Home » அக்னிப்புரட்சி இன்றைய (16.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (16.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (16.01.2023) முக்கிய செய்திகள்.

* உறுதிமொழியுடன் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு.

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் கோலாகலமாக தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள், 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

* தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிழா வகை மானை இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர் படகுமூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

கரைக்கு வந்ததும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடற்கரையில் இருக்கும் மானை ஏராளமான பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

* ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.

பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.

* பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த் காளை முட்டியதில்  உயிரிழப்பு

* திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த்(25) என்ற இளைஞர் காளை முட்டி பலி.

காளை முட்டி படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால்.

7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிரிட்டன் வீரர் ஜேக் ட்ரேப்பரை வீழ்த்தி நடால் வெற்றி.

* பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் வழங்கப்பட்டது.

19 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தை பிடித்த பாலமேட்டை சேர்ந்த மணிகண்டனுக்கு அமைச்சர் உதயநிதி சார்பாக பைக் வழங்கப்பட்டது.

* ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தோரின்
குடும்பத்திற்கு நிதியுதவி

தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ஆஸ்திரேலியாவுடன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (து.கேப்டன்), சுப்மன் கில், சித்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஆர் அஷ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

* ரயில்வே ஒப்பந்தத்தில் ரூ.50 லட்சம் லஞ்சம்; கோட்ட மேலாளர் உட்பட 8 பேர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை!

புதுடெல்லி: இந்திய ரயில்வே பணியில், 1997ல் பொறியாளர் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்த ஜிதேந்தர் பால் சிங், அசாம் மாநிலம் கவுகாத்தி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளராக உள்ளார். இவர், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ஜிதேந்தர் பால் சிங், அவரது உதவியாளர் ஹரி ஓம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ஏடிஆர்எம்)  ஜிதேந்தர் பால் சிங் மற்றும் 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ஒப்பந்தங்களை பெறுதல், நிலுவையில் உள்ள பில்களுக்கு முன்கூட்டியே பணம் வசூலித்தல், தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற புகார்கள் 8 பேர் மீதும் நிலுவையில் இருந்தது. அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினர்.

டெல்லியை சேர்ந்த ஹவாலா கும்பல் மூலம் லஞ்சம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. டெல்லி, நரோரா, கவுகாத்தி, சிலிகுரி, அலிகார் ஆகிய இடங்களில் உள்ள 8 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அங்கிருந்து ரூ. 47 லட்சம் ரொக்கம், மடிக்கணினிகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 8 பேரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்றன.

TELEGRAM: t.me/agnipuratchi1

* கொடைக்கானல் வனத்துறை சுற்றுலா பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15 என்ற அடிப்படையில் வனத்துறை கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

மோயர் சதுக்கம், பைன் மரகாடுகள், குணா குகை, தூண்பாறை பகுதிக்கு செல்ல தனித்தனியே கட்டணம் தர தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மு.க.அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் தற்போது மதுரையில் உள்ளார்.

இந்த சூழலில் மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின், மதுரை டிவிஎஸ் நகரில் அமைந்துள்ள அழகிரியின் இல்லத்தில் அவரை சந்தித்தார்.

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தனது பெரியப்பாவான அழகிரியை முதல் முறையாக அவர் சந்தித்துள்ளார்.

அவரை வரவேற்க வீட்டு வாசலில் அழகிரி காத்திருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிகிறது.

பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறான் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்திருந்தார் மு.க.அழகிரி.

error

Enjoy this blog? Please spread the word :)