31-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதாவுக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததோடு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் பல்வேறு சோதனைகள் மேற்கொண்டதில் நோயை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வனிதாவுக்கு எலிக் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டதில் லெப்டோஸ் பைரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்தார்.

இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அதிகாரிகள் பணிக்கம்பட்டி மற்றும் அன்னூர் ஆகிய இடங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

எலி காய்ச்சலுக்கு ஐந்து மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,758-க்கு விற்பனை.

* தமிழ்நாட்டில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும்.

* தமிழகத்திற்கு தனிக் கல்வி திட்டம் அமைக்கப்படும்.
– அமைச்சர் பொன்முடி

* திமுக இல்லையென்றால் தமிழ்நாடு மீண்டும் காட்டுமிராண்டிகளின் வசம் போய்விடும். – அமைச்சர் துரைமுருகன்

* காங்கிரஸ், கம்யூனிஸ்டை என்ன செய்வார் ஸ்டாலின்? – பாஜக கேள்வி

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டின் சட்டத்தை உறுதி செய்து வெளிவந்துள்ள உச்சநீதி மன்ற தீர்ப்பு சமூக நீதிக்கான நூற்றாண்டு கால் போராட்டத்தில் பெரும் பின்னடைவு என்று கூறுகிறார் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எனும் சமூக அநீதியை எதிர்த்து போராட முன்வர வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.

ஆனால், இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், 2005-06ல் , தங்களின் ஆட்சியில் அமைக்கப்பட்ட மேஜர் சின்ஹோ குழுவானது 2010ம் ஆண்டு அளித்த பரிந்துரையின் அடிப்பைடையில் தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது என்றும், இன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பை காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக வரவேற்பதாகவும் காங்கிரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையாக ஆதரித்ததோடு, கேரளாவில் அதை அமல்படுத்தியும் உள்ளது. அதே போன்று தி மு க வின் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்திய மஹாராஷ்டிராவிலும் இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், திரு.மு,க.ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளை கண்டிப்பாரா? கொள்கையே பெரிது, சமூக அநீதியை காங்கிரஸும், கம்யூனிடுகளும்அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன என்று பொங்கி எழுவாரா ஸ்டாலின் அவர்கள்? இனி ஓட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அவ்விரு கட்சிகளையும் கூட்டணியிலிருந்து உதறித் தள்ளும் தைரியம் உள்ளதா மு க ஸ்டாலின் அவர்களுக்கு?

TELEGRAM: t.me/Agnipuratchi1

மேலும், 2005-06ல் மேஜர் சின்ஹோ குழுவிற்கு அனுமதி வழங்கி அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு அளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் அன்றைய தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு முக்கிய பங்காற்றியதற்காக மன்னிப்பு கேட்பாரா ஸ்டாலின் அவர்கள்? மத்தியில் ஆட்சியில் இருந்த போது காற்றில் பறக்க விட்ட சமூக நீதியை இப்போது கட்டிக்காப்பற்ற முயல்வது போல் நடிக்கிறோம் என்று ஒப்பு கொள்வாரா தி மு க தலைவர் அவர்கள்? மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து காங்கிரசோடு இணைந்து துரோகமிழைத்து விட்டோம் என்று ஏற்றுக்கொள்வாரா சமூக நீதிக்காக பாடுபடுவதாக பறை சாற்றிக்கொள்ளும் தமிழக முதல்வர்?

– நாராயணன் திருப்பதி, பாஜக

* சென்னை: ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார். உயர் கல்வியிலும், தொழிற்திறனிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி காண முடியும் என முதல்வர் கூறினார். திறன்மிகு மையங்களை தொழிற்துறையினர் பயன்படுத்திக்கொள்ளவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

* பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அத்வானி இல்லத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

* பாஜக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “பாஜக ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகள் உலக பணக்காரர்கள் என்ற நிலைக்கு உயர்கின்றனர். சாதாரண ஏழை மக்களை ஏமாற்றி முதலாளிகளை வளர்க்கும் பாஜக அரசுக்கு 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்” என கூறியுள்ளார்.

* இன்றுடன் ஒய்வு பெறுகிறார் நீதிபதி யு.யு.லலித்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 74 நாட்கள் பதவி வகித்த நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.

இவரது பதவிகாலத்தில் 10,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதுடன், 6 அரசியல் சாசன அமைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

* சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பல ஹோட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கை சாத்தியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.

* சென்னை: தரமணியில் உள்ள டைடல் பூங்காவில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்.
15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது.

உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உயர்கல்வியிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

நாட்டிலேயே முதல் திறன்மிகு மையம், தரமணியில் திறப்பு.

மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும்.

கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான விமானிகளாக உலகை வலம்வர இயலும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதலாக பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை – உழவர் நலத்துறையில் 1145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

தற்போது பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 28 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மழைநீரால் சூழப்பட்டிருப்பதாகவும், மழைநீர் வடிந்த பிறகு பாதிப்பை கணக்கிட அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

கடந்த ஆண்டு 2 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ள நிலையில் நடப்பாண்டு ஐந்து லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு உற்பத்தியை பொறுத்தவரையில் மக்களின் முடிவே அரசின் முடிவு.

உயர்ந்து வரும் சின்ன வெங்காயம் விலையை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

* அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நவ.9 முதல் நவ.11 வரை வட மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக நவ.10 முதல் 12 வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன்.

* 5000 ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை.

எங்களை போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என கூறுவது சமூகநீதியாகாது.

சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கு பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல.

10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது- காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.

* 10% இட ஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நவம்பர் 12ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்.

ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு – தமிழக அரசு.

* வானில் இன்று நிகழும் முழு சந்திரகிரகணம்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முழுமையாக தென்படும்.

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தென்படும் பகுதியளவு சந்திரகிரகணம்; வெறும் கண்களால் பார்க்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல்.

இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணிக்கு தொடங்கியது

முழு கிரகணத்தின் முடிவு நேரம் – 5.12 மணி, பகுதி வடிவ நிலைகளின் முடிவு நேரம் – 6.19 மணி தெரியும்

* சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி.

நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என செட்டப் உடன் இயங்கியுள்ளது.

சுமார் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இந்த வங்கியில் உள்ளனர்.
ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலியான வங்கியை நடத்துவது பற்றி தெரிந்தது.

போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளோம்-சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால்.

மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில் போலி வங்கிகள் செயல்பட்டன. 56 லட்சம் ரூபாய் பணத்தை முடக்கி உள்ளோம் – 46 பேர் கைது.

ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டை வாங்கி, போலியான வங்கியின் டெபிட் கார்டாக கொடுத்துள்ளனர்- காவல் ஆணையர் சங்கர்ஜிவால்.

* பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை- அமைச்சர் துரைமுருகன்.

82% பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட, அரசியல்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட மறுசீராய்வு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் துரைமுருகன்.

* ஆப்பிரிக்கா: ஈக்வடோரியல் கினியா நாட்டு கடற்படையால் சரக்கு கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் உணவு, தண்ணீரின்றி தவிப்பு;

3 தமிழர்கள் உட்பட 16 பேர் 2 மாதங்களாக சிறை. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

* காவல்துறைக்கு சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பயன்படுத்தாமல் வைத்திருக்க போலீசார் கையில் லத்தி கொடுக்கப்படவில்லை

காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் – அண்ணாமலை

* அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை

அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது – முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்

* 15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது;
உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது.

கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5,529 பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

* “கல்வி – மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது“

குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது. தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ. எழிலன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு

குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது – தமிழக அரசு

* 2022 டிசம்பர் 1 முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ள இந்தியா: 7 இதழ் தாமரை கொண்ட லோகோவை வெளியிட்ட பிரதமர் மோடி!

டெல்லி: 2022 டிசம்பர் 1 முதல் ஜி20- கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. பிரதமர் மோடி அதற்கான லோகோ வெளியிட்டார். நாடு முழுவதும் பல இடங்களில் வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்த உள்ளது. ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது வரலாற்று தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகை ஒன்றிணைத்து கொண்டு வரும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை லோகோவில் உள்ள தாமரை குறிக்கிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, தென் கொரியா, பிரேசில், அர்ஜெண்டினா, மெக்சிகோ ஆகிய நாடுகள் ஜி20 கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளது. இந்தியா முதன் முதலாக ஜி20 மாநாட்டில் 1999-ம் ஆண்டு உறுப்பினராக ஆனது. 2014 – ம் ஆண்டு முதல் இந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு ஜி20 மாநாடு இத்தாலியில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜி20-யின் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.

TELEGRAM: t.me/Agnipuratchi1

அதையோட்டி 2022 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி20-யின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. அதன் அடிப்படையில் ஜி20-யின் தலைமை பொறுப்புக்கான லோகோ மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்த லோகோ என்பது ஒரு தாமரை மலர்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இது குறித்து பேசிய போது இந்த உலகம் எத்தனையோ சவால்களுக்கு மத்தியிலும், கொரோனா பெருந்தொற்று போன்ற இடர்பாடுகள் மத்தியிலும் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

சூழல் மோசமானதாக இருந்தாலும் ஒரு நம்பிக்கையை வெளிபடுத்தும் விதமாக லோகோவில் தாமரை இதழ்கள் அமைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை இந்தியா தலைமை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

* வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:

12.11.2022 சனிக்கிழமை
13.11.2022 ஞாயிற்றுக்கிழமை
26.11.2022 சனிக்கிழமை
27.11.2022 ஞாயிற்றுக்கிழமை

ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

* சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம்” – ஸ்டோக்ஸ்

IND – ENG விளையாடும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2ம் அரையிறுதிப் போட்டி வரும் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், “பிரமாதமாக ஆடி வரும் சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம். இந்தியாவுக்கு ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். அவர் ஃபார்மில் இல்லை என்பதால் குறைத்து மதிப்பிட முடியாது” என்று ENG வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

* நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது

உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல்தான் இருக்கிறேன்”- நடிகை சமந்தா

* சோழ மன்னர்களின் கடற்படையில் தொடங்கி, இன்று HAL போர் விமானம் வரை பாதுகாப்பு உற்பத்திச் சூழல் அமைப்பில் தமிழ்நாடு எப்போதுமே முன்னணி மாநிலம்தான்”

– தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

error

Enjoy this blog? Please spread the word :)