Home » அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிச. 10ல் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிச. 10ல் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

AIADMK Executive Committee, General Committee meeting on Dec. 10 - Edappadi Palaniswami announcement

AIADMK Executive Committee, General Committee meeting on Dec. 10 - Edappadi Palaniswami announcement

சென்னை:  இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் சட்ட விதிகளின்படி வரும் டிச. 10ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்கழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)