அக்னிப்புரட்சி இன்றைய (31.12.2022) முக்கிய செய்திகள்.
அக்னிப்புரட்சி இன்றைய (31.12.2022) முக்கிய செய்திகள்.
* வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 9-ஆம் திருநாள்…!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-ம் நாளான இன்று ‘முத்துக்குறி’ பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்துகலிங்கு ஆபரணம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி.
மேலும், பகல் பத்தின் கடைசி நாளான ஜனவரி 1ஆம் தேதி (நாளை) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2-ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரம பதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழா 9ம் திருநாள் உற்சவம்.
‘முத்துக்குறி’ பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்தங்கி அணிந்து, முத்து பாண்டியன் கொண்டை, முத்து கர்ண பத்ரம், முத்து அபயஹஸ்தம், மார்பில் நாச்சியார் – அழகிய மணவாளன் பதக்கம், வெள்ளைகல் ரங்கோன் அட்டிகை, 6 வட பெரிய முத்து சரம், பின் சேவையாக – முத்தங்கியுடன், பருத்திப்பூ பதக்கம், தொங்கல் கைகளில் சாற்றி, சேவை சாதிக்கிறார்..
* புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கப்படியே பூஜைகள் நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி விழா 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, கோயிலில் பல இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் மூலம் தகவலை தெரிவித்துள்ளது. எனினும் திருக்கணித பஞ்சாங்கத்தின் குறிப்பின்படி 2023 ஜனவரி மாதம் 17-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்றிருப்பதால், இதனை பின்பற்றுவோர் திருநள்ளாறு கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
வழக்கமாக சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்வர். 2023புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமை என்பதால் 31-ஆம் தேதி அதிகாலை முதல் இக்கோயிலுக்கு தரிசனத்துக்காக ராஜகோபுரம் முன்பாகவும், வரிசை வளாகத்தின் வழியே கோயிலுக்குச் செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்கின்றனர்.
நளன் தீர்த்தக் குளத்திலும் பக்தர்கள் மிகுதியாக நீராடிவருகின்றனர். கோயில் நிர்வாகம் எதிர்பார்ப்பை மீறி பக்தர்கள் சனிக்கிழமை கோயிலுக்கு வந்துள்ளதால், சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புவதில் பல மணி நேரமாவதாக தெரிவிக்கப்படுகிறது.
திருள்ளாறு பகுதியில் வாகனங்கள் மிகுதியாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* நாமக்கல், மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து.
மூதாட்டி உட்பட 3 பேர் உயிரிழப்பு – படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.
* ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி விவகாரம்
இந்தியாவின் தனியார் வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றுள்ள வங்கி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி. இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளில் சேர்த்து அதற்கு 5,275 கிளைகள் இருக்கின்றன. வங்கியின் சொத்து மதிப்பு 17 லட்சத்து 52 ஆயிரத்து 637 கோடி. அதைப் போலவே இந்த வங்கியின் வாராக் கடனும் அதிகம். 2 லட்சம் கோடி.
பெரிய பெரிய தொழில்நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் திரும்ப வரவில்லை என்று வங்கியின் சார்பில் கூறப்படுகிறது. சாதாரணமாக ஒரு வங்கியில் கடன் கேட்டால், ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்கள். நகை, சொத்து தொடர்பான ஏராளமான சான்றுகளைக் கேட்பார்கள். ஆனால் 2012 ஆம் ஆண்டு 3,250 கோடி ரூபாயைக் கடனாக இந்த வங்கியில் மிக எளிதாக வாங்கியிருக்கிறார் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத்.
ஏற்கெனவே ஸ்டேட் வங்கி போன்றவற்றில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே கடன் பெற்று திருப்பித் தராமல் வேணுகோபால் தூத் மோசடி செய்திருக்கிறார். இது எல்லாருக்கும் தெரிந்திருந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கடனை வாராக் கடன் என்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சார் அறிவித்தார். இது எப்படி நிகழ்ந்தது என்று எல்லாரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சில உண்மைகள் வெளிவரத் தொடங்கின.
சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் ‘நு பவர் ரினுவபிள் பிரைவேட் லிமிடெட் ’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம் வேணுகோபால் தூத்திடம் இருந்து ரூ.64 கோடியை லஞ்சமாகப் பெற்றிருக்கிறது என்பது தெரிய வந்தது.
வேணுகோபால் தூத்திடம் மட்டுமல்ல, பல பெரிய பெரிய நிறுவனங்களிடம் 10 சதவிகிதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அந்த நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடன்களை வாராக் கடன் பட்டியிலில் சேர்த்திருக்கிறார் சாந்தா கோச்சார்.
இதனால் 2018 – இல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் சிஇஓ பொறுப்பிலிருந்து சாந்தா கோச்சார் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்து கடந்த 24.12.2022 ஆம் தேதி மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர் செய்திருக்கிறது.
சாந்தா கோச்சாரும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், வேணுகோபால் தூத்திற்கு கடன் வழங்கும்படி ப.சிதம்பரம் சொல்லியிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் இப்போது எழுந்திருக்கிறது என தகவல்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 12.5 புள்ளிகள் பெற்று கோனெரு ஹம்பி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.
* கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை – தமிழக சுகாதாரத்துறை
நேற்றுடன் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அரசாணை
* வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து- 4 பேர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இன்று அதிகாலை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் உள்பட மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* 7 விநாடிகளில் உயிர் தப்பிய பண்ட்
ரிஷப் பண்ட் நேற்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரை காப்பாற்றிய பேருந்து நடத்துநர் பரம்ஜீத் கூறுகையில், பண்ட்-ஐ நாங்கள் வெளியே இழுத்த 5 -7 விநாடிகளில் அவரின் கார் தீப்பிடித்து எரிந்தது.
நாங்கள் விசாரித்த பிறகு தான் காரில் இருந்து மீட்கப்பட்டவர் பண்ட் என தெரியும் என்றார். மேலும், தன்னை காப்பாற்றியவர்களுக்கு பண்ட் நன்றி கூறியுள்ளார்.
விபத்து காட்சிகள்: https://youtu.be/I-3N4rJmKKo
* ஜி20 இந்தியாவின் தலைமையில் புதிய வாய்ப்புகள்!
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்த மாத துவக்கத்தில் இந்தியா ஏற்றுக்கொண்டது. இதற்கு பல சர்வதேச தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் தலைமையில் ஜி20 இருப்பது பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
இரு நாடுகளுக்கிடையே பல பரிமாணத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்தலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைக்கும் வரவேற்பு கொடுத்துள்ளார் புதின்.
* புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்
புதிய நாடாளுமன்ற கட்டடம், மார்ச் மாதம் திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வருவதாகவும், பிப்ரவரி மாதத்துக்குள் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதம் கட்டடம் திறந்து வைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, புதிய கட்டடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* குஜராத்தில் பயங்கரம்: சொகுசு பேருந்து மீது கார் மோதி விபத்து- 9 பேர் பலி
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு பேருந்து மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் ஒன்பது பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நவ்சாரி மாவட்டம் வெஸ்மா கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து வல்சாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் பேருந்து மீது மோதியதாக நவ்சாரி காவல் கண்காணிப்பாளர் ருஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்தார்.
காரில் பயணித்த ஒன்பது பேரில், சொகுசு பேருந்தின் ஓட்டுனருடன் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பயணம் செய்தவர்கள் அங்கிலேஷ்வர் பகுதியில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் வல்சாத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும், பேருந்தில் பயணம் செய்தவர்கள் வல்சாத்தை சேர்ந்தவர்கள் என்றும் உபாத்யாய் கூறினார்.
சாலை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
* புத்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடு: மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் இன்று இரவு போக்குவரத்துக்கு தடை!..
ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. புதிய ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது. இதில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்பதற்காக போலீசார் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சென்னையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்பது வழக்கம். எனவே இன்று இரவு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, ‘உயிரிழப்பு இல்லா புத்தாண்டுக்கு முன்னாள்’ என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் வருமாறு:-
* கடற்கரை உட்புற சாலை 31-ந்தேதி இரவு 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.
* காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.
* அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்ைதவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.
* அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம்.
* பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும் ஆர்.பி.சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.
* அனைத்து மேம்பாலங்களும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.
* எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 31-ந்தேதி அன்று இரவு 8 மணிக்கு பின்னர் 6-வது அவென்யூ நோக்கி 1-ந்தேதி அன்று 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
* 6-வது அவென்யூ, 5-வது அவென்யூ சந்திப்பு, 4-வது மெயின் ரோடு சந்திப்பு, 3-வது மெயின் ரோடு சந்திப்பு, 16-வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7-வது அவென்யூ எம்.ஜி. ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும். இவ்வாறு சென்னை காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* ஆர்விஎம் வாக்குப்பதிவு முறை தேவையற்றது – திருமாவளவன்
ரிமோட் மின்னனு வாக்குப்பதிவு (ஆர்விஎம்) முறையை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஜனநாயகத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கேலி கூத்தாகிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்தார்.
இதுபற்றி அவர், விசிக சார்பில் மிக கடுமையாக இந்த முறையை எதிர்க்கிறோம். இந்த கருத்தையே தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பதிவு செய்வோம். அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.
* பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்!
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுலின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி போலீஸ் உறுதி தெரிவித்தது.
டெல்லி காங்., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி, போலீசாரும் பங்கேற்றிருந்தனர். இதில், ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அங்கீகரிக்கப்படாத எவரும் அவரை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* தந்தை தப்பிப்பதை பொறுக்க முடியாது! -உயர்நீதிமன்றம்
மைனர் குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து, வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
விவாகரத்து வழக்கு ஒன்றின் விசாரணையில், குழந்தையின் கல்வி, வாழ்கைக்கு வேண்டிய செலவுகளை மேற்கொள்ள வேண்டியது தந்தையின் கடமை. கணவரை பிரிந்து வரும் மகளின் குழந்தைகளை கவனிக்க வேண்டிய சுமை தாத்தா, பாட்டிக்கு வந்துவிடுவதாகவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
* தொலைதூர கல்வியில் சேரலாம்
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023-ம் ஆண்டுக்கான யு.ஜி.சியால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2.1.2023 முதல் வழங்கப்படும்.
இதில், மாணவர்கள் நேரிலும், http://online.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாகவும் சேரலாம். மேலும், விவரங்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
* ஆதார் இணைப்பு இன்று கடைசி நாள்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாள் ஆகும். காலம் நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால், இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும்.
தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
இணைப்பது எப்படி? https://youtu.be/RM2QmmA8zlA
* தமிழகத்தின் மூன்று முக்கிய கோவில்களில் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவிலில் நாள்முழுவதும் அன்னதான திட்டம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடக்கம்.
* தங்கம் விலை ₹41,000-ஐ தாண்டியது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 41,040க்கு விற்பனை;ஒரு கிராம் தங்கம் ரூ. 5,130க்கு விற்பனை.
* வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரிக்கிறது; நாடு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திப்பதாகவும் அதிருப்தி.
வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை ரத்து செய்யக் கோரி திருப்பூரை சேர்ந்த உணவகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
* மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஜனவரி 31க்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் திட்டவட்டம்.
நாளை மறுநாள் முதல் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மீண்டும் செயல்படும்.
இதற்காக கூடுதலாக 2811 நடமாடும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
நீங்களே இணைப்பது எப்படி? https://youtu.be/RM2QmmA8zlA
* புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது…” உறைபனியில் உறைந்த உதகை…!
உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர் மழையால் உறைபனி ஒரளவு குறைந்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது. கார்கள், புல்தரைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டியில் அதிகபட்சமாக 22.7 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 3.5 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். குளிரில் இருந்து காத்து கொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். குளிரால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் சுவர்ட்டர் அணிந்து கொண்டு சென்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வந்தார்.
இந்நிலையில், தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் எரிக் டென் ஹாக் ஆகியோரை கிண்டல் செய்ததை அடுத்து அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதையடுத்து கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அந்த அணியின் பயிற்சியாளர் பர்னாண்டோ சாண்டோஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, ரொனால்டோ பெஞ்ச்- ல் அமர வைக்கப்பட்டார்.
இதையடுத்து அந்த அணி காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
இதைத் தொடர்ந்து கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறினாலும் போர்ச்சுகல் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று ரொனால்டோ தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது 37 வயதான ரொனால்டோ, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று கால்பந்து விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்காக இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திவந்த ரொனால்டே இனி ஆசியாவில் விளையாடத் தொடங்கியுள்ளார்.
சவுதி லீக்கில் விளையாடி வரும் அல் நாசர் கிளப், இன்று (டிச.,31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ரொனால்டோ தங்கள் அணிக்கு கையெழுத்திட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இவர், 2025 ஆம் ஆண்டு கோடை வரை இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
ஆனால், எவ்வளவு தொகைக்கு ரொனால்டோ ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலை அல் நாசர் கிளப் வெளியிடவில்லை என்றாலும், ரொனால்டோவின் ஒப்பந்தம் ‘200 மில்லியன் யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.17,752 கோடி)’ இருக்கும் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
ரொனால்டோவின் இணைவு சவுதி அரேபிய கிளப்பை அணியை மேம்படுத்தும் என்றும், ஒன்பதாவது முறையாக சவுதி புரோ லீக் பட்டங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக 2019 இல் லீக் பட்டத்தை வென்ற அல் நாசர், முதல் முறையாக AFC சாம்பியன்ஸ் லீக்கை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
* பதவி, பொறுப்பு வரும் போகும். நாளை 10 சீட்டுகள் கூட கிடைக்காத கட்சியாக மாறலாம். ஆனால், மனிதனின் அன்பு பாசத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை; என் அடையாளம். அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது”
– தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
* உலகிலேயே முதல் நாடான நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது.
பட்டாசுகள் வெடிக்க மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.
* முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார் முன்னாள் போப் 16ம் பெனடிக்ட்(95) உடல்நலக் குறைவால் காலமானார்.
1415ம் ஆண்டுக்கு பின் 2013ல் போப் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் பெனடிக்ட்.
* பட்டாசு விபத்து – நிதியுதவி அறிவிப்பு:
நாமக்கல்: பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
* சிட்னி நகரில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின
உலகம் முழுவதும் 2023 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் தற்போது புத்தாண்டு பிறந்துள்ளது. அங்குள்ள சிட்னி நகரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். இதைக் கண்டு ரசிப்பதற்காகவே உலகம் முழுவதும் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர். அந்த வகையில் இன்று சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
அங்கு 2023-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண வான வேடிக்கைகளுடன் இரவை பகலாக்கும் வகையில் வானத்தில் ஒளி வெள்ளம் பரவியது. இதில் காண்போரை வியக்க வைக்கும் வகையில் பிரம்மிப்பூட்டும் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனைக் கண்டு ரசித்த மக்கள், தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு 2023-ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
TELEGRAM: t.me/agnipuratchi1
