Home » அக்னிப்புரட்சி இன்றைய (19.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (19.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (19.01.2023) முக்கிய செய்திகள்.

* அரசியலை விட்டு விலகுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு.

6 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கும் ஆர்டென் மேலும் ஆட்சியை தொடரும் ஆற்றல் தன்னிடம் இல்லை எனக் கூறி பிப்ரவரி 7-ம் தேதிக்கு முன் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

* மக்களை உறைய வைக்கும் உலகின் குளிர் நகரம்!

WATCH: https://youtu.be/XXEHx7CkBvc

• மைனஸ் 50 டிகிரியில் நடுங்க வைக்கும் நகரம்! உலகின் உச்சபட்ச குளிர் உடைய நகரமாக மாறியது!

* 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது, பதிவுகள் புதுப்பிக்கப்படாது.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

இந்த புதிய விதி ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது.

* மகாராஷ்டிரா: ராய்கட் பகுதியில் கோவா – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் லாரி, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு!

* நடிகர் வடிவேலின் தாயார் காலமானார்

மதுரை வீரகனூரில் வசித்து வந்த வடிவேலின் தாயார் சரோஜினி (87) உடல் நலக்குறைவால் காலமானார்.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை.

இரண்டொரு நாளில் மீண்டும் கலந்து பேசி ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவிப்போம் – ஜி.கே.வாசன்

* ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 108 பக்தி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார் முதலமைச்சர்.

* ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிப்பதற்கான பணிகள் நடக்கின்றன -உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில்.

* சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. மற்றும் காவல் உயரதிகாரிகள் பங்கேற்பு

* நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாளின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்;
ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு என இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

‘வைகைப் புயல்’ வடிவேலுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

* வேங்கைவயல் சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல்.

இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறோம் – திருமாவளவன் பேட்டி

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை பாஜக மையக்குழு கூட்டம்.

கடலூரில் நாளை காலை செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் மாலை மையக்குழு கூட்டம்.

இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை.

அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு ஆலோசனை.

* ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடும்”

“ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி; நாங்கள் நின்று வென்ற தொகுதி; இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்; கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்”- மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி.

* முதலமைச்சரின் தனி செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

உதயச்சந்திரனுக்கு இளைஞர் நலன், சுற்றுலா, சுற்றுச்சூழல் துறைகள் கூடுதலாக ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர் நலன், சிறு, குறு தொழில்கள் துறை உமாநாத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு.

முதல்வரின் சந்திப்புகள், கால்நடை, கைத்தறி உள்ளிட்ட துறைகளை சண்முகம் கவனிப்பார் என அறிவிப்பு.

4வது தனி செயலாளர் அனு ஜார்ஜ் வசம் உள்ள 12 துறைகள் பிற தனி செயலாளர்களுக்கு பிரித்து ஒதுக்கீடு.

* மக்களை தேடி மருத்துவம்: தவறான புள்ளி விவரங்களை தந்துள்ளதாக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்.

ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள்
முடிவடைந்த பிறகும்,
முந்தைய ஆட்சியின் மீது குறைகள் சொல்லியே ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு ரூபாய் அரசின் சார்பாக
செலவிடப்பட்டுள்ளது?

ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களை முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் வெளியிட வேண்டும் –  எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

* காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் – சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை.

மாதாந்திர ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி விசாரணை நிலையை கண்காணிக்க வேண்டும்;

சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும்; மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்
– மு.க.ஸ்டாலின்

முக்கிய தகவல்களை கொண்டு முழுமையாக கண்காணிப்போடு செயல்பட வேண்டும்.

சார்ஜ் ஷீட் பைல் பண்ணுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அதில் தாமதம் காணப்பட்டால் நீதிக்கு நாம் செய்யும் பிழை.

காவல் கண்காணிப்பாளர்கள், களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.

கிராம, நகர மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது கலந்துரையாட வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து எதிர்கட்சி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்.

திட்டத்திற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பயனாளிகள் பட்டியலை தரத் தயார்: அமைச்சர் மா.சுப்ரமணியன்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அமைச்சரே இந்தியா முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

மக்களை தேடி மருத்துவம் விவரங்களை எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானலும் நேரில் வந்து
பார்த்துக் கொள்ளலாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன், இபிஎஸ் அறிக்கைக்கு பதிலடி

* எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் பல்திறன் தேர்வை தமிழிலும் எழுத மத்திய அரசு அனுமதி.

தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

தகுதி உள்ளவர்கள் பிப்ரவரி 17ம் தேதிக்குள், https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

* விருதுநகர் : கணஞ்சாம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அறைகள் தரைமட்டம்.

ஒருவர் உயிரிழப்பு, 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழப்பு 2 ஆக அதிகரிப்பு.

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்.

* இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது என்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

விசாரணைக் குழுவில் 2 பெண் பிரிதிநிதிகள் இருக்க வாய்ப்பு என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது. வீரர்கள் அளித்த புகார் குறித்து மல்யுத்த கூட்டமைப்பிடம் விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பாஜக எம்பி மீதான பாலியல் புகாரின் விவரம்: https://youtu.be/XX9elCNnDcQ

* திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எதிராக அவதூறு வழக்கு: ஆளுநர் சார்பில் தாக்கல்

ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசி உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் தரக்குறைவாக பேசியதால், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் செயலாளர், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதை பார்க்க:- https://youtu.be/9ItbMI2eFLg

* பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி விடியோவுக்கு மத்திய அரசு கண்டனம்!

குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பதவியில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் தரம்தாழ்ந்த வகையில் விடியோ பரப்புவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

2002 குஜராத் கலவரத்தில் நடைபெற்ற விசாரணை மற்றும் அப்போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” (பகுதி 1) என்ற ஆவணப்படத்தை செவ்வாய்க்கிழமை (ஜன.17) பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது.

அதனைத் தொடர்ந்து மறுநாள் யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இந்நிலையில், பிபிசி வெளியிட்ட இந்த ஆவணப்படத்துக்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை. இதனால், ஆவணப்படம் குறித்து கேட்டதையும், எனது நண்பர்கள் பார்த்ததையும் வைத்துதான் நான் எனது கருத்துகளைப் பதிவு செய்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எதிராக தரம் தாழ்ந்த கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முழுக்க ஒற்றைச்சார்பு மனநிலையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

* ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு.

திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு.

* காவல்துறை பணி தொடர்பான தமிழக அரசின் சட்டத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

காவல்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறையில் 10% இடஒதுக்கீடு செய்ததை உறுதிப்படுத்தியது.

* இன்றைய புத்தக மொழி 19.01.2023
📚📚📚🌹📚📚📚

கடந்து போன
நேரத்தை
விலைக்கு வாங்கும்
அளவிற்கு
பணக்காரர்கள் யாரும் இல்லை.
– ஆஸ்கார் வைல்ட் –
📚📚📚🌹📚📚📚

* டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவாலிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கார் ஓட்டுநர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். அதிர்ஷ்டவசமாக கடவுள் என் உயிரை காப்பாற்றியதாக சுவாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)