Home » அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2023) முக்கிய செய்திகள்.

* பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்.

காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
நாளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட உள்ளது.

* சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

* அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்.

அரக்கோணம் – சென்னை செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பு.

* திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்:

ஜன. 12 – பிப். 28 வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடக்கம்.

www.tirupatibalaji.gov.in இணையதளம் மூலம் பக்தர்கள் ரூ.300 மதிப்பிலான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

* தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் சித்த மருத்துவ ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ முறை ஆணையர் நோட்டீஸ்.

கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் நோட்டீஸ்
புகாரின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு.

* மீன்வளப் பல்கலையில் ரூ.40ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Technician, Assistant Professor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் – டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

பதவி – Lab Technician, Assistant Professor

காலியிடங்கள் – 04

கல்வித்தகுதி – BE/ B.Tech, ME/ M.Tech

சம்பளம் – ரூ.15,000- 40,000

வயது வரம்பு – 35

பணியிடம் – நாகப்பட்டினம்

தேர்வு முறை – ஆன்லைன் நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம் – இல்லை

விண்ணப்பிக்கும் முறை – இமெயில்

இமெயில் முகவரி – deancofe@tnfu.in

கடைசி தேதி – 20ஜனவரி,2023

TELEGRAM: t.me/agnipuratchi1

* பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தீவுத்திடல் அன்னை சத்யா ரேசன் கடையில் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மஞ்சள் பையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2023:

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்;சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முழக்கம்.

சட்டப்பேரவையில் தன்னுடைய உரையுடன் ஆளுநர் தொடங்கும் போது, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ஆளுநரை கண்டிக்கிறோம்’ என திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கம்.

ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, த.வா.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

🔴 திடீரென பயங்கர வன்முறை!

நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகைக்குள் புகுந்த வன்முறையாளர்கள்…

Watch: https://youtu.be/bnAInwVJ578

கட்டடங்கள், அலுவலகங்கள் சூறை! – மக்கள் கொந்தளிப்பு

* தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் –  ஆளுநரின் 50 நிமிட உரை நிறைவு; தமிழில் உரையை தொடங்கி தமிழிலேயே நிறைவு செய்தார் ஆளுநர்:

மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது – ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் உரை

தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது

சர்வதேச அளவிலான செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு பிரமாண்டமாக நடத்தியது

விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் நடக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சருக்கு பாராட்டு

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளை தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு பாதுகாத்து வருகிறது

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன

பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது

மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது

கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது

“வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்” என தனது உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை, சபாநாயகர் அப்பாவு தமிழில் கூறி வருகிறார்

தமிழக அரசு தயாரித்த உரையில் ’திராவிட மாடல்’  என்ற வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்.

‘அமைதி பூங்கா தமிழ்நாடு’ என்ற வாக்கியத்தையும் உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துள்ளார்

சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்ற ஆளுநர்

அரசின் உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு.

ஆளுநர் உரையை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்

ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க தீர்மானம்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் நேருக்கு நேர் கண்டனம் – பாதியில் வெளியேறிய ஆளுநர்

“ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம்”

“எங்கள் கொள்கைக்கு மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே மாறாக ஆளுநர் நடந்து கொண்டார்”

அரசின் உரையை முழுமையாக படிக்காதது சட்டமன்ற மரபை மீறிய ஒன்று – முதல்வர் ஸ்டாலின்

* 13ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்:

“நாளை, மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்”

11, 12ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு.

* வரும் 13ம் தேதி விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி போராட்டம் – விசிக திருமாவளவன் அறிவிப்பு

* திமுக நினைப்பதை ஆளுநர் பேச வேண்டுமா?’

திமுக அரசு ஒரு கேவலமான நாடகத்தை இன்று அரங்கேற்றியுள்ளது; திமுக அதன் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டுள்ளது.

திமுக நினைப்பதை ஆளுநர் பேசவில்லை என்பதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கூப்பிட்டு அசிங்கப்படுத்துறீங்களா?; இதுதான் ஜனநாயகமா? – பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்

* அவை மரபுகளையும் நாகரிகத்தையும் மதிக்காத ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா கண்டனம்.

ஆளுனர் உரையின் போது அவையில் நடந்த நிகழ்வுகள் வருத்தம் அளிக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில சொற்களையும், இரு பத்திகளையும்  ஆளுனர் புறக்கணித்திருக்கிறார். அவரால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட உரையையே ஆளுனர் முழுமையாக படிக்காததும் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது.

அதேபோல், அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்து படிக்கும் போது, அவை மரபுகளுக்கு மாறாக, ஆளுனர் வெளியேறியதும் சட்டப்பேரவை மரபுகள் மற்றும் நாகரிகத்துக்கு எதிரானது ஆகும். சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை  தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!

* அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முறையாக படிக்காததற்கு பா.ம.க.தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவையையும் ஆளுநர் அவமதித்துவிட்டதாக அவர் கூறினார்.

* சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட தகராறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.

வழக்கறிஞர் சங்கத்தேர்தலில் சுமார் 4,760 வழக்கறிஞர்கள் வாக்களிக்க இருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை நடத்த தேர்தல் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீரை நியமித்திருந்தது.  

* அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மாநிலத்தை விட்டும் வெளியேற வேண்டும் என  கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட முழக்கம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் நடைபெறுகின்றன.

இதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி துவங்கி, 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத் துறை பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தலா 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள்.

இவர்களில் செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கம் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக் கூடும் எனவும், பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது எனக் கூறி, வேலை நிறுத்ததுக்கு தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

* திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி ராபத்து விழாவின் 8ஆம் நாள் திருவிழா: தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டுருளி வருகிறார் நம்பெருமாள்.

error

Enjoy this blog? Please spread the word :)