Home » அண்ணா பல்கலை. விவகாரத்தில் போராட்டம்: முனைவர் சௌமியா அன்புமணி உள்பட பாமகவினர் கைது!

அண்ணா பல்கலை. விவகாரத்தில் போராட்டம்: முனைவர் சௌமியா அன்புமணி உள்பட பாமகவினர் கைது!

அண்ணா பல்கலை. விவகாரத்தில் போராட்டம்: முனைவர் சௌமியா அன்புமணி உள்பட பாமகவினர் கைது!

சென்னை அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் சங்கம் சார்பாக பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் 02/01/202 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் அவரை அராஜக அடக்கமுறையில் கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் அந்த மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பாமக மகளிரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் திட்டமிட்டனர். அதையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த எந்தத் திசையில் இருந்து பாமகவினர் வந்தாலும் கைது செய்ய காவல்துறையினர் காத்திருந்தனர். அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பாமக நிர்வாகிகள், பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி காரில் வந்தார். காவல்துறையினர் அவரைக் கைது செய்ய தயாராக இருந்தனர்.

காரினை மகளிர் போலீஸார் சுற்றி வளைத்தனர். அதனால் காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் முனைவர் சௌமியா அன்புமணி பேசினார். அதையடுத்து காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றி சௌமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். பாமகவினர் உரக்க கோஷமிட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதில், நீதி கேட்டு போராடும் எங்களை கைது செய்யும் திமுக அரசுக்கும், காவல் துறைக்கும் பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முனைவர் சௌமியா அன்புமணி பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட மகளிர் அணி சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தின் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தக் கைது கண்டித்து கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, பாமக பொருளாளர் திலகபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதே போன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமகவினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் திமுக அரசின் மீது மக்களின் கோபம் ஆரம்பித்துவிட்டது. இதன் விளைவு 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சவுமியா அன்புமணி, தனது போராட்டக் குரலை எழுப்புவதற்கு முன்பே கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர் கைதுகள் மூலம் உண்மையை மூடி மறைத்துவிட முடியாது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: ஜனநாயகரீதியில் போராடுவோரின் குரல்வளையை நசுக்குவதுதான் திராவிடர் மாடல் அரசின் சாதனையா? இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)