Home » அக்னிப்புரட்சி இன்றைய (20.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (20.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (20.01.2023) முக்கிய செய்திகள்.

* தனியார் பால் விலை உயர்வு… லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk) லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும்

சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) பழைய லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 62 இலிருந்து 64 ரூபாயாகவும்,

நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தயிர் (TM Curd) 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

TELEGRAM: t.me/agnipuratchi

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும்” – அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு

“தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொண்டோம்”

கூட்டணி கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு- ஜி.கே.வாசன்

* கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்தியதாக கூறப்படும் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

* சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.42,600க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,325 ஆக உள்ளது.

* ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் “- மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.

* புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது.

மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் ஏற்றுகொள்ளமாட்டார்- சென்னையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

* ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு: அண்ணாமலை தகவல்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பெங்களூரில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் தமாகா தலைவர் வாசனிடம் தொலைபேசியில் கலந்து பேசி இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் நான் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை.

கட்சித் தலைமை என்னை தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்காக பணியை ஒப்படைத்துள்ளது அந்த பணியை நான் செய்து கொண்டு இருக்கிறேன். விரைவில் தமிழ்நாடு முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக பாதயாத்திரை நடத்த இருக்கிறேன் அது ஓர் ஆண்டு ஆகும். எனவே எனக்கு கட்சியின் வளர்ச்சி தான் முக்கியம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பாஜ போட்டியிடுமா இல்லையா என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்து அறிவிக்கும்.

விமானத்தில் கதவு திறந்த சம்பவம் மிகைப்படுத்தப்பட்டது. மாண்டஸ் புயலுக்கு அடுத்த நாள் காலையில் திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்தானது.

இதனால் 10 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் 11 மணிக்கு புறப்பட்டது. அதில் நானும், கர்நாடகா மாநில எம்பியும் இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவும் சென்றோம்.

எம்ஜென்சி கதவு அருகே 4 பேர் உட்கார்ந்திருந்தோம். அப்போது விமானம் புறப்படும்போது, ஏசியை தேஜஸ்வி சூர்யா சரிசெய்தார். அப்போது தெரியாமல் எமர்ஜென்சி கதவு பட்டனில் கை பட்டுவிட்டது. இதன் பின்னர் விமானம் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. இன்ஜினியர்கள் எங்களிடம் விசாரித்தனர். நாங்கள் நடந்ததை கூறினோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு – தினகரன்

ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்

இரட்டை இலை சின்னம் இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது – தினகரன்

* முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

sdat.tn.gov.in இணையதளம் மூலம் லட்சக்கணக்கானோர், ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி ஆகும். சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளது.

* ஒரே நாடு ஒரே தேர்தல் வேகமாக பிஜேபியால் முன்வைக்கப்படுகிறது, இது சாத்தியமற்றது என அனைவருக்கும் தெரியும்”

“சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில்  நடத்துவது எந்த வகையில் சாத்தியம்”

“ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு  அளிக்கும்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்”
-இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்

* டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யவும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை முழுமையாக கலைக்கவும் கோரிக்கை

மல்யுத்த முன்னனி வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், ரவி தஹியா மற்றும் தீபக் புனியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

* புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஜனவரி 31, 2023 அன்று புதிய பாராளுமன்றத்தில் இருந்து கூட்டு அமர்வில் மாண்புமிகு ஜனாதிபதி உரையாற்றுவார்.

பிப்ரவரி 1, 2023 அன்று நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வார்.

* டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா?-தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது.

தேர்வர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது.

* மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாரிசு, துணிவு திரைப்படங்களை ஜனவரி 11,12,13,18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ்.

15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அட்சியர் எச்சரிக்கை.

* ஆஸ்திரேலியாவின் மெல்போனில் இருந்து, டெல்லிக்கு, 277 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் இன்று மாலை சென்னையில் அவசர தரையிறக்கம்.

எரிபொருள் குறைவாக இருந்ததால் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டது.

* போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடி நடவடிக்கை.

விக்கிரவாண்டியில் தரமற்ற உணவு வழங்கியது மற்றும் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவகத்தில், அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை.

பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நடவடிக்கை.

* குடியரசு தின ஒத்திகைக்கு மத்தியில் டெல்லியில் ஆங்காங்கே காலிஸ்தானி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும்  நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகின்றன.

வரும் 23ம் தேதி ஒத்திகைகள் நடத்தப்படும்; அதனால் கர்தவ்யாபத்தை  சுற்றியுள்ள பகுதியில், டெல்லி காவல்துறையில் நாசவேலை தடுப்பு பிரிவினர்  சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடத்தப்பட்ட சோதனைகளில் டெல்லியின் விகாஸ்புரி, ஜனக்புரி, பஸ்சிம் விஹார், பீராகர்ஹி, மேற்கு டெல்லியின் சில பகுதிகளில், காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக ‘நீதி கேட்கும் சீக்கியர்கள், காலிஸ்தானி ஜிந்தாபாத் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக டெல்லி போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவினரும் அப்பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பதுதான் உதயநிதியின் அடையாளம். அதற்காகவே அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி – அரியலூர் எம்‌.ஜி.ஆர் பிறந்தநாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

சாதாரண தொண்டனாகிய நான் உங்களால் இன்று தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளேன். தொண்டர்களுக்கு என்றும் நன்றியுள்ளனவாக இருப்பேன்.

*திமுக ஆட்சி அமைந்த பின் நீட் தேர்வால் 15 உயிர்கள் பறிபோயுள்ளது. முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்?- எடப்பாடி பழனிச்சாமி.

நீட் தேர்வு ரத்து செய்வதன் ரகசியம் எனக்கு தெரியும் என்ற உதயநிதி இப்போது என்ன செய்கிறார்?

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் கட் செய்து கொண்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் வரி விதித்து மக்களுக்கு துன்பத்தை தந்து கொண்டிருக்கிறது திமுக அரசு.

திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் முடிந்தும் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி திட்டங்களை நிறைவேற்றாதது ஏன்?

TELEGRAM: t.me/agnipuratchi1

மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் எண்ணிக்கை பொய்யானது – எடப்பாடி பழனிச்சாமி.

ஒருவர் பெயரை 3 வலைத்தளங்களில் மாற்றி, மாற்றி நுழைத்து பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அரைவேக்காட்டுத் தனமாக, பதில் தந்து கொண்டுள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வாங்கும் படங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

இன்றைக்கு 150 படங்கள் வெளியிட முடியாமல் பெட்டிகளில் முடங்கி கிடக்கிறது. அதற்கு காரணம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ்.

அரசு அனுமதியின்றி தினசரி 5 காட்சிகள் இந்நிறுவனத்தின் படங்களை வெளியிடுவது எப்படி?- எடப்பாடி பழனிச்சாமி.

TELEGRAM: t.me/agnipuratchi1

* கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தகவல்

கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

TELEGRAM: t.me/agnipuratchi1

error

Enjoy this blog? Please spread the word :)