அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (20.10.2022) முக்கிய செய்திகள்.
* இராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பயணிகள் காயம்
காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி!
* டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டியில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் இன்று காலை 9.30 மணிக்கு பலப்பரீட்சை
பிற்பகல் 1.30க்கு ஆஸ்திரேலியாவின் கீலாங்கில் நடைபெறும் போட்டியில் நமீபியா-ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதல்
* குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு மற்றும் அபராதம்.
புதிய போக்குவரத்து விதியை நேற்று நள்ளிரவு முதல் அமல் படுத்தியது சென்னை போக்குவரத்து காவல் துறை.
டூவீலர், கார்களில் குடிபோதை ஓட்டுனருடன் அமர்ந்து பயணிப்பவருக்கும் அபராதம்.
அபராத தொகையாக ரூ.1000 முதல் ரூ.10000 வரை வசூலிக்க வாய்ப்பு.
* முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுனருடன் பயணம் செய்வோருக்கு அபராதம் இல்லை- புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
* வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்.
* உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி
உக்ரைனுக்கு இந்தியர்கள் வரவேண்டாம்; உக்ரைனில் உள்ள இந்தியர்கள் சீக்கிரம் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
* உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon D’or விருதை தட்டிச் சென்றார் கரீம் பெஞ்சிமா!
பிரான்ஸ் கால்பந்து இதழியல் சார்பில் 2021-22ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் ‘BALLON D’OR’ விருதை முதல்முறையாக தட்டிச் சென்றார் பிரான்ஸை சேர்ந்த கரீம் பெஞ்சிமா!
இவ்விருதை 7 முறை வாங்கிய மெஸ்ஸியும், 5 முறை வாங்கிய ரொனால்டோவும் இம்முறை டாப் 3 பட்டியலில் இல்லை!
* இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு.
சைபர் பாதுக்காப்புத்துறைக்கான பாடத்திட்டத்தை அறிவித்தது பல்கலைக்கழக மானியக் குழு.
* இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வு.
இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான 7.5% சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு.
7.5% பிரிவின் கீழ் 454 எம்பிபிஎஸ் இடங்கள், 104 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன; இந்த 558 இடங்களுக்கு 2,764 பேர் போட்டி.
* ஆம்புலன்ஸ் – வழிவிடாதவர்களுக்கு அபராதம்:
தமிழ்நாட்டில் உள்ள சாலைகளின் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்வோருக்கு ரூ.10,000 அபராதம் – தமிழ்நாடு அரசு அரசாணை.
தேவையில்லாமல் தடை செய்யப்பட்ட இடங்களில் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் அபராதம்.
* அறிவுரை: மேம்படுத்தப்பட்ட சேவைகளைப் பெற, உங்கள் ஜியோ எண்ணின் சிம் கார்டை மாற்றச் சொல்லும் மோசடி செய்திகள் குறித்து ஜாக்கிரதை. இ-மெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். OTPகள் மற்றும் பிற நிதித் தகவல்கள் போன்ற ரகசியத் தகவல்களைத் திருட, மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தை ஹேக் செய்யலாம். – ஜியோ
JOIN US: https://t.me/Agnipuratchi1
* கோவை, சண்முகா நகர் பகுதியில் நகை பட்டறையில் ஒரு கிலோ தங்கம் திருட்டு நகை பட்டறையில் வேலை செய்த பிரமோத் என்பவர் திருடி சென்றதாக புகார்
* அரசாணை (G.O):
குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கும் ஃபைன்..! – சென்னையில் புதிய விதி அமல்
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விலக தயார்.
நிரூபிக்கவில்லை என்றால் இபிஎஸ் விலக தயாரா?-சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி.
* டி20 உலகக்கோப்பை – நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 162 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி
தொடர்ந்து ஆடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
* சைக்கிளில் செல்லுங்கள் – மோடி அறிவுரை!
குஜராத் மாநிலம் கேவாடியாவில் பிரதமர் மோடி ‘மிஷன் லைஃப்’ இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் ஏசி வெப்பநிலையை 17 டிகிரி அளவுக்கு குறைப்பதால் சுற்றுச்சூழலில் எதிர்மறையான மாற்றம் ஏற்படுகிறது. அதோடு, சைக்கிளை பயன்படுத்துவதால் நம் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். பருவநிலை பிரச்னையை எதிர்த்து போராட இந்த திட்டம் உதவும்” என்றார்.
* தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள்
இ-சேவை மையங்களுக்கான நவீன மேசை கணினிகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* தமிழகத்தில் நான் தலையை நுழைக்கிறேன் என்று சொல்கிறார்கள் ஆனால் நான் இப்போது சொல்கிறேன் நான் தமிழகத்தில் தலையை நுழைப்பேன்., அதை யாராலும் தடுக்க முடியாது – புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பேட்டி.
* அண்ணாவை விமர்சித்தவர் தமிழ் இணையக் கல்விக் கழக குழுவிலிருந்து நீக்கம்
தமிழ் இணையக் கல்வியின் ஆலோசனைக் குழுவிலிருந்த பத்ரி சேஷாத்திரி என்பவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. “இந்தி குறித்துப் பேசும் அண்ணாவும் இடியட்தான்” என்று குறிப்பிட்ட காரணத்திற்காக இவர் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
* கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் விவரங்களை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in-ல் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2022ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மாலை நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன
தீபாவளியை முன்னிட்டு, நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.
எனவே, 2022 அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட கூடுதல் மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 20.10.2022 (வியாழன்), 21.10.2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 22.10.2022 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* கழிவுநீர் தொட்டி, கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த தனி நபரை நியமிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த 044 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
* குஜராத்தில் ஒற்றுமை சிலை முன்பு பிரதமருடன் ஐ.நா பொதுச் செயலாளர் சந்திப்பு…
குஜராத்: குஜராத்தில் ஒற்றுமை சிலை முன்பு பிரதமருடன் ஐ.நா பொதுச் செயலாளர் சந்தித்தார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல், 2வது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்திய பயணத்தின் முதல் நாளான நேற்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், குஜராத் சென்ற அவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநிலம் கேவாடியாவில் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* ஸ்வீடனை சேர்ந்த வால்வோ கார் நிறுவனம் “வால்வோ எக்ஸ்.சி., 40 ரீசார்ஜ்” எனும் மின்சார SUV காரை அறிமுகம் செய்துள்ளது. இது முழுவதும் இந்தியாவில் தயாரானதாகும்.
* இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் திடீரென ராஜினாமா!
இங்கிலாந்து பட்ஜெட் சர்ச்சைக்குள்ளான நிலையில் பொறுப்பேற்ற 45 நாட்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் லிஸ் ட்ரஸ்.
பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
இங்கிலாந்து வரலாற்றில் மிக குறுகிய காலம் (45 நாள்கள்) பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற லிஸ் ட்ரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
