Home » அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்கள்.

அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்கள்.

அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் – பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்துக்கள்.

ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் இயேசுபிரான் அன்பு காட்டினார். உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று விரும்பினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். தமது வாழ்நாளின் கடைசி நொடி வரை அன்பையும், கருணையையும் காட்டியது மட்டுமின்றி, எதிரிகளுக்கு மன்னிப்பையும் வழங்கினார்.

இன்றைய உலகிற்கு தேவை பொருளாதார வலிமையோ, படைபலமோ அல்ல. மாறாக அவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்த அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை ஆகியவை தான். அவை மட்டும் இருந்திருந்தால் நிலையற்ற வளங்களுக்காக, இயேசுபிரானின் வழியில் நடப்பதாகக் கூறிக் கொள்ளும் இரு நாடுகள் சரியாக கடந்த 10 மாதங்களாக போரிட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதன் பாதிப்புகளை ஒட்டுமொத்த உலகமும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இயேசு நமக்கு வழங்கிய போதனைகளின்படி, உலகில் அன்பு மட்டுமே அனைவரையும் ஆட்சி செய்வதை உறுதி செய்வோம். இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும் இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். பணமும், பொருளும் இல்லாதவர்கள் அன்பையும், கருணையையும் மற்றவர்கள் மீது பொழிவோம். அதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

error

Enjoy this blog? Please spread the word :)