Home » அக்னிப்புரட்சி இன்றைய (14.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (14.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (14.10.2022) முக்கிய செய்திகள்.

* சென்னை பரங்கிமலையில் சத்யாவை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த குற்றவாளி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

* வங்கி கடன்களுக்கான வட்டி மீண்டும் உயர்கிறது?

பணவீக்க விகிதங்களை தேசிய புள்ளி விவர அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொருட்களின் சில்லரை பணவீக்கம் கடந்த 5 மாதத்தில் இல்லாத அளவு அதிகரித்து 7.41% தொட்டுள்ளது. இந்த நிலையில் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பதால் அதைக் கட்டுப்படுத்துவதற்காக வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது.

* அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?

மதுரை தல்லாகுளம் அஞ்சல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து The Manager, Mail Motor Service, CTO Compound, Tallakulam, Madurai-625002 என்ற முகவரிக்கு அக்டோபர் 17க்குள் அனுப்ப வேண்டும்.

* உக்ரைன் பிராந்தியங்கள் கபளீகரம்: ரஷ்யாவுக்கு ஐநா கண்டனம்!

உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்ய படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு எப்போது?: ஈபிஎஸ் கேள்வி

நீட் ரத்து குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த முதல்வர் ஸ்டாலின், எப்போது நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

* பாலியல் புகாரில் சிக்கிய கேரள காங்கிரஸ் எம்எல்ஏ!

கேரள மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் மீது திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் கூறி காவல்துறையில் மனு அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ தலைமறைவாகிவிட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் எம்எல்ஏ எல்தோஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.

* நாட்டின் 4வது வந்தே பாரத்’ ரயில் சேவை தொடக்கம்

மணிக்கு 180 கிமீ வரை செல்லக்கூடிய அதிகவேக ரயிலான வந்தே பாரத்’ சேவை முதாவதாக 2019ல் டில்லி-வாரணாசி இடையே தொடங்கியது. அடுத்ததாக டில்லி- காஷ்மிரின் காத்ரா இடையிலும், 3வதாக மும்பை- குஜராத்தின் காந்தி நகர் இடையிலும் வந்தே பாரத்’ ரயில்கள் விடப்பட்டன. இதைத்தொடர்ந்து 4வது வந்தே பாரத்’ ரயில் சேவை ஹிமாச்சலின் உனா-டில்லி இடையே தொடங்கியது.

* தென்காசி: குற்றால அருவியில்  குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை முதல் நீக்கம்.

நேற்று மாலை பெய்த தொடர் மழையால் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

* கேரளா: மலையாலப்புழா  என்ற இடத்தில் சிறுவர்களை மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய  தேவகி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும்,  அந்த சிறுவன் மயங்கி விழும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

மந்திரவாதம் செய்ய பயன்படுத்திய வாசந்திமடம் என்ற வீட்டில் உள்ள தேவகி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

அங்கு திரண்ட பொது மக்கள்  பெண்ணின்  வீட்டை அடித்து நொறுக்கினர்.

* சிவகங்கை சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

Video: https://twitter.com/IndiaNewsDigest/status/1580760839937671169?t=AXivWJGzz1c2RDCLzJwKWQ&s=19

மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* பதவி நீட்டிப்பு இல்லை – மெளனம் கலைத்த கங்குலி

காலம் முழுவதும் விளையாடிக் கொண்டு இருக்க முடியாது;

அதேபோல, வாழ்நாள் முழுவதும் நிர்வாகியாக இருக்க முடியாது; நிராகரிக்கப்படுவது வாழ்க்கையில் ஒரு அங்கம்”

பிசிசிஐ தலைவராக பதவி நீட்டிப்பு கிடைக்காதது குறித்து, சவுரவ் கங்குலி சூசகமாக பேச்சு

* பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

தொட்டிப்பாளையத்தில் 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

நெல், கரும்பு, சோளம் பயிரிட்டிருந்த விளை நிலங்களையும் மழைநீர் சூழ்ந்ததால் கடும் பாதிப்பு

வாகனங்களும் செல்ல முடியாமல் பழுதாகி நிற்பதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பள்ளிகளில் தங்க மறுத்து நிரந்தர தீர்வு கோரும் மக்கள்

ஈரோடு சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

* இன்று நீங்கள் (பாஜக) அதிகாரத்தில் உள்ளீர்கள், விசாரணை அமைப்புகளை வைத்து படம் காட்டுகிறீர்கள்

நாளை நீங்கள் அதிகாரத்தில் இல்லாதபோது, இதே விசாரணை அமைப்புகள், வீட்டுக்குள் புகுந்து உங்களை காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும்; அந்த நாள் விரைவில் வரும் – மம்தா பாணர்ஜி

* ஒரே நாளில் கோலி, ரோகித் சர்மாவின் சாதனைகளை முறியடித்த பாபர் அசாம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 55 ரன்கள் அடித்தார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 261 இன்னிங்சில் 11000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரர் என்ற கோலியின் சாதனையை அவர் முறியடித்தார். பாபர் 251 இன்னிங்சில் இதை எட்டினார். மேலும், டி20 போட்டிகளில் 28 அரைசதங்களுடன் 2ம் இடத்திலிருந்த ரோகித்தையும் முந்தியுள்ளார்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 200 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* இரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவியின் தந்தை தற்கொலை

முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தியிருப்பது உறுதியானது

* நீட் தேர்வு தொடர்பான ரிட் மனு விவகாரம்:

நீட் தேர்வு தொடர்பான தனது ரிட் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை.

நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ளதால் வழக்கை 12 வாரத்திற்கு ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீட் வழக்கை 12 வாரத்துக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

* உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பழங்குடியினர் அல்ல – உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் அரசுத்தரப்பு விளக்கம்.

விசாரித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க காஞ்சிபுரம் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு.

* ஞானவாபி மசூதி வழக்கு: இந்து அமைப்பின் மனு தள்ளுபடி.

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் போன்ற உருவத்தின் காலத்தை நிர்ணயிக்க கார்பன் சோதனை நடத்த கோரிய இந்து அமைப்பின் கோரிக்கையை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது.

* ஹிமாச்சலப் பிரதேசம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

* தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்:

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் அறிவிப்பு.

8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10% தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

* அதிக ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு குழு தமிழகம் வருகிறது.

22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழகம் வருகிறது.

தமிழக அரசின் கோரிக்கை அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் குழு ஆய்வு நடத்த உள்ளது.

* தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை:

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் பெறுவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிய வருகிறது.

* சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சதீஷை அக்டோபர் 28 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார்.

* மும்பை: காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் தீபக் சஹார் காயம் காரணமாக விலகியதையடுத்து ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* மாணவி வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்.

கல்லூரி மாணவி சத்யபிரியா வழக்கு ரயில்வே காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

* தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1,12,57,803/- ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)