அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (25.10.2022) முக்கிய செய்திகள்.
* நாடு முழுவதும் இன்று மாலை சூரிய கிரகணம் தென்படுகிறது; இதை வெறுங்கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
கிரகணத்தை காண பிர்லா கோலரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரிய கிரகணம் காரணமாக காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படுகிறது.
* வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்.
எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே கரையை கடந்தது ‘சிட்ரங்’ புயல்.
புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் இதுவரை 5 பேர் உயிரிழப்பு.
* தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது
* தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு-தமிழக அரசு.
தமிழகத்தில் 200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.
வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு தமிழகத்தில் மோசமான நிலை.
தினமும் 8 முதல் 10 கொலைகள் தமிழகத்தில் நடப்பது வாடிக்கையாகிவிட்டது – -ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு.
* கோவையில் காருக்குள் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
* ரிஷி சுனக்- வாழ்க்கை
வரலாறு பிறப்பு – 12 மே 1980 வயது – 42 வயது
பெற்றோர் – யாஷ்வீர் சுனக் (தந்தை) உஷா சுனக் (தாய்)
கல்வி – வின்செஸ்டர் கல்லூரி லிங்கன் கல்லூரி, ஆக்ஸ்போர்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
மனைவி – அக்ஷதா மூர்த்தி
குழந்தைகள் – இரண்டு
தொழில் – அரசியல்வாதி & தொழிலதிபர் & முன்னாள் முதலீட்டு ஆய்வாளர்
நிகர மதிப்பு – £3.1 பில்லியன்
* ரிஷி சுனக்கால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்; இங்கிலாந்து மக்களுக்கு தன்னாலான சிறந்த விசயங்களை செய்வார் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்!
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி வாழ்த்து
* இன்று சூரிய கிரகணம்!
சூரியன், பூமி, சந்திரன் ஆகியன நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் ஆகும்.
இன்று மாலை 4.29 மணிக்கு தொடங்கி சரியாக ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நிகழவுள்ளது!
இந்தியாவில் மும்பை, தானே, டெல்லி, குஜராத், கோவா உள்ளிட்ட பகுதிகளில் தென்படும்; தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இதைப் பார்க்க முடியாது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கந்த சஷ்டி விழா இன்று செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் ஏழு நாட்கள் நடைபெறும். இத்திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முன்னதாக மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தசஷ்டி காப்பு கட்டுதல் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்கு பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார்.
ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக்களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.
* கந்தசஷ்டி சஷ்டி ஆரம்பம் – விரதமிருப்பது எப்படி?
கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.25 முதல் தினமும் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம்.
திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.
முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள்.
கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் அரோகரா கோஷமிடலாம்.
உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
தாகம் தீர்த்த வேலாயுதம்
திருச்செந்துாரில் உள்ள நாழிக்கிணற்றில் உள்ள தண்ணீர், கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்பு கரிப்பதில்லை. ஆனால் இந்த கிணறைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளில் உப்பு நீரே கிடைக்கிறது.
ஆனால் நாழிக்கிணற்றில் மட்டும் சுவையான நீர் கிடைக்க காரணம் என்ன தெரியுமா… சூரபத்மனுடன் போரிட்ட வீரர்கள் தாகத்தால் சிரமப்பட்டனர்.
அப்போது முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தமே இந்தக்கிணறு.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* யாரைக் காப்பாற்ற மூடி மறைக்கிறீர்கள்?- தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி.
சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
கோவை மாநகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
ஜூன் 2019ல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கோவையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதில் இருவர் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.
கோவையில் காஸ் சிலிண்டர் வெடித்ததாகவே கூறிவந்த அதிகாரிகள், பின்னர் கோலி குண்டு, ஆணிகள் உள்ளதாக கூறினர்.
அதன்பின்னர் அவரது வீட்டை சோதனை செய்ததில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி உள்ளிட்ட வெடிப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால், அதனை முறையாக தெரிவிக்காமல் இந்த அரசு மறைத்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு இரு நாட்களுக்கு முன்னதாக அக்.,21ல் ஜமேசா முபினின் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை முபின் பயன்படுத்தியுள்ளார்.
‘எனது மரணத்தை ஏற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்’ என்ற ஸ்டேட்டசை இருநாட்களுக்கு முன்னதாகவே வைத்துள்ளார்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாக யாராவது ஒரு பதிவு போட்டால் கூட அவரை கைது செய்து பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும் போலீசார், தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்தும், அவர்கள் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும் எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கவில்லை.
இன்னும் 8 பேர் போலீஸ் விசாரணையில் உள்ளனர், அவர்களை ஏன் கணக்கில் காட்டவில்லை?
யாரை காப்பாற்றுவதற்காக போலீஸ் அனைத்தையும் மூடி மறைக்கிறது?
ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் தான் முதல்வர் ஒப்புக்கொள்வாரா?
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மூலம் கலவர பகுதியாக கொங்கு பகுதி மாற்றப்பட்டு வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக ரகசிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நடந்த சம்பவத்தை தமிழக அரசு மூடி மறைப்பதாக குறிப்பிட்டுள்ளோம்.
என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம்.
2021ம் ஆண்டு வரை தமிழக உளவுத்துறை மிகவும் வலிமையாக இருந்தது.
என்ஜிவோ, மிஷனரி செய்கிற வேலையை தமிழக உளவுத்துறை செய்து வருகிறது.
உளவுத்துறையினர் அரசியலில் மட்டுமே உளவு பார்க்கின்றனர்.
தமிழக உளவுத்துறையில் 60 சதவீதம் பேர் குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களாக உள்ளனர்.
தமிழக போலீஸின் செயல்பாடு வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது- அண்ணாமலை.
* வாட்ஸ்அப் சேவை சீரானது
கடந்த ஒன்றரை மணி நேரமாக முடங்கியிருந்த வாட்ஸ் அப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.
வாட்ஸ் அப்-ல் குறுஞ்செய்திகள் அனுப்புவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம்.
வாட்ஸ்அப்பை விரைவில் முழு அளவில் மீட்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்- மெட்டா நிறுவனம் விளக்கம்.
* கோவை சம்பவம் – உபா சட்டம் பாய்ந்தது
கோவை: காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை.
கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது.
புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்.
🔴 பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்பு
மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒப்புதல் தந்ததையடுத்து ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றார்.
* 5 பிரிவுகளாக பிரிந்த சூரியன்
நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் 5 பிரிவுகளாக பிரிந்து அபூர்வமாக காட்சி அளிக்கும் சூரியனின் தோற்றம்
இடம் : சுவீடன் வனப்பகுதி
JOIN US: https://t.me/Agnipuratchi1
* இந்தியாவில் சூரிய கிரகணம்: தமிழகத்தில் 8% மட்டுமே தெரிந்தது.
சென்னை: இந்தியாவில் பல பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிந்தது.
இதனை மக்கள் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். தமிழகத்தில் 8 சதவீதம் அளவிற்கு மட்டுமே சூரியன் மறைப்பு நிகழ்ந்தது.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. ‛பகுதி சூரிய கிரகணம்’ இன்று (அக்.,25) இந்தியா, ரஷ்யா, கஜகிஸ்தான், வட அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் மும்பை, டில்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரகணம் மாலை 5 மணியளவில் பல பகுதிகளில் தெரிய துவங்கியது.
சென்னையில் மாலை 5:13 மணிக்கு கிரகணம் தெரிந்தது. 5.45 மணி வரை நீடித்தது.
தமிழகத்தை பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சில நிமிடங்களுக்கு மட்டும் மேற்கு வானில் சூரிய கிரகணம் தெரிந்தது.
இதனை மக்கள் அதற்கேற்ற பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக பார்த்து ரசித்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* பயணிகள் படகில் தீ விபத்து – 14 பேர் பலி
இந்தோனேஷியாவில் ‘கேஎம் எக்ஸ்பிரஸ் கான்டிகா 77′ என்ற படகில் 230 பயணிகள் உள்ளிட்ட 240 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், நடுக்கடலில் படகு சென்று கொண்டிருக்கும் போது திடீரென படகில் தீ பிடித்தது. இதில் 14 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 226 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா மீட்புப்படையினர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை, ‘இது இங்கிலாந்துக்கு ஒரு புதிய விடியல்’ என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை, ‘இது இங்கிலாந்துக்கு ஒரு புதிய விடியல்’ என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
* பிரதமராக அறிவிக்கப்பட்ட பின் முதன்முறையாக ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தற்போது நமது நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.ரஷிய அதிபர் புதின் தொடுத்துள்ள உக்ரைன் போர், உலகம் முழுவதும் சந்தைகளை சீர்குலைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய,லிஸ் டிரஸ் (முன்னாள் பிரதமர்) வேலை செய்ய தவறவில்லை. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஆனால் சில தவறுகள் நடந்தன. நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதை செய்ய நாள்தோறும் உழைப்பேன்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
நம்பிக்கை எனக்கு கிடைத்தது, இன்னும் நம்பிக்கையை சம்பாதிப்பேன்… நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் சொந்தமானது, நம்பிக்கை தான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து, புதன்கிழமை (நாளை) இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் “பிரதமரின் கேள்விகள்” நிகழ்ச்சியில் ரிஷி சுனக் உரையாற்ற உள்ளார்.
* டென்னிஸில் இருந்து ஓய்வு இல்லை – செரீனா
டென்னிஸ் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறவில்லை
மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் – செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்க ஓபனுடன் விடைபெற்ற நிலையில் செரீனா திடீர் அறிவிப்பு
* ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் போட்டி நடைமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்த இந்திய வணிகப் போட்டி ஆணையம்.
இதேபோல் கடந்த வியாழக்கிழமையும் கூகுளுக்கு 1,337 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
* கோவை: “சிசிடிவியில் இருந்த நபர்கள் ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகிய 3 பேரும் வெடிபொருட்களை தெரிந்தே ஏற்றியிருக்கின்றனர். மொத்தம் 75 கிலோ மதிப்புடைய வெடிமருந்திற்கான மூலப்பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளது”
– காவல் ஆணையர், கோவை
* மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு.
தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து ஆய்வு.
* ஐக்கிய இராச்சியத்தின் (இங்கிலாந்து) பிரதமராக பதவியேற்றுள்ள “ரஷீத் சனுக்” க்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
* ஆஸ்திரேலியா: சிட்னி ஓபரா ஹவுஸ் தீபாவளியைக் குறிக்கும் வகையில் ஒளிர்ந்தது
* ரிஷி சுனக் மூலம் யுனைடெட் கிங்டமின் உள்துறை செயலாளராக சுயெல்லா பிரேவர்மேன் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
