Home » அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (21.10.2022) முக்கிய செய்திகள்.

* கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

* கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

* கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

* சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, வேளச்சேரி, துரைப்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

* மூத்த வழக்கறிஞர், அரசியலாளர், கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து நீக்கம்.

தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள வரிகள்
————————————
நண்பர்களே நான் பிரியப் போகும் இந்த நேரத்தில்
என்னை வாழ்த்தி அனுப்புங்கள்!
வானத்தில் வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது
எனது பாதையும் அழகைப் பொழிகிறது
நான் என்னுடன்
என்ன கொண்டுபோகிறேன் என்று கேட்காதீர்கள்
வெறுங்கையுடன் ஆர்வ இதயத்தோடு என் யாத்திரை
ஆரம்பமாகின்றது.
நான் எனது திருமண மாலையை அணிந்து கொள்கிறேன்.
எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று
பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும்
என் மனதில்
எவ்வித பயமும் இல்லை.
எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம்
எட்டிப் பார்க்கும்
அரசனின் அரண்மனையிலிருந்து
அந்தி மாலையின் சோக  கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும்.

நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தாலேயே
மரணத்தை நேசிக்கிறேன்.

– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

* 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்.

பேராசிரியர்கள் 27 பேரை முதல்வராக பணி உயர்வு செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.

பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும்.

27 அரசு கலைக் கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்கிட வேண்டும் – கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.

* துப்பாக்கிச்சூடு – மீனவர் காயம்.

மன்னார்வளைகுடா பகுதியில் நிறுத்துமாறு கூறியும் நிற்காமல் சென்ற படகு மீது இந்திய கடற்படை ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு.

படகில் இருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் காயம்.

* பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ‘காவலர் வீரவணக்க நாள்’ இன்று நாடுமுழுவதும் அனுசரிப்பு!

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நினைவுச் சின்னத்தில், டி.ஜி.பி. சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – காவல் துறையில் 4 பேர் சஸ்பெண்ட்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம்

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஜிபி உத்தரவு.

நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக திருமலை தற்போது பணியாற்றி வருகிறார்.

சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் – டிஜிபி சைலேந்திர பாபு.

* டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின்  தகுதி சுற்றிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.

2 முறை உலகக்கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி.

* அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பெரும் விபத்து

அப்பர் சியாங் மாவட்டம் டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் விபத்து

சிங்கிங் கிராமத்தில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை – மீட்பு பணிகள் தீவிரம்

* காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது 3 பேர் உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டியில் மூழ்கிய மூன்று பேரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

* சென்னை அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் உதவி.

அவ்வழியாக சென்றுக்கொண்டிருக்கையில் விபத்தில் சிக்கியவரை மீட்க முதலமைச்சர் ஏற்பாடு செய்தார்.

தலையில் ரத்த காயத்துடன் மீட்கப்பட்டவர் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 பேர் சஸ்பெண்ட்.

சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம்.

தலைமை செயலாளர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

* இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு ரூ.2 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவு.

இந்திய கடற்படையால் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

இந்திய கடற்படையே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது, அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* தீபாவளி சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் ராமேஸ்வரம் வழி…

எழும்பூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர். வரும் ஞாயிறு இரவு தேவைப்படுவோர் உபயோகப்படுத்தி கொள்ளவும்…

* புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் செவ்வாய்கிழமை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

error

Enjoy this blog? Please spread the word :)