Home » அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2023) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2023) முக்கிய செய்திகள்.

* தை அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர், மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.

கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சாமி தரிசனம்.

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம்- ஓ.பன்னீர்செல்வம்.

பா.ஜ.க. போட்டியிடுவதற்காக முடிவு செய்தால், அவர்களுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவிக்கத் தயார்.

சின்னம் முடங்குவதற்கான காரணமாக ஒரு காலமும் இருக்க மாட்டேன்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன்.

இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்.

அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு – ஓபிஎஸ்.

* சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 2 பேர் சிக்கினர்.

கைதான பிரவீன்குமார், மகேஷ் ஆகியோரிடம் இருந்து 500-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

* இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் (10,032) அபராதம் விதிப்பு!

100க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி பிரதமர் ரிஷி சுனக் வீடியோ மூலம் பேசினார்;

அந்த வீடியோவில் அவர், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன; அதற்கு அவர் மன்னிப்பும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* ஐஐடி மெட்ராஸ் ‘BharOS’ என்று அழைக்கப்படும் உள்நாட்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது.

* சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தின் 3ம் வழித் தடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 45.8 கி.மீ. வழித்தடத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு எல்லையில் மெட்ரோ திட்டம் அமைகிறது.

* சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கால் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும் துரைப்பாக்கம் மக்கள் புகார் கூறுகின்றனர். பெருங்குடி குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* உலகத்தில் இந்தியாவில் மட்டுமே 80 ஆயிரம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன”

நெல்லையில் ஏ.பி.வி.பி 28வது மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

* சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தேங்கி கிடக்கும் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ள அரசிடம் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது

₹641 கோடி மதிப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது – சென்னை மாநகராட்சி

* தேனீர் குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

அதில் பெரும்பாலும் அவருக்கென எதுவும் மிஞ்சாது. வேலையிடத்தில் பசியைப் போக்க தேநீரோ மற்ற பானங்களோதான் அவருக்கு உணவு என்று ஆகிப்போனது. வாழ்க்கையோட்டத்தில் அந்த வேலையை அவர் விட்டு விட்டபோதும், உணவுப் பழக்கம் மாறவில்லை. தேநீரும் சத்து பானங்களும்தான் என அனிமாவின் உணவுமுறை அமைந்துவிட்டது.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவு உட்கொள்ளவில்லை என்றபோதும், ஆரோக்கியமாகவே இருக்கிறார். முதலில் அந்த கிராமத்துக்காரர்களுக்கே இதுகுறித்து தெரியாமல் இருந்தது. தெரிந்தபிறகு அவர்கள் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். ஆனால் உரிய ஊட்டச்சத்துகள் கிடைத்தால் போதும்; திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை என்கிறார்கள், மருத்துவர்கள். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு, திரவ வடிவில்தானே உடலுக்குத் தேவையான ஊட்டம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இதனால் எந்த பாதகமும் இல்லைதானே என விரிவான விளக்கத்தையும் மருத்துவர்கள் அளிக்கிறார்கள்.

TELEGRAM: t.me/agnipuratchi1

* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை அறிவிப்பார்

இடைத்தேர்தலில் ஆதரவளிக்கக் கோரி பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்

இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்கக் கோரி அண்ணாமலையை சந்தித்த பின் ஜெயக்குமார் பேட்டி

* குஜராஜ் கலவரம் தொடர்பாக மோடி குறித்து வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர் லிங்க்குகள் இந்தியாவில் முடக்கம்.

* தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆமைகள் காப்பகம், மறுவாழ்வு மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் ஆமைகள் காப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆலிவ் ரிட்லி, கிரீன், லெதர்பேக், ஹாவ்க்ஸ்பில், லோகர்ஹெட் உள்ளிட்ட கடல் ஆமை இனங்களை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கடல் ஆமைகளின் முட்டைகளை சேகரித்து, குஞ்சு பொரித்து கடலில் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது என ஐகோர்ட் கூறியுள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் நீதிபதி கூறினார்.

* புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்- தொட்டியை இடிக்க அரசு அனுமதி.

புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது எம்.பி. நிதியில் இருந்து 9 லட்சம் ஒதுக்கியுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)