Home » அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2023) முக்கிய செய்திகள்.

* சேது சமுத்திர திட்டம் தொடர்பாக அரசினர் தனி தீர்மானம்.

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம்.

சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* குடியரசு தலைவருடன், திமுக எம்.பி.-க்கள் இன்று சந்திப்பு

காலை 11:45 மணிக்கு டி. ஆர் பாலு தலைமையிலான திமுக மக்களவை குழு குடியரசு தலைவரை சந்திக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறுமாறு குடியரசு தலைவரிடம் நேரில் வலியுறுத்த முடிவு என தகவல்.

* பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக இன்று 12-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

18-ந்தேதி மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இன்று முதல் 14ம் தேதிவரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,632 பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.

கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

6 இடங்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல ஏதுவாக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 340 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம்- பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் தெரிவிக்க 1800 425 6151, 044- 2474 9002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* மரியான் பயோடெக் இருமல் மருந்தை பயன்படுத்த கூடாது-உலக சுகாதார அமைப்பு.

நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் இறந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

* நேரம் தவறாத விமான நிலைய பட்டியலில் இடம் பிடித்த கோவை.

உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கும் முதல் 20 விமான நிலைய பட்டியலில், கோவை 13வது இடம் பிடித்துள்ளதாக உலக பயண தகவல்களை வெளியிடும் ஓஏஜி நிறுவனம் தெரிவிப்பு.

இந்தபட்டியலில் ஜப்பானின் ஒசாகா சர்வதேச விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

* கின்னஸ் சாதனை படைத்தார் எலான் மஸ்க்; எதற்கு தெரியுமா?

உலக அளவில் மிகவும் குறுகிய காலகட்டத்தில், அதிக இழப்பை (சுமார் 15 லட்சம் கோடி) சந்தித்த முதல் மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்தார் ட்விட்டர் CEO எலான் மஸ்க்.

கடந்த 2021 நவம்பர் மாதம் 26 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 15 லட்சம் கோடியாக சரிவு அடைந்துள்ளது.

தற்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 11 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

* ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு:

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.

* சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.

கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுப்பட வேண்டாம்.

இளைஞர்கள் பொறுப்போடு இருக்க வேண்டிய சூழலில் இதுபோன்ற சம்பவத்தால் குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் – டிஜிபி சைலேந்திர பாபு.

* 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பேரவையில் அறிமுகம் செய்தார்.

* இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால் அதற்கு முழு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் -சட்டப்பேரவையில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேச்சு.

பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால் அதற்கும் காரணம் முதலமைச்சர் தான்.

* விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர் சட்டப்பேரவையில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு; கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.

திருப்பூரில் நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?  – சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி

திருப்பூரில் 1,500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பார்வையாளர் மாடம் பணிகள் முடிக்கப்பட்டு,  பணிகள் முடிந்து ஏப்ரலில் திறக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.

உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

8 ஏக்கர் பரப்பளவில், ₹18 கோடி மதிப்பில், கால்பந்து, உடற்பயிற்சி கூடம், தடகள ஓடுதள பாதை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 60% நிறைவடைந்துவிட்டது.

பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய
‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்-சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.

* நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது- சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம்.

நியாய விலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் சக்கரபாணி.

* ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

சட்ட அமைச்சர் ரகுபதி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

குடியரசுத் தலைவரை தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்

* ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சாமி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2வது வாரத்துக்கு ஒத்திவைப்பு
-உச்சநீதிமன்றம்.

மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

* போக்குவரத்துக்கழகம்: ஊக்கத்தொகை அறிவிப்பு.

பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு.

1,17,129 போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு 57.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்

பணிபுரிந்த காலத்திற்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.

* விடைபெற்றது வடகிழக்கு பருவமழை:

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்றுடன் விடைபெற்றது வடகிழக்கு பருவமழை.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த குழுவை உருவாக்கி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.

அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை (ஜன.13) ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும்.

தீர்வு கிடைக்காவிடில் ஆதி திராவிட நல இணை இயக்குநரை இணைத்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

* வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை ஆற்காடு அருகே நாட்டு
வெடிமருந்து தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தந்தை உயிரிழப்பு மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

* மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு;

ஜனவரி 13, 14 தேதிகளில் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை.

கடைசி சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு; பொங்கலை முன்னிட்டு மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

* சுட்டாங்க.., மறுபிறவி எடுத்து இன்னும் வேகமா இரண்டிலும் கலக்கனாரு.. எம்.ஜி.ஆர். மறக்கமுடியாத ஜனவரி12. 1967.

பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ்.

அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்..

நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றம் மோடுக்கு முழுசாக மாறிவிட்டது.

ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும் எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை யில் அனுமதி..

சுட்டது எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறை யை கட்டுப்படுத்த 9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.

எம்ஜிஆர், ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும்.

ராயப்பேட்டையில் போலீசார் கடும் சிரமப்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டு வரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்..

உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டு மட்டும் வேலைகாட்டியது.

அதனை எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..

கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் ஃபோட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது,

ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது,

எம்ஜிஆர் பிரச்சா ரத்திற்கு போகாமலேயே பிப்ரவரி 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அமோகமாக வெற்றிபெற்றது,

திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது,

எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது,

ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது,

நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது,

என வரலாற்று தேதிகள் சொல்லும்..

இன்னொரு பக்கம் சுடப்பட்டு கம்பீரமான குரல் போனதால் எம்ஜிஆரின் சினிமா அவ்ளோதான் என்றார்கள்.. டப்பிங் பேசி சமாளித்துக்கொள்ளலாம் என்று கூட அறிவுரை சொன்னார்கள்..

என்னை நேசிக்கும் தமிழக மக்கள், என் குரலை காரணம் வைத்து கைவிடமாட்டார்கள், நானே தத்தி தத்தி பேசுகிறேன்.. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அவர்கள் விருப்பம், அவர்கள் முடிவு..என்று எம்ஜிஆர் திடமாக இருந்துவிட்டார்.

மக்கள் திலகத்தை எந்த அளவுக்கு மக்கள் நேசித்தா ர்கள் தெரியுமா? சுடப்பட்ட பின்தான் எம்ஜிஆர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்பைக்காட்டிலும் தெறி இட்..

காவல்காரனில் தொடங்கி ஒளிவிளக்கு, குடியிருந்த கோவில், நம்நாடு, அடிமைப்பெண் எங்கள் தங்கம், மாட்டுக்கார வேலன், ரிக்சாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி என அது ஒரு பெரிய பிளாக் பஸ்டர் பட்டியல்

எம்ஜிஆர் சுடப்பட்டு தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  மறக்கமுடியாத ஜனவரி12. 1967.

* சென்னை ராஜதானியாக (மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்து காலத்திலிருந்து சமீப ஆண்டுகள் வரை சர்ச்சைக்குரிய விடயச் செய்திகளில் பேசப்பட்ட கவர்னர்கள் (ஆளுநர்கள்)

1. ஸ்ரீ பிரகாசா               – 1952      
2. கே.கே.ஷா                 – 1976 
3. சுந்தர்லால் குரானா  -1987 
4. சுர்ஜித் சிங் பர்னாலா -1991
5. எம்.சென்னா ரெட்டி     -1993 
6. எம். பாத்திமா பீவி         -2001
7. பி.எஸ். ராம் மோகன ராவ் -2002
8. சி. வித்யாசாகர ராவ்      – 2016 
9. பன்வாரிலால் புரோஹித்  – 2017
10. ஆர்.என்.ரவி 2022-2023

* இலங்கை ரயில் பாதையை சீரமைக்கும் இந்தியா!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதற்கு இந்தியா ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறது. பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் அங்கு மேற்கொண்டு வருகிறது.

இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 252 கி.மீ. தூர ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்த ரயில் பாதை 81 மில்லியன் டாலர் (சுமார் ரூ.650 கோடி) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில் பாதை இது.

இது மட்டுமல்ல,  இலங்கையில் பல்வேறு ரயில் பாதை மறுசீரமைப்பு பணிகளை இர்கான் இன்டர்நேஷனல் என்ற இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  இதில் முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. தூர பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
இதற்காக நடந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசும்போது, “இலங்கை ரெயில்வே துறையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை இந்தியா மேற்கொண்டு உள்ளது. மேலும் சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிலும், பரிசீலனையிலும் உள்ளன ” என்று தெரிவித்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

இந்த தொடக்க விழாவில் பேசிய இலங்கை அமைச்சர் பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 1905-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரெயில்பாதை ஒரு நூற்றாண்டுக்கு மேல் மேம்படுத்தப்படவில்லை என்று கூறிய அவர், “மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான இந்த ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் ” என்றும் தெரிவித்தார்.

* 🔴 ‘ஜெயலலிதா இருந்தா ஒத வாங்காம போயிருப்பானா…!’

சர்ச்சை பேச்சு: https://youtu.be/EJY0znJojR8

ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏகத்துக்கும் ஒருமையில் வசைபாடிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

“இலையில் பரிமாறுவதுதான் கவர்னர் உரை. நீ சமையல்காரன்; சமைச்சு போட்டு போயிற வேண்டியதுதான் ஒன் வேலை.

error

Enjoy this blog? Please spread the word :)