அக்னிப்புரட்சி இன்றைய (10.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (10.01.2023) முக்கிய செய்திகள்.
* இந்தோனோஷியாவில் இன்று (ஜன.10) நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனோஷியவின் டானிமர் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
* நீலகிரி : உதகையில் நிலவும் உறைபனியால் கடும் குளிர்- குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் தொட்டது
புல்வெளிகள், மரம், செடி, கொடிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்து கிடக்கும் பனிக்கட்டிகள்
* வழக்கமாக ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராகும் என்று கூறப்படுகிறது
* புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லுமா? செல்லாதா?
புதிய ரூபாய் நோட்டில் எதாவது எழுதினால், அந்த பணம் செல்லாது என RBI அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது.
இதையடுத்து இது குறித்து பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது உண்மை கிடையாது. RBI எந்த ஒரு புதிய விதிமுறைகளை வெளியிடவில்லை.
இருப்பினும் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால், அதன் ஆயுள் குறையும் என்பதால், எழுத வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* வாட்ஸ் ஆப்பை மிஞ்சும் டெலிகிராம்: புதிய வசதிகள் அறிமுகம்!
டெலிகிராம் செயலி அப்டேட் மூலம் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஸ்பாய்லர் எபெக்ட் உடனான (spoiler effect) ஹிட்டன் மீடியா, ஜீரோ ஸ்டோரேஜ், நியூ டிராயிங் & டெக்ஸ்ட் டூல் ஆகிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டெலிகிராம் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது.
இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயலியின் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி செயலியாக டெலிகிராம் விளங்குகிறது. அந்தவகையில் தற்போதைய அப்டேட்டில் 3 புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஹிட்டன் மீடியா (Hidden media)
ஹிட்டன் மீடியா என்ற அம்சத்தின் மூலம் புகைப்படம் அல்லது விடியோவை பயனர்கள் மறைத்துக்கொள்ளலாம். ஒரு மெல்லிய திரை போன்று கோப்புகள் மறைக்கப்படும்.
முன்னதாக, ஸ்பாய்லர் அம்சம் என்பது குறுஞ்செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
டெலிகிராமில் அட்டாச்மென்ட் தேர்வு செய்து தேவையான கோப்புகளை (படம் / விடியோ) தேர்வு செய்த பின், மேல்- வலது மூலையிலுள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி ஹைட் வித் ஸ்பாய்லர் (Hide with Spoiler) ஆபஷனை பெற முடியும்.
TELEGRAM: t.me/agnipuratchi1
ஜீரோ ஸ்டோரேஜ்
ஜீரோ ஸ்டோரேஜ் தேர்வு மூலம், கைப்பேசியிலிருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் அல்லது விடியோக்களை டெலிகிராம் மூலம் நாம் மீண்டும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மேலும், புதிய விளக்கப் படம் ஒன்றையும் இந்த தேர்வு மூலம் பெறலாம். அதில் கைபேசியிலுள்ள நினைவகம், அதில் புகைப்படங்கள், விடியோக்கள், கோப்புகள் என வகைப்படுத்தப்பட்ட நினைவகத்தைக் காட்டும். அதன் மூலம் நாம் நீக்க வேண்டியவற்றை நீக்கலாம்.
நியூ டிராயிங் & டெக்ஸ்ட் டூல்
நியூ டிராயிங் & டெக்ஸ்ட் டூல் அமசத்தின் மூலம் பயனர்கள் தங்கள் செயலியில், மற்றவர்களுக்கு அனுப்பும் போட்டோ அல்லது விடியோக்களின் மீது எழுத்துகளை சேர்க்கும் போது, உள்ளடக்கத்தின் அளவு (size), எழுத்துரு (font type) வகை, பின்புலம் (background) போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
இவை மட்டுமில்லாமல், பிரீமியம் டெலிகிராம் பயனர்கள் 10 புதிய அனிமேஷன் எமோஜிகளை இந்த அப்டேட்டுடன் பெறலாம் எனவும் டெலிகிராம் அறிவித்துள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவுடன் இருப்பதால், பிரேமலதாவிற்கு ‘செயல் தலைவர்’ என்ற பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல்.
* வரும் 12ஆம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
அழைப்பிதழில் தமிழக ஆளுநர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
* துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை
படத்தயாரிப்பு நிறுவனங்கள் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அ.சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.
மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி.
மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக்குறிப்பு வாசிக்கப்பட்டு, அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.41,896க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.5,237க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குளிா்கால பருவ பயிா்களுக்கான இழப்பீடு வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்டத்ததை சோ்ந்த 5 விவசாயிகளுக்கு சென்னையில் இழப்பீடு தொகை வழங்கினாா்.
* வரும் 13, 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு அதிகாலை 1, காலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை – தமிழ்நாடு அரசு.
13, 14, 15, 16ஆம் தேதிகளில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து
* தியேட்டர் வளாகங்களில் அதிக உயரத்தில் பேனர், பாலாபிஷேகம் செய்ய தடை
விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு
* ஒன்றிய அரசு – ஆளுநர் ரவி விளக்கம்
ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை; ஆனால், அதை அரசியலாக்கும் போது தான் பிரச்னை ஆகிறது.
ஒன்றிய அரசு என அழைத்து அவமதிக்கும் போது தான் அது பிரச்னையை ஏற்படுத்துகிறது.
ஒன்றிய அரசு என்ற பிரச்னை பற்றி தமிழ்நாட்டை தாண்டி யாருக்கும் தெரியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி.
* 12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன – சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது.
நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக் கூடும்.
* கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி
எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும்
கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை திறக்க கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
9ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் துவங்கிய பின் பள்ளியில் சுமூகமான நிலைமை நிலவுகிறது – மாவட்ட ஆட்சியர்
* அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது
ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் – இ.பி.எஸ். தரப்பு வாதம்
ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல, மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.
இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
எனவேதான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால் தான்- இ.பி.எஸ். தரப்பு வாதம்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு
பொதுக்குழுவுக்கு கட்சியின் விதிகளை கட்டமைக்கவும், அமல்படுத்தவும் முழு அதிகாரம் உண்டு;
அப்படி இருக்கும்போது ஓ.பி.எஸ் தரப்பு அடிப்படை உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்று ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் ?
ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் பங்கேற்ற 2,460 உறுப்பினர்கள் கலந்தகொண்டு பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக அங்கீகரித்தனர், இது 94.5% ஆதரவு ஆகும்-இ.பி.எஸ். தரப்பு வாதம்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை தள்ளி வைத்தது.
* திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணைக்கொடை உயர்வு.
அறநிலையத்துறை கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 34%-லிருந்து 38%-ஆக உயர்வு.
அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் ₹ 2000ஆக வழங்கப்பட்ட பொங்கல் கருணைக்கொடை இந்தாண்டு ₹ 3000 உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு.
ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் அரங்கேறி வரும் நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்: நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி
பெருவிழா 22-23 இராப்பத்து ஒன்பதாம் திருநாள் ஆயிரம் கால் திருமாமனி மண்டபத்தில் 10.01.2023
இன்று திருக்கண்ணபுரம் பாசுரத்திற்கு ஏற்க, நம்பெருமாள் சௌரிக்கொண்டை சாற்றி, அதில் சந்திர கலை பதக்கம், நாச்சியார் பதக்கம், நெற்றி சரம் , மார்பில் முத்துங்கி கபாய், பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் பிராட்டி பதக்கம், மகரி, அடுக்கு பதக்கங்கள், தங்கப்பூண் பவள மாலை, 8 வட முத்து சரம், ரத்தின அபய ஹஸ்தம்; பின் சேவையாக முத்தங்கி சாற்றி சேவை சாதிக்கிறார்…..
* இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 373 ரன்கள் குவிப்பு.
விராட் கோலி 113. ரோஹித் சர்மா 83, சுப்மன் கில் 70 ரன்கள் எடுத்தனர்.
374 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இலங்கைக்கு எதிரான இன்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 45வது சதத்தை பூர்த்தி செய்தார் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 49 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சர்வதேச ஒரு நாள் தொடர்களில், இந்திய மண்ணில் 20 சதங்கள் அடித்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை சமன் செய்தார் கோலி.
* முதல் ஒருநாள் – இந்தியா அபாரம்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.
374 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 306 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113, ரோகித் சர்மா 83, சுப்மன் கில் 70 ரன்கள் விளாசி அசத்தல்.
* ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா அரசு தடை.
இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிப்பு.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா குற்றச்சாட்டு.
கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துகளும் முடக்கப்படும் எனவும் அறிவிப்பு.
* ஆளுநரை மாற்றக்கோரி முறையீடு:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரி குடியரசு தலைவரிடம் நேரில் முறையிட திமுக எம்பி க்கள் முடிவு.
குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து இன்னும் நேரம் ஒதுக்கப்பட வில்லை எனத் தகவல்.
