Home » அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (22.10.2022) முக்கிய செய்திகள்.

* மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக ட்ரென்டாகி வருகிறது.

அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி.

இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஐந்து மடங்கு பெரிதாக்கப்பட்ட எறும்பின் முகம்.
இதில் கண்கள், மூக்கு, கூர்மையான பற்களை கொண்ட வாய் என அனைத்தையும் தெளிவாக பார்க்க முடிகிறது.

இவையனைத்தும் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன்களின் உருவங்களை ஒத்து உள்ளதாக பலர் கூறியுள்ளனர்.

* கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளா்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவா்களுக்கு முதல்வா் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது.

விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பத்தை இங்கே பதிவிறக்கலாம்.

https://tamilvalarchithurai.tn.gov.in/

கடைசி தேதி: டிச.31. கூடுதல் தகவல் பெற 044 – 28190412, 28190413 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்

* ரிஷி சுனக்கை விலகச் சொன்ன போரிஸ்?

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் உள்ளனர்.

ரிஷி சுனக்குக்கு 55% ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியை காப்பாற்ற, அவரை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி வருவதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

* CMDA நிர்வாக எல்லை விரிவாக்கம் – 1,225 கிராமங்கள் புதிதாக சேர்ப்பு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) நிர்வாக எல்லை, 1,189 சதுர கி.மீ. அளவில் இருந்து 5,904 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது!

காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் வரையில், 1,225 கிராமங்கள் புதிதாக CMDA வரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல்!

* இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு:
மயிலாடுதுறை மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறை வழக்குப்பதிவு.

* தொலைக்காட்சி ஒளிபரப்ப மாநில அரசுகளுக்கு தடை:

மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு.

இந்த அறிவிப்பால் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

* காசி தமிழ் சங்கமம்
மத்திய அரசு Ministry of Education சார்பில், காசிக்கும், தமிழகத்திற்கும், இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைந்து போற்றும், ‘காசி தமிழ் சங்கமம்’, வாரணாசியில், 16 நவம்பர் முதல் – 16 டிசம்பர் வரை நடைபெற இருக்கிறது!

விவரங்களை kashitamil.iitm.ac.in என்ற இணையத்தில் காணலாம்.

* விசாரணைக் கைதி தற்கொலை:
சோழவரம் அருகே, மெத்தாபெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ராயப்பன் என்பவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக திருவள்ளூர் – அயப்பாக்கத்திற்கு அழைத்து வந்த போது, 3 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

* தங்கம் விலை உயர்வு:
சென்னையில் ஆபரண தங்கத்தை விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,920 க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,740 ஆக உள்ளது.

* வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு, அதை ஒட்டிய வங்கக்கடலில் அக்.24 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுவரை 5 போலீஸ் அதிகாரிகள், 3 தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* பிரிட்டன் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சன் முயற்சி என தகவல்?

லண்டன்: 2024 ல் பார்லிமென்ட் தேர்தலில் தன்னால் மட்டுமே , கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும் என எம்.பி.,க்களிடம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தரப்பினர் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது..

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும்.அதன்படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

இதில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டனர். இதில் வென்று நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார்.

ஆனால், கட்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் பதவி விலகினார்.

இச்சூழ்நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்கை பிரதமராக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரம் நடக்கும் எனவும், வெள்ளிக்கிழமைக்குள் முடிவு எடுக்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது.

தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் முன்னிலையில் உள்ள நிலையில், போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும்படியும், தான் மீண்டும் பிரதமராக வழிவிடும்படி போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

2024 டிச., மாதம் நடக்கும் பொதுத்தேர்தலில், கட்சி தோல்வியடைவதை தடுக்க தன்னால் மட்டுமே முடியும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.,க்களிடம் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பார்லிமென்டில் மெஜாரிட்டி இருந்தும் மக்களின் ஆதரவை இழந்துவிட்டதால், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், ரிஷி சுனக்கை தொடர்பு கொண்டு தன்னுடன் இணைந்து செயல்படும்படி போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

கோவிட் ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாகவும், பல முறை தடையை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

அடுத்த பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் மற்றும் போரிஸ் ஜான்சன் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், பென்னி மொர்டன்ட் என்ற பெண்ணும் போட்டியில் உள்ளார்.

இந்த போட்டியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் மற்றும் நிதி அமைச்சர் ஜெர்மி ஹண்ட் இருந்தாலும் அவர்கள் பின்வாங்கி கொண்டனர். பென் வாலஸ், போரிஸ் ஜான்சனை ஆதரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ம.பி. பேருந்து விபத்து – 14 பேர் பலி
மத்திய பிரதேசம்: ரேவா அருகே பேருந்து – டிராக்டர் மோதி விபத்து
14 பேர் உயிரிழப்பு – 40 பேர் படுகாயம்

* கனடாவில் கைதுப்ப்பாக்கி வாங்க, விற்க தடை!

சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரிப்பதால் புதிய சட்டம் அமல்.!

* மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

* 130 கோடி மக்களையும் கடவுளின் வடிவமாக பார்க்கிறேன்: பிரதமர் மோடி

உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கே கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் மானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 130 கோடி மக்களையும் கடவுளின் வடிவமாக பார்க்கிறேன். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தரிசனங்களால் எனது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது. என் மனம் மகிழ்ச்சியடைந்தது. இத்தருணங்கள் எனக்கு உயிர்ப்புடன் மாறியுள்ளன.

* இனி நீங்களே கூகுள் விளம்பரத்தை கட்டுப்படுத்தலாம்

கூகுள் நிறுவனம் அதன் பயனர்களே விளம்பரத்தை வடிகட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘My Ad Center’ பக்கத்தில், உங்களுக்கு எந்த மாதிரியான விளம்பரங்கள் அதிகம் வேண்டும், எது குறைவாக வேண்டும் உள்ளிட்டவற்றை நீங்களே உங்கள் விறுப்பத்தின் பேரில் கட்டமைத்துக்கொள்ள முடியும். மேலும் விரும்பத்தகாத விளம்பரத்தை தடை செய்யவும் முடியும்.

* நாட்டு மக்களை ஏமாற்றி விட்டோம்: மேற்கு இந்திய தீவுகள் கேப்டன்

டி20 உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் அயர்லாந்திடம் மிக மோசமாக தோற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இது குறித்து பேசிய மேற்கு இந்திய தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன், ”நானும், அணியினரும் மிகவும் மனம் உடைந்து போய்விட்டோம். நாட்டு மக்களையும், ரசிகர்களையும் ஏமாற்றி விட்டோம். இந்த தொடர் முழுவதும் பேட்டிங் சிறப்பாக செய்யவில்லை” என்றார்.

* 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை.

* ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து:

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று; நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து.

89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி.

201 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட்

நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னர், வேகப்பந்து வீச்சாளர் சவுதி தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டிற்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வழிகாட்டுதல்களை தயாரிக்க குழு அமைப்பு

குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம்

* பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அதற்கான நியமன கடிதத்தை மருத்துவர் இராமதாசு அய்யாவிடம் இருந்து பெற்று கொண்டார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்

* மேயருக்கு எதிராக உண்ணாவிரதம்: அமைச்சர் எச்சரிக்கை

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அய்யர் பங்களா பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

அமைச்சரின் வீட்டின் பின்புறம் உள்ள பகுதிகளிலேயே மழைநீர் குளம் போல தேங்கியதால் அமைச்சர் நேரில் ஆய்வு

நடவடிக்கை எடுக்காவிட்டால் மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன்
– அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

* நாளை முதல் சிவகங்கையில் 144 தடை சட்டம் அமல்!

தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர்கள் நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு – எஸ்.பி. செந்தில் குமார்

* தீபாவளிக்கு அதிக பட்டாசு வெடியுங்கள். சிவகாசி மக்களுக்கு உதவ வேண்டுகோள். ஒரு நாள் அதிக பட்டாசு வெடித்தால் ஒன்றும் பெரிய சூழலியல் பிரச்னை வந்துவிடாது. –
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

* பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுத்த போலி ரத்த வங்கி கும்பலை சேர்ந்த 10 பேர் கைது: உத்தரபிரதேசத்தில் மெகா மோசடி அம்பலம்…

லக்னோ: பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுத்த போலி ரத்த வங்கி கும்பலை சேர்ந்த 10 பேரை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரத்தத்தின் பிளாஸ்மா தேவை அதிகரித்திருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சிலர், போலியான ரத்த வங்கிகளை அமைத்து, பொதுமக்களை ஏமாற்றிவருகின்றனர்.

அந்த வகையில், பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதீப் பாண்டே என்பவருக்கு, பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரத்தத்தின் பிளாஸ்மாவும், சாத்துக்குடி ஜூஸும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி நிறத்தில் இருப்பதால், ரத்த வங்கியில் இருப்பவர்கள் இதுபோன்ற ஏமாற்று வேலையை அரங்கேற்றி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஷைலேஷ் குமார் பாண்டே கூறுகையில், பிரதீப் பாண்டே என்ற டெங்கு நோயாளி முறையான சிகிச்சையைப் பெற முடியாமல் இறந்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், முதலில் அலகாபாத் பகுதியிலுள்ள ரத்த வங்கியில் பிளாஸ்மா வாங்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான் அது போலி ரத்த வங்கி என்றும், பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக போலி ரத்த வங்கிய நடத்திய மற்றும் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே சட்டவிரோதமாக ரத்தம் கொடுத்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

error

Enjoy this blog? Please spread the word :)