Home » உரிமை கோரப்படாத முதலீடுகளை மீட்க விரைவில் ஒருங்கிணைந்த இணையதளம் மத்திய நிதி சேவைகள் துறை தகவல்!

உரிமை கோரப்படாத முதலீடுகளை மீட்க விரைவில் ஒருங்கிணைந்த இணையதளம் மத்திய நிதி சேவைகள் துறை தகவல்!

Central Financial Services Department announces integrated website to recover unclaimed investments soon!

புதுடெல்லி: நாடு முழு​வதும் உள்ள வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பரஸ்பர நிதி உள்​ளிட்ட நிறு​வனங்​களில் பொது ​மக்​களின் உரிமை கோரப்​ப​டாத நிதி சொத்​துகள் ஏராள​மாக உள்​ளன. இந்த நிதி சொத்துகளை பொது​மக்​கள் மீட்​ப​தற்​கு, டெப்​பாசிட்​டர் கல்வி மற்​றும் விழிப்​புணர்வு நிதி என்ற திட்​டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்​மூலம் இது​வரை உரிமை கோரப்ப​டா​மல் இருந்த ரூ.1,887 கோடி உரிய​வர்​களிடம் திருப்பித்தரப்​பட்​டுள்​ளது. அதே​நேரம் இன்​ன​மும் ரூ.3,201 கோடி உரிமை கோரப்​ப​டா​மல் உள்​ளது.

இந்​நிலை​யில், மத்​திய நிதியமைச்​சகத்​தின் கீழ் இயங்கும், நிதி சேவை​கள் துறை ரிசர்வ் வங்​கி​யுடன் இணைந்து உரிமை கோரப்​ப​டாத தொகையை உரிய​வர்​களிடம் ஒப்​படைப்​பதை விரைவுபடுத்துவதற்​காக, ஒருங்​கிணைந்த இணை​யதளம் தொடங்க திட்​ட​மிட்​டுள்​ளது. பஞ்​சாப் நேஷனல் வங்​கி​யின் சார்​பில் நேற்று நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், மத்​திய நிதி சேவை​கள் துறை செய​லா​ளர் ​நாக​ராஜு பேசும்​போது, “நாடு முழு​வதும் உள்ள வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பரஸ்பர நிதி உள்​ளிட்ட நிறு​வனங்​களில் உரிமை கோரப்​ப​டா​மல் உள்ள நிதி சொத்​துகளை தேடி கண்​டு​பிடித்து மீட்ப​தற்​காக, ஒருங்​கிணைந்த இணை​யதளம் விரை​வில் தொடங்கப்படும். உரிமை கோரப்​ப​டா​மல் உள்ள பல்​வேறு நிதி சொத்துகளை ஒரே தளத்​தின்​ மூலம்​ (ஒற்​றைச்​ ​சாளரம்​) எளி​தாக மீட்​க இது உறு​துணை​யாக இருக்​கும்​”என்​றார்​.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)