அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2023) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2023) முக்கிய செய்திகள்.
* அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சின்னசாமி(85) என்பவர் உயிரிழந்தார்.
* பேருந்து விபத்து: மீட்பு பணியில் இறங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்
வேப்பூரிலிருந்து, விருத்தாசலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
அவ்வழியே சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வசதி செய்து தரக்கோரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்விடத்திலிருந்து மீட்பு பணியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
* முதலமைச்சருடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
கமல்ஹாசன், வேல்முருகன் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளேன்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்பமனு வழங்கலாம்- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை விருப்பமனு தாக்கல் செய்யலாம்.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனுவிற்கு
ரூ.15,000 கட்டணத்தொகையாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
* அந்தமான் நிக்கோபரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயகளை சூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
பரம்வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட 21 பேரின் பெயர்கள், 21 தீவுகளுக்கு சூட்டப்பட்டன.
* கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம்.
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே?
தென்மாவட்ட கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை யோசனை.
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்தார்.
* ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்குத் தடை.
சக ஆசிரியையை சாதிப் பெயர் சொல்லித் திட்டிய புகாரில் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தடை.
கடலூர் இடைச்செருவாய் அரசுப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார் போதையில் ஆசிரியை சாந்தியை திட்டியதாக எழுந்தப் புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* பா.ம.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
25-ஆம் தேதி தைலாபுரத்தில் நடைபெறும்!- பாமக அறிவிப்பு.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை மறுநாள் (25.01.2023) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
