அக்னிப்புரட்சி இன்றைய (16.10.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (16.10.2022) முக்கிய செய்திகள்.
* சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம்.
நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ. 13.5 லட்சமாக உயர்வு.
வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ. 23.5 லட்சத்தில் இருந்து ரூ. 24.5 லட்சமாக உயர்வு.
* உலக பட்டினி குறியீடு – இந்தியா மறுப்பு.
“கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் தவறான முறையில் நடத்தப்பட்ட ஆய்வு; நாட்டின் பிம்பத்தை கெடுக்கும் முயற்சி”
உலக பட்டினி குறியீட்டில், இந்தியா 107வது இடத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு இந்திய அரசு மறுப்பு.
* ஆஸ்திரேலியாவில் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்
முதல் சுற்றில் இலங்கை – நமீபியா மற்றும் நெதர்லாந்து – ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதல்
JOIN US: https://t.me/Agnipuratchi1
* ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பேர் உயிரிழப்பு.
தேனி – போடி அருகே பெரியாத்து கோம்பை பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற சஞ்சய், காவியா அவரது கணவர் ராஜா ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு.
திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில் புதுச் தம்பதியினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததால் சோகம். குளிக்கச் சென்ற போது ஆற்றில் தவறி விழுந்ததில் பிரணவ் என்ற சிறுவன் மட்டும் உயிர் தப்பினார்.
🔴 அக்டோபர் 20ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழகம் – கர்நாடகாவில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
* “சென்னையில் 90 முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு”
“இந்தாண்டு சென்னையில் வெள்ள பாதிப்பு இருக்காது”
மழைகால வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
* ஐசிசி டி20 உலக கோப்பை:
55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது நமீபியா.
ஐசிசி டி20 உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் இலங்கையை வீழ்த்தி நமீபியா அபாரம்.
164 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்.
* இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
இந்தியை திணிப்பதற்கு சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை.
இந்திய ஒற்றுமை சுடரை தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும்.இந்தி திணிப்பு நாட்டை பிளவு படுத்தும்.
அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்.
* நாட்டில் முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பை தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
* இன்று காலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும் – தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதில்.
செப்.27ம் தேதி சென்னை தியாகராய நகரில் ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்
கடைக்குச் சென்று பொருளைப் பார்க்காமலேயே, பியூஷ் கோயல் குறை கூறியிருப்பது வருத்தமளிக்கிறது -அமைச்சர் சக்கரபாணி.
4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது
பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
தரமான அரிசி குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்.
12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை இதே மத்திய அமைச்சர் பாராட்டியிருந்தார் – அமைச்சர் சக்கரபாணி
* புதுச்சேரியில் அரிசி – சர்க்கரைக்கு பதில் பணம்
புதுச்சேரியில் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
* கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் நாளை ஒருநாள் (அக். 17) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
* சில மனிதர்கள் திருந்தி விட்டதாக சொல்வார்கள், அவர்கள் திருந்தவில்லை அணிந்திருந்த முகமூடி கழன்றுவிட்டது, அவ்வளவுதான்!
நான் என்கின்ற அகம்பாவம், அவனா என்கிற பொறாமை, எனக்கு என்கின்ற பேராசை, இவைகள் ஒருபோதும், உன்னை வாழ வைக்காது, நோய்களை விட, மிகவும் ஆபத்தானவை!!
கஷ்ட காலங்களின் போது, அதில் இருந்து, விடுதலை வேண்டும், என்று வேண்டுவதைவிட, எது நடந்தாலும், அது நல்லதாய் நடக்கட்டும், என்று வேண்டி கொள், நல்லபடியாக மாறும்!!!
🙏இனிய இரவு வணக்கம்🙏
JOIN US: https://t.me/Agnipuratchi1
