அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2023) முக்கிய செய்திகள்.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
போட்டியில் 900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்பு.
* திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் திரண்டுள்ளனர்
சனிப்பெயர்ச்சியையொட்டி புதுவை மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் திரண்டுள்ளனர்.
திருக்கணித பஞ்சாங்கப்படி மாலை 6.04க்கு மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனீஸ்வரன்.
* தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்
மக்கள் திலகம், என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் இன்று.
1977ல் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார்.
இன்று, எம்.ஜி.ஆர் மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
* அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்.
அனைத்து தரப்பினரும் தனது எழுத்துப்பூர்வ வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
* அமைச்சர் பொன்முடி தம்பி தியாகராஜன் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்
தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மருத்துவர் தியாகராஜன் சிறந்த மருத்துவர். பழகுவதற்கு நல்ல மனிதர். பணத்தை பெரிதாக மதிக்காமல் மருத்துவத்தை சேவையாக செய்து வந்தவர். மருத்துவர் தியாகராஜனை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
* 2020க்கு பின் ஒருநாள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம்.
டெல்லியில் 2020 மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து முதல்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டியது.
9 பேர் குணமடைந்த நிலையில் 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் – டெல்லி சுகாதாரத்துறை.
* மஞ்சுவிரட்டில் ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு:
புதுக்கோட்டை:ராயவரம் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு.
சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் புதுவயலை சேர்ந்த கணேசன் என்பவர் உயிரிழப்பு.
சிவகங்கை:சிராவயல் மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு
மதுரை சுக்காம்பட்டியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
* விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.
10 சுற்றுகளில் மொத்தம் 823 காளைகள் களமிறங்கின. 26 காளைகளை அடக்கிய அபி சித்தர் என்பவருக்கு கார் பரிசு அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு
* பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜுன் 2024ம் ஆண்டு வரை நீட்டிப்பு
கடந்த 2020 ஜனவரி மாதம் தேசிய தலைவராக பதவியேற்ற நட்டாவின் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது
* சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்பு ஊர்வல ஒத்திகையை ஒட்டி 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
நமது “குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26.01.2023 ம் தேதி காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் குடியரசு தின ஒத்திகை நாட்களான ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய மேற்கண்ட 4 தினங்களுக்கு கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1) மேற்கண்ட தினங்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 05.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
2) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, வி.கே. ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு. வஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர். சிவசாமி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
3) அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள். (மாநகர பேருந்துகள் உட்பட) காந்தி சிலை சந்திப்பில் இராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்படும். இராயபேட்டை ஒன் பாயிண்ட். ராயபேட்டை மருத்துவமனை. இராயப்பேட்டை மணிக்கூண்டு. ஜெனரல் பீட்டர்ஸ்ஸ்ஸ் ரோடு. அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
4) மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்திசிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 21G இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு. அவை இராயப்பேட்டை மேம்பாலம். இராயப்பேட்டை நெடுஞ்சாலை. இராயப்பேட்டை மணிக்கூண்டு. ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு. அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
5) அதே போன்று மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணாசதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் எண். 45B மற்றும் 12G ஆகியவை நீல்கிரிஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி. இராயபேட்டை மருத்துவமனை, இராயப்பேட்டை மணிக்கூண்டு. ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, அண்ணாசாலை, வழியாக தற்காலிக பேருந்து நிறுத்தமான சிந்தாதரிப்பேட்டை இரயில் நிலையம் செல்லலாம்.
TELEGRAM: t.me/agnipuratchi1
6) டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.
7) டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.
8) பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.
9) வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.
10) அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்.
11)பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகணங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, அண்ணாசிலை, வெஸ்ட் காட் சாலை. GRH இராயபேட்டை ஒன் பாயிண்ட், நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு. சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.
12) வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு தலைவாரி கொண்டை போடும் வைபவம்..!
Watch: https://youtu.be/kZIuAT7b0vE
அற்புதமான காட்சி! ஆண்டாள் திருவடிகளே சரணம்!
