Home » அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2022) முக்கிய செய்திகள்.

அக்னிப்புரட்சி இன்றைய (26.10.2022) முக்கிய செய்திகள்.

* தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு  வந்தது.

விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என  சென்னை காவல்துறை தகவல்.

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.

சிக்னலை மீறுபவர்களுக்கு முதன்முறை 500 ரூபாயும், 2-அது முறை 1,500 ரூபாயும் அபராதம்.

புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம்.

* ஆஸ்திரேலியா அபார வெற்றி

டி 20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றுள்ளது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 157/6 ரன்கள் எடுத்த நிலையில்,  ஆஸ்திரேலிய அணி 158/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டொய்னிஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில், ஃபின்ச் 31, மேக்ஸ்வெல் 23, மார்ஷ் 17 ரன்கள் எடுத்தனர்.

* ரிஷி சுனாக்: சுவாரஸ்ய தகவல்
ரிஷி சுனாக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது. குஜ்ரன்வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர் அந்த ஊரை விட்டு குடிபெயர்ந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் ரிஷியின் தாத்தா. ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கென்யாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிறந்தவர் தான் ரிஷியின் அப்பா.

பின்னாளில் கென்யாவுக்கு 1963ல் ப்ரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தி இருந்தது ப்ரிட்டன். பர்மாவிலும் இதேபோல் தான் நடந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சி நடந்த இடமெல்லாம் இந்திய மத்தியதர வர்க்கம் குடிபெயர்ந்து, வணிகர்களாகவும், குமாஸ்தாக்களாகவும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடைபெற வழிவகுத்தது.

ஆனால் பர்மாவில் இருந்து இந்திய்ர்கள் அடித்து விரட்டபட்ட அதுவே காரணமாக அமைந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சியின் அள்ளக்கைகளாக உள்ளூர் மக்கள் அவர்களை கருதினார்கள். அதே மாதிரி பிரச்சனை ஆப்பிரிக்காவிலும் முளைத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் 250,000 இந்திய வம்சாவளியினர் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் இருந்தார்கள். “ப்ரிட்டிஷ் ஆசியர்கள்” என அழைக்கப்பட்டர்கள். அவர்கள் பிறந்த ஊர்கள் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாக பிரிந்து இருந்தன. அவர்களில் பலர் இந்தியாவை பார்த்ததே கிடையாது.

சுதந்திரத்துக்கு பின் அவர்களை கென்யா வெளியேற சொல்ல, அவர்கள் ப்ரிட்டனிடம் அடைக்கலம் கேட்க, ப்ரிட்டிஷ் அரசும் அவர்களை ப்ரிட்டனுக்கு அழைத்துக்கொண்டது. அப்படி சென்றவர் தான் ரிஷியின் அப்பா. ப்ரிட்டனில் டாக்டராக பணியாற்றினார். டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவ்ர் தான் ரிஷி சுனாக். பிறந்த ஆண்டு 1980

நல்ல வசதியான குடும்பம். ரிஷியும் நல்லா படிக்கும் மாணவன். ஸ்டான்போர்டுக்கு படிக்க செல்கையில் உடன் படிக்கும் அக்ஷதா மூர்த்தி எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். அவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்.

அக்ஷதா மூர்த்தியிடம் தனிப்பட்ட முறையில் இருந்த இன்போசிஸ் பங்குகள் மூலமே அவர் ப்ரிட்டிஷ் அரசியை விட அதிக பணக்காரியாக இருந்தார். அவரை மணந்தபின் ரிஷியின் வாழ்க்கை எங்கேயோ சென்றுவிட்டது. சுக்ரதிசை அடித்தது. நிதி நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அரசியலில் குதித்தார். எம்பி ஆனார். மந்திரி ஆனார். இப்போது பிரதமரும் ஆகிவிட்டார்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

இந்தியாவின் மருமகன், ஆனால் இந்தியர் அல்ல

ஆபிரிக்காவின் மகன், ஆனால் ஆபிரிக்கர் அல்ல

ப்ரிட்டிஷ் குடிமகன், ஆனால் அங்கே அவரை இந்தியர் என்கிறார்கள்.

பூர்விகம் பாகிஸ்தான், ஆனால் அங்கே அவரை பாகிஸ்தானியாக கருதுவதில்லை

இனத்தால் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. அதனால் பெரியதாக அங்கேயும் உற்சாகவெள்ளம் கரைபுரன்டு ஓடவில்லை ஆக உண்மையான க்ளோபல் சிட்டிசன் என ரிஷியை சொல்லலாம்.

* கார் சிலிண்டர் வழக்கில் கைதான 5 பேர் சிறையிலடைப்பு!

கோவை: கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோவை மத்திய சிறையில் அடைப்பு!

* சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

சேலத்தில் கனரா வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிச்சிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் எருமாப்பாளையம் கனரா வங்கி கிளையில் 3 நாள் விடுமுறைக்குப் பின் மேலாளர் உள்பட ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றி உள்ளனர். அப்போது வங்கி அருகே உள்ள மினி பஸ் பட்டறையில் பணியாற்றும் சிலர் வங்கியின் சுவரில் துளையிடப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளரிடம் தெரிவித்தனர்.

இது குறித்து அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும்  மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

* இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்ற சில மணி நேரங்களில் அமைச்சரவையை மாற்றியமைத்தார் ரிஷி சுனக்

டொமினிக் ராப் துணை பிரதமராக நியமனம்.

* காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

290 படுக்கை வசதிகளுடன் இயங்கிவரும் மருத்துவமனையை 750 படுக்கை வசதியுள்ளதாக மேம்படுத்த திட்டம்.

உலகவங்கி, தேசிய சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் மருத்துவமனை தரம் உயர்த்தப்படவுள்ளது.

* டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலீவர் நிறுவனம் முடிவு:

Dry டவ் ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சின் என்ற ரசாயனம், ரத்த புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலீவர் நிறுவனம் முடிவு.

அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புக்கள் மட்டும் திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

* தேவர் ஜெயந்தி – விதிமீறலில் ஈடுபட்டால் லைசென்ஸ் ரத்து.

தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர் குருபூஜை விழாக்களின் போது வாகனங்கள் ஓட்டுவதில் விதிமீறலில் ஈடுபட்டால் ஓட்டுநரின் லைசென்ஸை ரத்து செய்ய நடவடிக்கை  – மதுரை மாவட்ட எஸ்.பி. சிவ பிரசாத்.

வாகனங்களை அத்துமீறிய வேகத்தில் இயக்குவது, வாகனங்கள் மேல் அமர்ந்து செல்வது உள்ளிட்டவற்றிற்குத் தடை.

* சுவீடனில் இப்படி ஒரு கிரகணமா? 5 ஆக பிரிந்தா சூரியன்? டிரெண்டாகும் வீடியோ – #FactCheck

உண்மை செய்தி இதுதான்👇🏻

ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டின் மலைப்பகுதியில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு சூரியன் ஐந்து ஓளிக்கதிர்களாக தென்பட்டதாக சமூக வலைதளங்கள் வீடியோ வெளியாகி காண்போரை கவர்ந்து இருக்கும் நிலையில் இதன் உண்மை தன்மையை அலசுகிறது இந்த செய்தி.

சுவீடனில் கிரகணம்

இந்த புகைப்படங்களுக்கு மத்தியில் சுவீடனில் தென்பட்ட சூரிய கிரகணம் என்ற ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பனிசூழ்ந்த ஒரு மலைப்பகுதியில் அதில் சூரியன் 5 ஒளிக்கதிர்களாக காட்சி தருகிறது. இதனை அந்த மலைப்பகுதியில் பனிச்சருக்கு விளையாடும் வீரர்களும், பொதுமக்களும் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

உண்மையான வீடியோவா?

நிறபிரிகை மற்றும் ஒளி வட்டத்தால் சூரியன் 5 பிரிவுகளாக பிரிந்து காட்சியளிக்கிறது என்ற விளக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆனால், சுவீடன் நாட்டு ஊடகங்கள் மற்றும் பிற சர்வதேச ஊடகங்களில் இந்த வீடியோவும், செய்தியும் வெளியிடப்படவில்லை. எனவே இது உண்மையான தகவல்தானா என்ற தேடுதலில் உண்மை தகவல் கிடைத்தது.

JOIN US: https://t.me/Agnipuratchi1

5 ஆண்டு பழைய வீடியோ

இந்த வீடியோ இதற்கு முன் ஊடகங்களில், இணையதளங்களில் வெளியாகி உள்ளதா என்று நாம் தேடியபோது, தி லோக்கல் என்ற சுவீடன் ஊடகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் பகிரப்பட்டு உள்ளது. முதன்முதலில் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டவர் லட்விக் என்ற பனிச்சருக்கு வீரர். வளிமண்டத்தில் உறைந்த நிலையில் இருக்கு தண்ணீரில் சூரிய ஓளி பட்டு பிரதிபலிப்பதால் இவ்வாறு காட்சியளிப்பதாக நாசா விளக்கியுள்ளது.

* உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற ஈரானை சேர்ந்த Amou Haji (94) உயிரிழந்தார்!

ஈரானைச் சேர்ந்தவர் அமு ஹாஜி. இவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, தன் உடலில் சோப்பு, தண்ணீர், மழைநீர் என எதுவும் தன் உடலை நனைக்காமல், குளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

உடலில் தண்ணீர் பட்டால், உடல் நலக்குறைவு ஏற்படும் என, அவர் உறுதியாக நம்பியதால் இத்தனை ஆண்டுகளாக குளிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது 94ம் வயதில் தேஜ்கா என்னும் தனது கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, “சிறுவயதில் அவருக்கு நேர்ந்த சில உணர்ச்சிகரமான சம்பவத்தால் அவர் தண்ணீர் மற்றும் சுத்தத்தை அறவே வெறுத்துவிட்டார்.

இருப்பினும், சில மாதங்களுக்கு முன் நாங்கள் மிகவும் கட்டாயப்படுத்தி அவரைக் குளிக்க வைத்தோம்” என தெரிவித்துள்ளனர்.

JOIN US: https://t.me/Agnipuratchi1

* கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அறிவித்த கூலியை வழங்க வேண்டும், அரசாணை 152 யை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை வேலை நிறுத்த போராட்டம்.

* திருப்பதி கோயிலில், நவம்பர் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான இலவச சிறப்பு தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது

பிற்பகல் 3 மணிக்கு tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

* உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 5வது இடத்துக்கு முன்னேற்றம்.

* காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றார் மல்லிகார்ஜூன் கார்கே.

பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பதவியேற்பு விழா.

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவர் பதவி ஏற்பு.

* ரூபாய் நோட்டில் கடவுள் படங்களை அச்சிட வேண்டும் – மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை.

புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்களை அச்சிடலாம்.

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்கள் இருந்தால் நாடு வளம் பெறும் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

* தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை.

கோவை உக்கடம் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனை.

டிஜிபி சைலேந்திர பாபு, தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தினை 2022 – 2023 ஆம் ஆண்டில் 3,204 கிராமங்களில் செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்- வேளாண்மை (ம) உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

* சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறையில்  அயர்லாந்து அணி வெற்றி.

மழை காரணமாக டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

* சிவகங்கை: சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில்,  திருப்புவனம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

மருதுபாண்டியர் 221வது குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

* கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை.

கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்திட முதலமைச்சர் உத்தரவு.

* தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா?அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா?

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் காட்டம்.

மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம், கோயில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

* கணவரை ஆதாரமின்றி குறை சொல்வது சித்ரவதை.

கணவரை ஆதாரமின்றி குடிகாரர், பெண்மோகம் கொண்டவர் என கூறுவது சித்ரவதைக்கு சமம்.

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டு, அவரின் நன்மதிப்பை கெடுக்கும் -மும்பை உயர்நீதிமன்றம்.

2005-ல் விவாகரத்து வழங்கியதற்கு எதிராக ராணுவ வீரரின் மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில், தன் கணவர் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் கருத்து.

* டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து.

மெல்போர்ன் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

* நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது.

“இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என அறிக்கையில் தகவல்.

தம்பதிகள் மற்றும் வாடகை தாய், ICMR வழிகாட்டு முறைகளின்படியே குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இவ்விசாரணையில் தம்பதிகள் மற்றும் வாடகை தாய் ஆகியோருடைய வயது, ICMR செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு பதிவு திருமணம் 11.03.2016 அன்று நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ளது; அதன் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும்-தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* தேவர் தங்கக்கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கவசத்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு.

* கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை  கண்டித்து வருகின்ற 31-ம் தேதி கோவை மாநகர பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பாஜக அறிவிப்பு.

* பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை.

போன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மொபைல் பே-வின் வர்த்தக சின்னம் தங்கள் சின்னம் போல உள்ளதாக போன் பே வழக்கு.

* கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வலியுறுத்தல்.

தமது ஒப்புதலை அமைச்சர் பாலகோபால் இழந்துவிட்டதாக கூறி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை.

அமைச்சர் பாலகோபாலின் பேச்சு தம்மை அவமதித்துவிட்டதால் அவருக்கு அளித்த ஒப்புதலைத் திரும்பபெறுவதாக கூறியுள்ளார் ஆளுநர்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் பிரச்னையில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளத்தைப் புரிந்துகொள்ள முடியாது என அமைச்சர் பாலகோபால் பேசியுள்ளார்.

அமைச்சரை பதவி நீக்கக் கோரிய ஆளுநரின் நடவடிக்கையால் அவருக்கும் ஆட்சிக்கும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

* கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் – கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம்.

முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை கடந்த 24ம் தேதி இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

error

Enjoy this blog? Please spread the word :)