Home » கூகுள்பேயில் யு.பி.ஐ., ஆட்டோபே வசதி அறிமுகம்.

கூகுள்பேயில் யு.பி.ஐ., ஆட்டோபே வசதி அறிமுகம்.

கூகுள்பேயில் யு.பி.ஐ., ஆட்டோபே வசதி அறிமுகம்.

போன் பில் போன்ற மாதந்தோறும் செலுத்த கூடிய சந்தாக்களை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த வழி செய்யும் யு.பி.ஐ., ஆட்டோபே அம்சம், கூகுள்பே செயலியில் அறிமுகமாகி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 2020 , ஜூலையில் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) யு.பி.ஐ., ஆட்டோபே வசதியை அறிமுகம் செய்தது.

இந்த அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சந்தா செலுத்துவதற்கு, ஏதேனும் யு.பி.,ஐ செயலியை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த அனுமதிக்கும்.

இதன்படி, பயனர்கள் கூகுள்பிளே பில்லிங்கை பயன்படுத்தி சந்தாத் திட்டத்தை தேர்ந்தெடுத்த பிறகு ‘யு.பி.ஐ உடன் பணம் செலுத்து’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே உள்ள டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் இணைய வங்கி சேவை வசதிகளுடன், யு.பி.ஐ ஆட்டோபே வசதியும் இனி பயனர்களுக்கு கிடைக்கும்.

TELEGRAM: t.me/Agnipuratchi1

இந்தியா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கான கூகுள் பிளே ரீடெய்ல் மற்றும் பேமென்ட்ஸ் ஆக்டிவேஷன் தலைவர் சவுரப் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘யு.பி.ஐ., ஆட்டோபேயின் அறிமுகம், கூகுள் சந்தா அடிப்படையிலான வாங்குதல்களுக்கு யு.பி.ஐ சேவையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பலருக்கு பயனுள்ள , மகிழ்ச்சிகரமான சேவைகளை அணுக உதவுகிறது.

அதுமட்டுமின்றி, உள்ளூர் டெவலப்பர்களுக்கு, கூகுள் பிளேயில் சந்தா அடிப்படையிலான வர்த்தகத்தை வளர்க்க உதவுகிறது.

செயலிகள், செயலி உள்ளடகங்களுக்கு (அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ) மக்கள் பணம் செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த, உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் பயனுள்ள கட்டண முறைகளை சேர்த்து வருகிறோம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)