அக்னிப்புரட்சி இன்றைய (14.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (14.01.2023) முக்கிய செய்திகள்.
* போகிப் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்.
தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகையை முன்னிட்டு பயனற்ற பொருட்களை தெருக்களில் மேளதாளம் முழங்க மக்கள் எரித்தனர்.
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் உயிரிழந்த விவகாரம்.
கோகுல்ஸ்ரீ அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்.
சிறுவர் சீர்திருத்த பள்ளி காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிந்து கைது.
* திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார்
விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியுள்ளார் – ஆளுநர் மாளிகை
ஆளுநர் குறித்த அவதூறு, மிரட்டல் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் கோரிக்கை
* 3,184 சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம்: முதல்வர்
காவல்துறையில் 3 ஆயிரம் பேருக்கும், தீயணைப்பு துறையில் 118 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் பதக்கம் தர ஆணை.
நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்.
* ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில்.
இவ்விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கருத்துகளை கேட்டு இந்திய சட்ட ஆணையம் 2 வாரத்திற்கு முன் கடிதம் எழுதி இருந்தது.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.368 உயர்ந்து ரூ.42,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,296க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
* பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த காங்கிரஸ் எம்.பி.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி உயிரிழப்பு
* தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை என்று தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
* ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
“தமிழ்நாட்டு மக்களுக்கும், கழகத் தோழர்களான அன்பு உடன்பிறப்புகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய இதயம் கனிந்த பொங்கல் – தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார்.
கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது, ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது. கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
* பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்; 35 பொருட்களின் சுங்க வரியை உயர்த்த முடிவு: மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தகவல்!..
வரும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் 35 பொருட்களின் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ம் தேதி 2023-24ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதனால் பொது பட்ஜெட்டை தயார் செய்யும் பணியில் ஒன்றிய நிதியமைச்சகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட்டின் போது அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை குறைப்பும், சில பொருட்களின் விலை உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘பிப். 1ல் தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டில் குறைந்தது 35 பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலைகள் அடுத்த நிதியாண்டில் இருந்து உயரக்கூடும்.
சுங்க வரியை அதிகரிப்பதால், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க முடியும். மேலும், அந்த பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் ஊக்குவிக்க முடியும்.
சுங்க வரியை அதிகரிக்கக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்களை அடையாளம் காணுமாறு கடந்த மாதம், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான சுங்க வரி அதிகரிப்பதால், இறக்குமதி செலவைக் குறைக்க முடியும்.
பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் பொது பட்ஜெட்டானது, 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட்டாக இருக்கும்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.
கட்டண சலுகை கிடைக்குமா?
TELEGRAM: t.me/agnipuratchi1
கடந்த பல ஆண்டுகளாக, வருமான வரியில் எந்த நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை.
இந்த ஆண்டு பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பொது பட்ஜெட் என்பதால் வரி செலுத்துபவர்களும், வயதானவர்களும் ரயில் கட்டணத்தில் விலக்கு கிடைக்குமா? என்று எதிர்நோக்கி உள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி பார்த்தால், ரயில்வேயின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான முதல் 9 மாதங்களில் ரயில் கட்டணம் மூலம் மட்டும் ரூ.48,913 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரயில்வேயின் வருமானம் 71% அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான (60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40% கட்டண சலுகை; 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% கட்டண சலுகை) கட்டண சலுகை மீண்டும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
* ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பரிந்துரை!
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார் .
ஆளுநரின் செய்லபாடுகள் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குடியரசு தலைவரிடம் அளித்தனர். கடந்த 9-ம் தேதி பேரவையில் ஆளுநர் மரபு மீறி நடந்தது தொடர்பாக குடியரசு தலைவரிடம் அரசின் பிரதிநிதிகள் நேரில் முறையிட்டனர்.
கடந்த 9-ம் தேதி ஆளுநர் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது அரசு தயாரித்துக் கொடுத்த சில பகுதிகளை வாசிக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து அவர் வெளியேறினார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மீது விமர்சனத்தை முன்வைத்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் குறித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டுவருவது குறித்தும் குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார். அதனை நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்கியது. அப்போது ஆளுநர் செயல்பட்டுவரும் விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
அதனை விரிவாகக் கேட்டறிந்த குடியரசு தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TELEGRAM: t.me/agnipuratchi1
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு குடியரசு தலைவர் அனுப்பியுள்ளார். நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் தனது குறிப்புடன் முதலமைச்சரின் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* சேவல் சண்டை நடத்த இரு மாவட்டங்களுக்கு மட்டும் அனுமதி:
ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு அனுமதி.
கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சேவல்களை துன்புறுத்தவோ, மது கொடுக்கவோ, காலில் கத்தியை கட்டவோ கூடாது.
நிபந்தனைகளை மீறினால் காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் – உயர்நீதிமன்றம்.
* வேங்கைவயல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்- டிஜிபி சைலேந்திர பாபு.
”தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவன் புலம்பிக் கொண்டிருக்கிறான்…”
வீடியோ: https://youtu.be/JBxNTDnIfW0
– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
* சபரிமலையில் மகர விளக்கு பூஜையை ஒட்டி, பொன்னம்பல மேட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதியை தரிசித்தனர்.
மகர விளக்கு பூஜையை ஒட்டி, ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
* சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுக வில் இருந்து நீக்கம்!
ஆளுநர், ஈபிஎஸ், அண்ணாமலை தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்…
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.
(சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது: https://youtu.be/9ItbMI2eFLg )
* மு.க.ஸ்டாலின் பொங்கி எழுவது ஏன்? – பாஜக கேள்வி
காமராஜர் ஆட்சி காலத்தில் 24-12-1961 அன்று சட்டமன்றத்தில் சி.சுப்பிரமணியம் அவர்கள் இனி தமிழ் நாடு சட்டமன்றம் என்று அழைப்போம், தமிழ்நாடு அரசு என்று பேசுவோம் என்று மகிழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொன்னார். எங்கேயெல்லாம் மெட்ராஸ் மாகாணம் என்று உள்ளதோ, அதையெல்லாம் தமிழ் நாடு என அழைக்கலாம்,. ஆனால் அது சட்டத்துக்கு புறம்பானது அல்ல. அதனால் சட்டம் இயற்ற தேவையில்லை என்றார் காமராஜர்.ஆகவே, தமிழ்நாடு என்று காமராஜர் அறிவித்த போதிலும், அதை சட்டமாகியது அண்ணா அவர்களின் ஆட்சியில் தான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அண்ணா அவர்கள் விரும்பியது ” தமிழகம்” என்ற பெயர் தான் என்பதை 15-10-1980 அன்று பொன்னேரி அரசினர் கல்லூரி விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
“அப்பொழுது இருந்த அமைச்சர் பெருமக்களை பார்த்து நான் கேட்ட போதெல்லாம் சொன்னார்கள்,’தமிழ்நாடு,தமிழ்நாடு – என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே!அந்தப் பெயர் இலக்கியத்திலே இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு.
“இலக்கியத்திலே இல்லாத ஒரு பெயரை வைக்கச் சொல்கிறாயே நியாயம் தானா? என்று கூட கேட்டார்கள்.
நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன், ” இமிழ் கடல் வரைப்பில் தமிழகம்” என்று சிலப்பதிகாரத்திலே இருக்கிறது. ஒரு வேளை. சிலப்பதிகாரத்தை நீங்கள் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளவில்லையா?” என்று நான் சட்டமன்றத்தில் கேட்டிருக்கிறேன்.
ஆனால், நிறைவேறவில்லை
“அண்ணா அவர்கள் தான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி “தமிழ்நாடு” என்கின்ற பெயரை உருவாக்கி – இருந்த பெயரை அறிமுகப்படுத்தி ‘தமிழகம்’ என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் ‘தமிழகம்’ என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே தமிழ்நாடு என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்”.
(மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு: https://youtu.be/JBxNTDnIfW0 )
(ஆதாரம் : கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! புத்தகத்தில் பக்கம் எண் -100)
மேலும், 1972ம் ஆண்டு, மே 6ம் நாள், சென்னையில் இளங்கோவடிகள் விழாவில் கருணாநிதி அவர்கள்,
‘தமிழகம்’ என்று இந்த மண்ணுக்குப் பெயர் சூட்ட சங்கரலிங்கனார் ஏறத்தாழ 70 நாட்கள் உண்ணாவிரதமிருந்து செத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கனார் செத்ததை எடுத்துச் சொன்னோம். இலக்கியத்தில் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.தமிழ் கடல்வரைப்பில் தமிழகம் என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறதே என்று சொன்னோம்.
(மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று புத்தகத்தில், 144வது பக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்.)
அதாவது அண்ணா அவர்கள் விரும்பியது தமிழகம் என்ற பெயராக இருந்தாலும், டெல்லியிலே இருந்தவர்கள் விரும்பிய காரணத்தினாலே தான் தமிழ் நாடு என்று பெயர் சூட்ட ஒப்புக்கொண்டார் என்று திரு.கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
நம்மை பொறுத்தவரை தமிழகம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்று தான். ஆனால், தமிழகம் என்பதை தான் அண்ணா அவர்கள் விரும்பியுள்ளார் என்பதை ஆதாரபூர்வமாக கருணாநிதி அவர்கள் குறிப்பிட்ட அதே கருத்தை ஆளுநர் அவர்கள் ‘தமிழ்நாடு என்பதை விட தமிழகம்’ என்ற சொல் பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டதற்கு , இன்றைய தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கி எழுவது ஏன்? அன்றைய தி மு க தலைவரின் கருத்தை தானே ஆளுநர் பிரதிபலித்திருக்கிறார். அதை மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பது ஏன்? அண்ணாவின் விருப்பத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெறுப்பது ஏன்? டெல்லியில் இருப்பவர்களுக்காக இன்னும் தன் நிலையை மாற்றி கொள்ள தி மு க மறுப்பது ஏன்?
நாராயணன் திருப்பதி, பாஜக
* ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படம் – நாசா வெளியிட்டது
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கியை, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது’ ஆய்வுப்பணியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மேற்கொண்டு வருகிறது.
பிரபஞ்சம் குறித்து இதுவரை நாம் அறியாத தகவல்களை, இந்த தொலைநோக்கி மூலம் நம்மால் இனி வரும் காலங்களில் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன்படி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பேரண்டங்களின் திரள்கள் அடங்கிய புகைப்படங்களை கடந்த ஆண்டு நாசா வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட, விண்வெளியில் நட்சத்திரங்கள் உருவாகும் ஒரு பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் நட்சதிரங்கள் உருவாகும் பகுதி நெபுலா என்று அழைக்கப்படுகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள என்.ஜி.சி. 346 எனப்படும் இந்த பகுதியானது பூமியில் இருந்து சுமார் 2 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
இந்த புகைப்படத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியானது ரிப்பன்களின் திரள்களைப் போல் காட்சியளிக்கிறது. நட்சத்திரங்கள் உருவாகும் போது மிகப்பெரிய அளவிலான தூசுப்படலங்களையும், வாயுக்களையும் அதனுடன் சேர்த்துக் கொள்வதால் இத்தகைய ரிப்பன் திரள் போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும், இதனை ஆய்வு செய்வதன் மூலம் நமது சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் எவ்வாறு தோன்றியது என்பது குறித்த தகவல்களையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய இருவர் மீது துப்பாக்கிச்சூடு
கைது செய்ய சென்றபோது தாக்குதல் நடத்தியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு
குண்டடிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதி
