அக்னிப்புரட்சி இன்றைய (30.12.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (30.12.2022) முக்கிய செய்திகள்.
* பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவு.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று இயற்கை எய்தினார்
குஜராத்தின் காந்தி நகரில் உள்ள வீட்டில், தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பின்னர் அவரின் உடலை பிரதமர் மோடி! சுமந்து சென்றார்
காந்திநகரில் உள்ள மயானத்தில் இறுதிசடங்கை தொடர்ந்து,தாயின் சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி.
* தாயார் மரணம்: பிரதமர் மோடி உருக்கம்.
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்திருக்கிறது.
ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம், மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவை ஐக்கியமாவதை என் தாயாரிடம் உணர்ந்திருக்கிறேன்- தாயின் மறைவையொட்டி பிரதமர் மோடி உருக்கம்.
* பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
பிரதமர் மோடி அவர்களே, உங்கள் தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம்” – முதலமைச்சர் ஸ்டாலின்
“தாயாரை இழந்த துயரத்தை யாராலும் தாங்க முடியாது; உங்களது இழப்புக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என சொல்ல வார்த்தைகள் இல்லை; எனது ஆழ்ந்த இரங்கலையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
* கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!
Pele Last Video: https://youtu.be/dRSdHhjdi6Y
பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (82) காலமானார்.
16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, 3 முறை உலகக் கோப்பை (1958, 1962, 1970) வென்றார்.
பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
* தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது”
– உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
* இந்தியவின் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை உடைய பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
– பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) தெரிவித்துள்ளது.
* விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம்:
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்து.
சாலை தடுப்பு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்து.
பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
* பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க விழிப்புணர்வு மணல் சிற்பம்.
மெரினா கடற்கரையில் மணல் சிற்பத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக அரசின் 181 என்ற மகளிர் உதவி மையம் சார்பில் மணல் சிற்பம் வடிவமைப்பு.
* முன்னாள் எம்.பி. மரணம்; திடீர் திருப்பம்:
திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரிடம் விசாரணை.
கடந்த 22ஆம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற போது கூடுவாஞ்சேரி அருகே உயிரிழப்பு.
மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
* பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முன்னிலையில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் திண்டிவனம் தைலாபுரம் அடுத்த சங்கமித்ரா மண்டபத்தில் நடைபெற்றது.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த ஏகாகதசி பெருவிழா பகல் பத்து 8-ம் நாள்
மார்கழி- 15 ம் தேதி 30.12.2022 வெள்ளிக்கிழமை ஸ்ரீ நம்பெருமாள், மகர கர்ண பத்ரம், மார்பில் பருத்தி பூ பதக்கம், அதன் மேல் நாச்சியார் பதக்கம், சந்திர கலை , மகரி,, அடுக்கு பதக்கங்கள், வைர அபயஹஸ்தத்துடன்,பச்சை பட்டு வஸ்திரம் அணிந்து, 2 வட பெரிய முத்து சரம், தங்கப் பூண் பவள மாலை, சிகப்பு கல் 3 அடுக்கு மகர கண்டிகை சாற்றி, பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார்.
பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் – பாம்பன் பாலத்தில் ஜனவரி 10-ம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தம்
🔴 120 கிலோ மீட்டர் வேகம் – சாலை தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்… ரிஷப் பண்ட் விபத்து சிசிடிவி காட்சிகள்…
CCTV: https://youtu.be/I-3N4rJmKKo
* மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் குஜராத்தில் இருந்து பங்கேற்றார்.
தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நிலையில் காணொளியில் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
ஹவுரா – நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார்.
* திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை- 5 பேர் கைது.
செங்கல்பட்டு: திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 5 பேர் கைது.
கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் கைது.
பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையினால் வாயில் துணியை அமுக்கி மஸ்தானை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தகவல்.
* ரிஷப் பண்ட்டுக்காக பிரார்த்திக்கிறேன்!”
“கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்”
அவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்! – பிரதமர் மோடி ட்வீட்
* விபத்து சிசிடிவி: https://youtu.be/I-3N4rJmKKo
பண்ட் விபத்துக்கு இதுதான் கரணம்…
ரிஷப் பண்ட் கார் விபத்துக்கான புதிய பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது. சீட் பெல்ட் போடாமல் பண்ட் மிக வேகமாக காரை ஓட்டியுள்ளார்.
அப்போது தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து கம்பத்தில் மோதி, சுமார் 200 மீட்டர் தொலைவில் விழுந்தது.
இதனால், காரில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து பரபரப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது.
அப்போது காரில் இருந்து குதித்ததில் அவரின் கால் உடைந்துள்ளது. மேலும், தீப்பிடித்ததில் ரிஷப் பண்ட் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் “Get well soon” பதிவிட்டு வருகின்றனர்.
விபத்து காட்சி: https://youtu.be/I-3N4rJmKKo
* வாட்ஸ் அப் குருப்பில் ஒரு உறுப்பினரின் கருத்துக்கு குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி.
கரூரைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் துவக்கி நடத்தி வருகிறார்.
இந்த குரூப்பில் ஒருவர் பிரச்னைக்குரிய ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் குரூப் அட்மின் என்ற வகையில் ராஜேந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்
இதில் ராஜேந்திரன் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் . ஒரு குழு உறுப்பினர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டியது அட்மினின் பொறுப்பு. ஆனால், பதிவுகளை முறைபடுத்தவோ, , தணிக்கை செய்யவோ அவரால் முடியாது. உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் கூட ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் குரூப்பின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் வராது பெயரை நீக்க வேண்டும். போதுமான ஆவணங்கள் கிடைத்தால் அவரை வழக்கில் சேர்க்க வேண்டும். அதை மனுதாரர் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கபடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் -திருத்தணி (பிஎஸ் 1, பிஎஸ் 2) சிறப்பு ரயில் டிசம்பர் 31ம் தேதி இரவு 11.10-க்கு புறப்பட்டுச் செல்லும் எனவும் அரக்கோணம் -திருத்தணி சிறப்பு ரயில் (பிஎஸ் 3, பிஎஸ் 4) ஜனவரி 1-ல் அதிகாலை 12.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊர்க்காவல் படை தலைமை கமாண்டண்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை டி.ஜி.பி. அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் சரக டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாக சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் காவல்துறை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜியாக ஆர்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் பிரிவில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக எம்.ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜியாக இ.எஸ் உமா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக அர.அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக டிஜிபி ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாக எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.ஸ்டிபன் ஜேசுபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக உள்ள கலைச்செல்வன் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை சிபிசிஐடி எஸ்.பி.யாக உள்ள முத்தரசி தஞ்சை மாவட்ட காவல் கண்காணீப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தஞ்சை எஸ்.பி.யாக உள்ள ரவுளி பிரியா கந்தபுனேனி சென்னையில் சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து துணை ஆணையராக ஏ.ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.சிவக்குமார் என 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
* போக்குவரத்து விதிமீறல்களை நவீன கேமரா கண்காணிக்கும் – போலீசார் எச்சரிக்கை
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
எனவே புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ஏ.என்.பி.ஆர். கேமரா மூலமாக தானாகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
* பா.ம.க. மாநில இளைஞரணித் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் விலகல் கடிதம்
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து சில சூழ்நிலைகள் காரணமாக விலகிக் கொள்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
