அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (27.10.2022) முக்கிய செய்திகள்.
* இராமேஸ்வரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது; எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது.
* சிவகங்கையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
மருதுபாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
* புதுச்சேரி:ஆரோவில் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
கோவையில் இருந்து ஆரோவில்லிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்!
* தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்!
* தூத்துக்குடியில் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.
தூத்துக்குடியில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை- ஆட்சியர் செந்தில் ராஜ்.
* பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தால் நடவடிக்கை- சென்னை மாநகர போக்குவரத்து எச்சரிக்கை
புகைப்பிடித்தல், மது அருந்திவிட்டு வரும் பணியாளர்களை பணிமனைக்குள் அனுமதிக்க கூடாது
* இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவு.
* ஜெயலட்சுமி மீது வழக்குபதிவு!
பாஜக மகளிர் அணி மாநில துணைத் தலைவரும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சினேகம் அறக்கட்டளை பெயரில் பணமோசடி செய்ததாக பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு
* கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை!
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில், முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை கைது செய்தது காவல்துறை.
இந்த வழக்கில் எற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு காவல்துறையின் கட்டுபாட்டில் உள்ளனர்.
* சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவச் சிலை திறப்பு.
அம்பேத்கரின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
* தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் 60 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகின்றது.
கடலூர் கிழக்கு மாவட்டம் பா.ஜ.க. சார்பில் கடலூர் தபால் நிலையம் அருகே நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார்.
* வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை 23ஆம் தேதியுடன் இந்தியாவில் இருந்து விலகிவிட்டது – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவ மழை வரும் 29ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவிப்பு
* சசிகலா புஷ்பா எம்பியாக நியமனம் செய்யபட்ட போது, அவருக்கு டில்லியில் தங்குவதற்க்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்ய பட்டது. அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு குடியிருப்பிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
* டி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ்.!
ஆஸ்திரேலியா: டி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடியாக சதம் அடித்தார்.
* தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ் 52 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் உதவியுடன் வங்கதேசத்திற்கு எதிராக சதம் விளாசினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி- 20 உலகக்கோப்பை தொடரில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரூசோவ் பெற்றுள்ளார்.
JOIN US: https://t.me/Agnipuratchi1
* தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரம்.
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு.
துப்பாக்கி சூடு சம்பவத்தால் விசைப்படகில் 47 குண்டு துளைகள் கண்டறியப்பட்டுள்ளன.
* கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.
ஏதோ பதற்றம் நிலவியது போல சிலர் செய்தி வெளியிடுவது கண்டனத்திற்குரியது.
சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்- அமைச்சர் செந்தில் பாலாஜி.
காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர்.
அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது.
புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி.
* NIA முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர்’
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்?
அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கூறும் கருத்துக்களுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது – அமைச்சர் செந்தில்பாலாஜி
* பாஜக மராட்டிய மாநில தலைவர் நிதிஷ் இராணா இந்திய ரூபாய் நோட்டுகளில் சத்ரபதி சிவாஜி புகைப்படம் அச்சிடப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இலட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் அச்சிட வேண்டும் என கூறிய நிலையில் தற்போது பாஜகவும் கோரிக்கை.
* சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்.29 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மழை படிபடியாக அதிகரித்து நவ.4 ஆம் தேதி வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலசந்திரன்.
* இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி,
டெஸ்ட் போட்டிக்கு ₹15 லட்சம்
ஒருநாள் போட்டிக்கு ₹6 லட்சம்
டி20 போட்டிக்கு ₹3 லட்சம்
ஊதியம் வழங்கப்பட உள்ளது.
* அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவு
* நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் 76வது காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.
* அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை”
விலை உயர்ந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன – சென்னை உயர்நீதிமன்றம்
* நவம்பர் 11-ம் தேதி திண்டுக்கல் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
* தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் தனிநபர் யாகங்கள் நடத்த தடை – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தனிநபர் யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும் – நீதிபதிகள்.
கோயில் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் கோயில் உள் பிரகாரத்தில் தங்க அனுமதி இல்லை என்ற நிலைப்பாடு மிக சரியானது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் நேரடியாக கடவுளை தரிசிக்கலாம்.
இந்து அறநிலையத்துறை ஆணையர் 3 வாரத்தில் விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் கிராமத்திற்கு 1 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் படுத்து சாலை மறியல்.
* கோவையில் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
தமிழக காவல்துறையின் செயல் பாராட்டுதலுக்குரியது – விசிக தலைவர் திருமாவளவன்
* 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி: இந்தியா வெற்றி
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
* மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்திக்கு அனுமதி!
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான களப்பரிசோதனைக்கு, மத்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு மீண்டும் ஒப்புதல்.
கடந்த 2017க்குப் பிறகு கூடுதல் தரவுகளுடன் கூடிய முன்மொழிவு, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
* சம்பள உயர்வு அறிவிக்கும் நாடுகள்: இந்தியா முதலிடம்.
2023ம் ஆண்டில் அதிக சம்பள உயர்வை அறிவிக்கும் நிறுவனங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்; வியட்நாம் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், பணவீக்கம் அதிகரித்தாலும் சம்பள குறைப்பு பிரச்னையை சந்திக்காது என கருத்துக்கணிப்பு அறிக்கையில் தகவல்.
* பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி.
இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்தது. இதில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்களை எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.
இதனையடுத்து 131 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபர் அசாம் 4 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்து , ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.
JOIN US: https://t.me/Agnipuratchi1
ஏற்கனவே தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான், தற்போது ஜிம்பாப்வேவிடம் தனது இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
* ஓலா, ஊபர் ஓட்டுநர்கள், இனி உங்களது முன்பதிவை ரத்து செய்தால் அபராதம் – போக்குவரத்துத் துறை அதிரடி!
OLA, UBER உள்ளிட்ட APP மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் முன்பதிவை ரத்து செய்யும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை அமல்!
அபராதம்
ஆட்டோ ₹50
கார் ₹500
புகாருக்கு: 18004255430
www.tnsta.gov.in இணைய முகவரியில் Driver Cancellation புகாருக்கு தற்போது தனியாக option இல்லாத நிலையில் விரைவில் புகார் MENU ஏற்படுத்தப்படும் – போக்குவரத்துத்துறை
* கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் வேதனை!
ஆபாசப் படம் பார்க்கும் தீமையான பழக்கம் பலருக்கும் உள்ளது
கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் கூட ஆன்லைனில் ஆபாச படங்களை பார்ப்பதாக போப் வேதனை! மொபைல் பயன்பாடு தொடர்பான கேள்விக்கு போப் பிரான்சிஸ் பதில்!
சென்னையில் அனுமதி இல்லாமல் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது காவல்துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.!
– காவல்துறை எச்சரிக்கை
* புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு தாமதாக வந்தால் இனி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துறை செயலர்களுக்கு அரசு உத்தரவு
அரசு துறை செயலர்கள், துறை தலைவர்கள் தங்கள் துறைகளில் திடீரென்று ஆய்வு செய்து ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருகிறார்களா, பணி நேரத்தில் இருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் நவ.4ம் தேதி திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் – திமுக.
பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு.
ஜம்மு காஷ்மீரில் அலூசா என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது குண்டு வெடித்ததால் பரபரப்பு..!
* காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அலூசா என்ற இடத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்த போது குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சக்தி குறைந்த குண்டு வெடித்ததால் உயிர்சேதம் ஏதும் இல்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீரில் இருக்கும் நிலையில் குண்டு வெடித்துள்ளது.
