Home » அக்னிப்புரட்சி இன்றைய (11.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (11.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (11.01.2023) முக்கிய செய்திகள்.

* பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது.

பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி –  தா மோ அன்பரசன்

சென்னையை அடுத்த படப்பையில்  மார்ச் 5ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது

* சர்வதேச கோல்டன் குளோப் விருதை பெற்றார் RRR படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி.

RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது; சிறந்த பாடல் பிரிவில் விருதை தட்டியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது அறிவிப்பு.

* திருவையாறில் தியாகராஜர் 176வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடும் நிகழ்வு துவங்கியது.

* துணிவு படம் பார்க்க வந்த ரசிகா உயிரிழப்பு.

சென்னை ரோகிணி தியேட்டரில் துணிவு படத்தைப் பார்க்க வந்த ரசிகர் ஓடும் லாரியில் ஏறி நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழப்பு.

லாரியில் நடனமாடியபோது கீழே விழுந்து படுகாயமடைந்த அஜித் ரசிகர் பரத்குமார்(19) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

* விண்ணில் ராக்கெட் ஏவும் இங்கிலாந்து நாட்டின் முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இங்கிலாந்து இதுவரை ராக்கெட் ஏவும் பணியில் இறங்கவில்லை.

வெளிநாடுகள் வாயிலாக தான் தேவையான செயற்கைகோளை விண்ணில் நிலைநிறுத்தி வந்தது. முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.

விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதன்பின் போயிங் விமானத்தில் 9 செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட ராக்கெட் இணைக்கப்பட்டது.

பின்னர் இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளி தளத்தில் ராக்கெட் வைக்கப்பட்ட விமானம் புறப்பட்டது.

பின்னர் திட்டமிட்டபடி அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் ரெுங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுற்று வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை.

இதனால் இங்கிலாந்தின் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்தது. முதல்முயற்சியே தோல்வியில் முடிந்ததால் விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இப்பணி வெற்றிகரமாக முடிந்திருந்தால் பூமியின் சுற்றுப்பாதையில் ராக்கெட் அனுப்பும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருந்திருக்கும்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி, ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு இடமாற்றம் ஆகியவை குறித்து சபாநாயகர் முடிவெடுக்காததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த பட்டியல் என்னிடம் உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

* சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு:

ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்; அவருடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேச்சு

கேள்வி நேரம் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பேச முயற்சி; பேச நேரம் தருவதாக சபாநாயகர் கூறியதை அடுத்தும் தொடர்ந்து பேசி வருகிறார்

எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிகொடுங்கள் என சபாநாயகரிடம் கூறிய முதலமைச்சர், அவர்கள் ஆதாரங்களுடன் கூறினால் நான் பதிலளிக்க தயார் என்றும் பேச்சு

திமுக கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சட்டம் ஒழுங்கு நிலை குறித்த முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.

* பி.எம்.கிசான் திட்டம் – ஆதார் இணைப்பு அவசியம்:

பி.எம்.கிசான் பயனாளிகள் 13வது தவணைத் தொகை விடுவிப்புக்கு வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்.

இதுவரை 12 தவணை உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் அடுத்த தவணைத் தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் – தமிழக வேளாண்மைத்துறை அறிவிப்பு.

* ஆளுநரின் விருந்தினர் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம்:

ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் – சபாநாயகர் அப்பாவு.

ஆளுநரின் உரையின்போது விருந்தினர் மாடத்தில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்ததால் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை.

* ‘குறவன் குறத்தி’ என்ற பெயரில் ஆடல் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த தடை -உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சாதி அல்லது பழங்குடியினரை அடையாளப்படுத்தும் விதமான நடனங்கள்  இல்லை என்பதை தமிழ் நாடு  அரசு உறுதிப்படுத்த வேண்டும் – நீதிமன்றம்

* அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 5வது நாளாக விசாரணை:

பொதுக்குழுவில் இடம்பெறாத நிகழ்ச்சி நிரலை கொண்டு ஓபிஎஸ் எவ்வாறு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்? – நீதிபதிகள்

ஓபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்ததன் பேரி்லே அவர் நீக்கப்பட்டார் – கட்சி தரப்பு

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸூம் தேர்ந்தெடுக்கப்பட்டார் – அதிமுக சார்பில் வாதம்.

“அருமையான வாதம்” என நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதிகள்.

* ஈரோடு கிழக்குத் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக சட்டமன்றச் செயலகம் அறிவிப்பு

காலியான தகவலை தமிழ்நாடு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்

* அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

ஐந்து நாட்களாக விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைப்பு

* தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு.

விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக
அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்.

சர்வரை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்.

* தல, தளபதி யாரும் வரமாட்டாங்க!
சிந்தியுங்கள்

உங்க குடும்பத்த முதல்ல பாருங்கன்னு சம்பந்தப்பட்ட நடிகர்களே  கதறினாலும் இவனுங்க கேட்டா தான….!

இரு நடிகர்களில் ஏதாவது ஒரு தரப்பு விட்டு கொடுத்திருந்தாலும் இன்று தமிழகம் முழுவதும் பேனர் கிழிப்பு, ரசிகர்கள் இடையே மோதல், காவல்துறையினருடன் மோதல் போன்ற அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டிருக்கும்! ஆனால் விடுமுறை நாள்களை பயன்படுத்தி கல்லா கட்டிவிட வேண்டும் என்ற ஆசை, யாருக்கு பலம் அதிகம் என்ற ஈகோ காரணமாக இன்றைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளுக்கு (FDFS) அரசு தடை விதிக்க வேண்டும்!

இரவு முழுவதும் கண் விழிப்பதன் காரணமாகவும், போதை பழக்க வழக்கங்களாலும் ரசிகர்கள் என்ற போர்வையில் அத்துமீறல்கள் நடக்கின்றன!

இருட்டை பயன்படுத்தி நடக்கின்ற அக்கிரமங்கள் வெளிச்சத்தில் நடக்க வாய்ப்பு குறைவு! இன்று 19 வயது கல்லூரி மாணவன் மரணம்!

மகன் இறந்த செய்தி கேட்டு அவனது தாய் சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படிப்போடு அந்த மாணவன் பகுதி நேர வேலை செய்து அந்த குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும் உதவியாக இருந்துள்ளான்!

ஒரு குடும்பமே நிர்க்கதியாக நிற்க காரணமான FDFS காட்சிகளுக்கு உடனடியாக நிரந்தர தடை விதிப்பதோடு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நான்கு காட்சிகளை மட்டுமே அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் சார்பாக அரசுக்கு வைக்கப்படுகிறது!

இந்த கோரிக்கையை அரசு நெறிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்காமல் திரைத்துறையினரே இதற்கான முயற்சியை செய்ய வேண்டும்! அப்போது தான் நீங்கள் உண்ணும் உணவு மரியாதைக்குரியதாகவும், அப்பாவி இளைஞர்களின் ரத்தம் கலக்காமலும் இருக்கும்!

படம் பார்த்தோமா; சிரித்தோமா; ரசித்தோமா; கைத்தட்டினோமா என்ற அளவில் இருந்தால் எல்லோருக்கும் நலம்!

error

Enjoy this blog? Please spread the word :)