Home » அக்னிப்புரட்சி இன்றைய (23.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (23.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (23.10.2022) முக்கிய செய்திகள்.

* 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.

2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது.

முதல் முறையாக சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படும்.

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது.

இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது.

இதில் ஏவப்பட்ட 36 செயற்கைக்கோள்களும் 640 டன் எடை கொண்டவை.

வர்த்தக ரீதியாக முதல் முறையாக இந்திய ராக்கெட் அதிக டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து செல்கிறது.

குறைந்த உயர புவி சுற்று வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகிறது.

தகவல் தொடர்பு வசதிக்காக 36 செயற்கைக்கோள்களும் ஏவப்படுகின்றன. இன்று அதிகாலை 12.07க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

* வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

எந்த சடங்குகளும் நடைபெறாமல் சான்றிதழ் வழங்கினால், அது போலி திருமண சான்றிதழாகவே கருதப்படும்-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

* நாளை புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.24ம் தேதி, அதாவது தீபாவளி நாளான நாளை புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், தீபாவளி அன்று  புயல் உருவானாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை இருக்காது

வட மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

* சிபிஐ-மாநில செயலாளர் முத்தரசன் கொரோனா பாதிப்பு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி.

இரண்டொரு நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தல்-பெரியசாமி,மாநில துணைச் செயலாளர்.

* சீன அதிபராக கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஷீ ஜின்பிங் 3-வது முறையாக தேர்வு.

கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு.

ஜின்பிங் கட்சி பொதுச்செயலாளராகவும், அதிபராகவும் மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பார்.

* டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று : அயர்லாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி.

129 ரன்கள் இலக்கை 15 ஓவர்களில் எட்டி இலங்கை அணி வெற்றி.

* கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக 6 தனிப்படை விசாரித்து வருகிறது – டிஜிபி சைலேந்திர பாபு.

காரை இதற்கு முன்பாக வைத்திருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்: அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது – டிஜிபி.

* மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து புதிய தலைமுறை செய்தியாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழப்பு.

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்த புதிய தலைமுறை செய்தியாளர் முத்துகிருஷ்ணன் (25) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நேற்றிரவு பணிமுடிந்து திரும்பும்போது ஜாபர்கான்பேட்டை பகுதியில் தோண்டப்பட்டிருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார் முத்துகிருஷ்ணன்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்கிருஷ்ணன் உயிரிழப்பு.

* 🏏 இந்திய அணி அபார வெற்றி:
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.

ஆனால், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன் எடுத்திருந்த ராகுல் 1.5 ஓவரில் நசிம் ஷா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

4 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா 3.2 ஓவரில் ஹரிஸ் ரவுல்ப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த சூர்யகுமார் 15 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் கோலி, பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், பாகிஸ்தான் வீரர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

19-வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா 19.1 ஓவரில் அவுட் ஆனார்.
அடுத்து தினேஷ் கார்த்திக் 19.5 ஓவரில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 4 ரன் எடுத்தார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

கோலி 82 ரன்னுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார்.

* புதிய தலைமுறை செய்தியாளர் முத்துகிருஷ்ணன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ₹3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவிப்பு.

கோவை :உக்கடம் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டது.

விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிப்பு.

2019-ல் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் இவரிடம்  விசாரணை நடத்தியதாக தகவல்.

* கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிப்பொருட்கள் கண்டெடுப்பு .

உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை, ஆனால் அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது.

சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம்-டிஜிபி சைலேந்திரபாபு.

* வரும் செவ்வாய்க்கிழமை (25.10.2022) பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு.

error

Enjoy this blog? Please spread the word :)