Home » உலகின் மிகப் பெரிய வைரம் ரூ.220 கோடிக்கு ஜெனிவாவில் விற்பனை

உலகின் மிகப் பெரிய வைரம் ரூ.220 கோடிக்கு ஜெனிவாவில் விற்பனை

Featured Video Play Icon

உலகின் மிகப் பெரிய, குறைபாடுகள் இல்லாத வைரம் ரூ.219.79 கோடிக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் விற்பனையானது.

ஆப்பிரிக்காவின் அங்கோலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரமே உலகத்தின் மிகப் பெரிய வைரம் என்று கூறப்படுகிறது. வெட்டியெடுக்கப்படுவதற்கு முன்பு இது 404 காரட்டுகளைக் கொண்டிருந்தது.

வடிவமைப்புக்குப் பிறகு இந்த முதல் தர வைரம் வெள்ளை நிறத்தில் தீப்பெட்டியின் அளவு மற்றும் வடிவத்தில் உள்ளது. சுமார் 7 செ.மீ. (2.7 அங்குலம்) நீளம் கொண்ட இந்த வைரம் 163 காரட்டுகள் கொண்டது.

ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி என்னும் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. முன்னதாக இந்த வைரம் ரூ.193.7 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக ரூ.219.79 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இந்த வைரத்தை வாங்கியவர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

error

Enjoy this blog? Please spread the word :)