Home » உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

Singing Vande Mataram is mandatory in UP schools and colleges: Chief Minister Yogi Adityanath
உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்: முதல்வர் யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

கோரக்பூர்: கோரக்பூரில் நடந்த ‘ஏக்த யாத்திரை’ மற்றும் வந்தே மாதரம் பாடும் நிகழ்வில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடுவது தேசத்தின் மீது மரியாதை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு மரியாதை உணர்வு இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்வி நிறுவனத்திலும் அதைப் பாடுவதை கட்டாயமாக்குவோம்” என்று கூறினார்.

வங்​கமொழி கவிஞர் பங்​கிம் சந்​திர சட்​டர்ஜி கடந்த 1875-ம் ஆண்டு நவம்​பர் 7-ல் வந்தே மாதரம் பாடலை எழு​தி​னார். “பாரத அன்​னையே நான் உனக்கு தலை​வணங்​கு​கிறேன்” என்ற பொருளில் எழுதப்​பட்ட இந்த பாடலுக்கு ரவீந்​திர​நாத் தாகூர் இசையமைத்​தார். சுதந்​திரப் போராட்ட வீரர்​களுக்கு வந்தே மாதரம் பாடல் மிகப்​பெரிய உத்​வேகம் அளித்​தது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி வந்தே மாதரம் தேசிய பாடலாக அறிவிக்​கப்​பட்டது. இந்த பாடல் இயற்​றப்​பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைந்​திருக்​கிறது.

இதையொட்டி மத்​திய அரசு சார்​பில் டெல்​லி​யில் நவம்பர் 7 அன்று நடை​பெற்ற விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது வந்தே மாதரம் பாடலின் நினை​வாக அஞ்​சல் தலை, நாண​யத்தை அவர் வெளி​யிட்​டார். மேலும் பாடலின் ஓராண்டு கொண்​டாட்​டத்​தை​யும் அவர் தொடங்கி வைத்​தார். இதன்​படி அடுத்த ஆண்டு நவம்​பர் 7-ல் நாடு முழு​வதும் பல்​வேறு விழாக்​கள், நிகழ்ச்​சிகள் நடத்தப்பட உள்​ளன.

அந்த விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: வந்தே மாதரத்​தின் 150-வது ஆண்டு நிறைவை கொண்​டாடு​கிறோம். வந்தே மாதரம் என்​பது வெறும் வார்த்தை கிடை​யாது. இது ஒரு மந்​திரம், ஒரு சக்​தி, ஒரு கனவு, ஒரு தீர்​மானம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் மீது குண்​டு​கள் வீசப்​பட்​ட​போது, அவர்​களின் ஒரே மந்​திர​மாக வந்தே மாதரம் இருந்​தது. பல்​வேறு சுதந்​திரப் போராட்ட வீரர்​கள் தூக்கு மேடை​யில் நின்று கொண்டு வந்தே மாதரம் பாடலை பாடினர். இந்த நூற்​றாண்டை இந்தியா​வின் நூற்​றாண்​டாக மாற்ற வேண்​டும். இதற்​காக சுய​சார்பு இந்​தியா திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

நமது ராணுவம், எதிரி​களின் சதித் திட்​டங்​களை முறியடிக்​கும்​போதும், தீவிர​வாதத்தை முறியடிக்​கும்​போதும், நமது வீரர்​களின்​ ஒரே மந்​திர​மாக வந்​தே ​மாதரம்​ விளங்​கு​கிறது. இந்​தப் ​பாடல்​ இந்​தி​யாவை ஒன்றிணைக்​கிறது. ​நாட்​டின்​ ஒற்​றுமையை வலுப்​படுத்​துகிறது. இவ்​​வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்​.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)