Home » அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (19.10.2022) முக்கிய செய்திகள்.

* பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்

காந்திநகரில் ‘டெஃப் எக்ஸ்போ 2022’ என்ற ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்

சுமார் ₨15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

* மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும்” – வழிகாட்டு நெறிமுறைகள்

போக்குவரத்து கழக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

‘மாணவர்களின் முறையற்ற பயணத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும்’

அதனை மாணவர்கள் மீறினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர அழைப்பு எண்ணுக்கோ (100) அழைக்க வேண்டும்!”

* மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நாளையும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரடியாக நடைபெறுகிறது.

அதேபோல் இன்று முதல் 25ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வும், 21 முதல் 27ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணைய வழியில் நடைபெறுகிறது.

* ஐசிசி வெளிட்ட மகளிர் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 2வது இடத்தையும், ஷபாலி வர்மா 7வது இடத்தையும், ஜெமிமா 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்

* தொடர் மழையால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிப்பு.

* பேருந்தில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு.

அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை.

மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும்.

அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ நாடலாம் – போக்குவரத்துக் கழகம்.

* எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்

சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது காவல்துறை.

* மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றி மத்திய அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான பல விவகாரங்களில் சிறப்பாக பணியாற்றிய ஐபிஎஸ் விஜயகுமார் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஐபிஎஸ் ஆர்.என் ரவி & ஐபிஎஸ் அண்ணாமலையோடு சேர்ந்து ஐபிஎஸ் விஜயகுமார் ஏதோ ‘சிறப்பாக’ செய்யவிருப்பதாக சொல்கிறார்கள். விவரங்களுக்காக காத்திருப்போம்.
JOIN US: https://t.me/Agnipuratchi1

* தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்.

நெல்லை, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல்.
ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்ததற்கு கண்டனம்.

* கனியாமூர் வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு:

கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி உயிரிழந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு.

வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி.

கல்வி நிறுவனங்களில் நடக்கும் இயற்கைக்கு மாறான மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு திருத்தம் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினரே விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* அதிமுக இடைகாலப் பொதுச்செயலாளர் பேட்டி:

சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார். எம்எல்ஏ.,க்கள் ஆதரவு அடிப்படையில் இருக்கை ஒதுக்க வேண்டும்.

சட்டசபையில் அதிமுக.,வினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
நேற்று சட்டசபை முடிந்த பிறகு ஸ்டாலினும், ஓபிஎஸ்.,சும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அதிமுக.,வை சிதைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது.

* தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாக மழை பெய்யவில்லை,கரை உடையவில்லை.

ஆனால் முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மழையோ மழை என பெய்துவருகிறது.

ஒரே நேரத்தில் பல இடங்களில் இதெல்லாம் நடைபெறுவதால் எவை முக்கியமானதோ அதை உடனடியாக செய்து தருவோம்- அமைச்சர் துரைமுருகன்.

தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் 6 மாத காலத்திற்கு முன்பு பெருவெள்ளத்தால் ஏற்பட்ட கரைகள் உடைப்பை சீரமைக்க கோரிய கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பனுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்.

* பேரவையில் விதி எண்.110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:

தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாகவும் மாற்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது; திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

புதிதாக சேர்ந்த மாணவர்களின் வசதிக்காக அரசுப்பள்ளிகளில் ரூ.1,050 கோடி மதிப்பில் 7,200 வகுப்பறைகள் நடப்பு ஆண்டிலேயே புதிதாக கட்டப்படும்; பாதுகாப்பான கற்றல் சூழல் உறுதி செய்யப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை; சிறப்பு நிதியாக ரூ.2,200கோடி வழங்கப்பட்டு 4,600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் நடப்பு ஆண்டிலேயே மேம்படுத்தப்படும்.

ரூ.7,388 கோடி மதிப்பில் 16,390 கி.மீ., நீளமுள்ள சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

ரூ.500 கோடி மதிப்பில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

2,013 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகளை வாங்க நடவடிக்கை.

இலவச பேருந்து கட்டணம் திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.2,000கோடி சேமிப்பாக மாறியுள்ளது.

இதனை அரசு வருவாய் இழப்பாக கருதவில்லை. மகளிருக்கான வளர்ச்சியாகத் தான் பார்க்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி.

ஆன்லைன் சூதாட்டத்தினால் கல்வி, தொழில் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு பலம், படைப்பாற்றல்களும் பாதிப்புக்குள்ளாகிறது. சூதாட்டம், இணையவழி விளையாட்டுகள் இயற்கையில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை – சட்ட முன் வடிவு.

* வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: தீபாவளியை தாக்குமா?

புவனேஸ்வரம்: தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியானது புயல் சின்னமாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்கு பகுதியில் நிலைகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN US: https://t.me/Agnipuratchi1

* தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பாராட்டு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பொதுமக்களின் நலனை விரும்பி சேவையாற்றிய தமுமுகவிற்கு பாராட்டு

“துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும்”

“எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியோர் புரிந்த மனிதாபிமான சேவைகள் ஆணையத்தின் சிறந்த பாராட்டைப் பெறத் தகுந்தவை. – அருணா ஜெகதீசன் அறிக்கை.

* துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய, சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது

கடந்த 17-ம் தேதி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டி

நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 96 சதவீத வாக்குகள் பதிவானது

டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் கார்கே ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

24 ஆண்டுகளுக்கு பின் காங். தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தேர்வு.

* மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல்:

மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுரை.

கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் தொடர்பாக வழக்கு.

இறந்து போன மாணவர்களின் உடலை வைத்து அரசியல் செய்வது வழக்கமாகி வருகிறது, அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு.

இறந்த மாணவனின் உடலை நாளை காலைக்குள் பெற்றோர் வாங்கி கொள்ள வேண்டும், தவறினால் மாவட்ட நிர்வாகம் இறுதி காரியங்களை செய்ய வேண்டும் – நீதிபதி.

* டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை:

டெல்லியில் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ ரூ.200 அபராதம், 6 மாதம் சிறை.

பட்டாசு தயாரித்தாலோ, விற்றாலோ ரூ5,000 அபராதம், 3 வருடம் சிறை – சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த 2023 ஜன.1ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதித்திருந்த நிலையில் அறிவிப்பு.

* ஆடைத்துறையில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதி நெருக்கடியை போக்கிட வேண்டும்

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சிறப்பு அவசர கால கடன் வரி உத்தரவாத திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது

கொரோனா, உக்ரைன் போரால் ஆடை ஏற்றுமதியில் நெருக்கடி – முதல்வர் ஸ்டாலின்

error

Enjoy this blog? Please spread the word :)