அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2023) முக்கிய செய்திகள்.
* இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சம்
* அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை தடய அறிவியல் கூடத்தில் தொடங்கியது.
மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
* பழனி: தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுவதற்கான இணையதள பதிவு இன்று தொடங்கியது.
விருப்பமுள்ள பக்தர்கள் palanimurugan.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய வலைதளங்களில் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யும் பக்தர்களில் 2000 பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
* ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் நடால் வெளியேற்றம்.
2ம் சுற்றில் அமெரிக்க வீரர் மெக்டொனால்டிடம் 4 – 6, 4 – 6, 5 – 7 செட் கணக்கில் நடால் அதிர்ச்சி தோல்வி.
கடந்த ஆண்டு ஆஸி. ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற நடால் தற்போது 2ம் சுற்றுடன் வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.
* 3 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு:
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்.
மேகாலயா, நாகலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல்.
திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதி தேர்தல்.
வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி.
* ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனுத் தாக்கல்: ஜனவரி- 31ஆம் தேதி.
இடைத்தேர்தல்: பிப்ரவரி – 27 ஆம் தேதி.
வாக்கு எண்ணிக்கை: மார்ச் 2 ஆம் தேதி. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
* நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த 5வது இந்திய வீரர் ஆனார் சுப்மன் கில்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது.
* மருந்துசீட்டு அவசியம் – அரசு அதிரடி.
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும்.
மருந்துசீட்டு இல்லாமல் விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
மனநோய், தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி.
* உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் உள்துறை அமைச்சர், 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
* மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் செய்திக்குறிப்பு:
“2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்’ ஒரு மாத காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி’ நடைபெற்றது.
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
அந்தக் காலத்தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், ‘தமிழகம்’ என்பதை ‘மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.”
எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.
சென்னை 18/01/2023
TELEGRAM: t.me/agnipuratchi1
* இலக்கியச் செழுமை மிக்க நமது தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும், உலகெங்கிலும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* திரைப்படங்கள் குறித்த கருத்துக்களைத் தவிருங்கள்: பிரதமர்
‘பதான்’ படத்தின் ‘பேஷாராம் ரங்…’ பாடலில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருந்தது சர்ச்சையானது. இதற்குப் பல இந்து அமைப்புகளும், பாஜக தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பிரதமர் மோடி, “திரைப்படங்கள் குறித்து தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம். இதனால் அரசின் திட்டங்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை” என்றார்.
* இந்தியாவுடன் 3 முறை போரிட்டு பாடம் கற்றுள்ளோம்: பாகிஸ்தான் பிரதமர்
“இந்தியாவுடன் 3 முறை போரிட்டு, பல்வேறு பாடங்களை பாகிஸ்தான் கற்றுக் கொண்டுவிட்டது. போரினால் வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதை ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அதனால், காஷ்மிர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் அமைதியான முறையில் பேசி, அதற்குரிய தீர்வுகளை காண வேண்டும்” என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறினார்.
* ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்; இனி ‘வெயிட்டேஜ்’ முறை கிடையாது!
கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி நடத்திய சில தேர்வுகளில் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, டிஆர்பியை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், ‘பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில் ‘வெயிட்டேஜ்’ எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம்’ என, பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.
* திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனை…
12 கேள்விகளுக்கு பதிலளித்த ரௌடிகள்! திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் ரௌடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடந்தது. வழக்கறிஞர்களுடன் சென்ற ரௌடிகளிடம் 12 கேள்விகள் கேட்கப்பட்டன.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார்.
அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அதனால், தன்னுடைய கணவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ-யையும் விசாரித்தது. ஆனால், குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது.
எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் திருச்சி ராமஜெயத்தின் கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், புதிய கோணத்திலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
கொலை நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், குற்றவாளிகளைப் பிடிக்க உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்தனர். அதன்படி திருச்சி ராமஜெயம் கொலைசெய்யப்பட்ட காலக்கட்டத்தில் கோலோச்சிய பிரபலமான ரௌடிகளில் 13 பேருக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டப்பட்டது. அதற்கான அனுமதியையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றனர்.
இதையடுத்து சென்னையிலுள்ள தடய அறிவியல் துறையில் உண்மை கண்டறியும் சோதனை இன்று (18.1.2023) நடத்தப்பட்டது. இதில் ரௌடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மோகன்ராமின் வழக்கறிஞர் ஆனந்தன், நரைமுடி கணேசனின் வழக்கறிஞர் புகழேந்தி, தினேஷின் வழக்கறிஞர் வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின்போது உடனிருந்தனர். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போலீஸார் தயாரித்துக் கொடுத்த கேள்விகள் உண்மைக் கண்டறியும் சோதனைக்குட்படு த்தப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டன.
அப்போது, அவர்கள் அளிக்கும் பதிலில் உண்மை இருக்கிறதா இல்லை பொய் சொல்கிறார்களா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்டவர்களின் இதய துடிப்பை பல்ஸ் மூலம் கண்காணித்த நிபுணர்கள், அதை அறிக்கையாக சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் சமர்பிக்கவிருக்கின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க பாஜக சார்பில் 14 பேர் அடங்கிய குழு அமைப்பு
* முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 349/8 ரன்கள் குவித்த நிலையில், கடின வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கடைசி ஓவர் வரை போராடி 337/10 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது .
