உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி -மத்திய அரசு
உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை நிறுத்திய மாணவர்களுக்கு உதவ முயற்சி -மத்திய அரசு
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவும் , சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று தீவிர பரவல் காரணமாகவும் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் பாதியில் தாயகம் திரும்பினர்.
இந்நிலையில் அந்த மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர், அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனிதாபிமான அடிப்படையில் நான்க, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டில் மருத்துவப் படிப்பு பாதியில் விட்டி தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவிலேயே நாம் வாய்ப்பு வழங்கலாம், ஏனெனில், ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும் நம் நாட்டில் இது சாத்தியமானது தான்.
எனவே, அவர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது வகுப்புகளை தொடர்ந்ததை கருத்தில் கொண்டு மருத்துவ பயிற்சிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர அனுமதிப்பது என்பது இயலாத காரியம் இந்திய மருத்துவ ஆணைய விதிமுறைகள் அதற்கு இடம் தராது. இந்தியாவில் இருக்கக்கூடிய மருத்துவ படிப்பு முறையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் உக்கிரைன் போரினால் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ள மாணவர்களுக்கு உதவ நாங்கள் முயற்சிக்கிறோம்.
அதற்காக சில வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் ஆனால் இவர்கள் யாரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள் எனவே நமது நோயாளிகளை இவர்கள் கையாள்வதை அனுமதிக்க முடியாது, அதேவேளையில் சில வெளிநாடுகள் இவர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது தெரிவித்தார்.
TELEGRAM: t.me/Agnipuratchi1
அப்போது மாணவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், உக்கரையினில் இருந்து நாடு திரும்பிய இறுதி ஆண்டு மாணவர்களுக்கு சில மாநிலங்கள் வாய்ப்பு வழங்கிய போதும் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் இந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என கூறினார்.
அதற்கு பதில் அளித்த மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இறுதியாண்டு மாணவர்களுக்கு வாய்ப்பினை வழங்கி விட்டால் அடுத்த மூன்று மாதம் கழித்து, அடுத்த ஆண்டு மாணவர்களும் வாய்ப்பு கேட்டு வருவார்கள் பிறகு இது முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும் மனித உயிர்களுடன் இத்தகைய விளையாட்டினை செய்வதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் எடுக்கப்படரடு வரும் நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து உரிய தகவல்களை கேட்டு தாக்கல் செய்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து வழக்கினை அடுத்த வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
