கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பென்னாகரம்,தொகுதி எரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மா என்பவரின் சிதைக்கப்பட்ட உடல் உறுப்புகளை விரைவாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.இழப்பீடு வழங்க வேண்டும். நரபலி மிக மிகக் கொடூரமானது. வன்மையான கண்டனத்துக்குரியது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி

தர்மபுரி மாவட்டம்,பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட எர்ரப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ரங்கன் என்பவரின் மனைவி பத்மா (வயது 52) கூலி வேலைக்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடவந்த்ரா என்ற இடத்தில் 26.9.2022ல் காணவில்லை.அன்றும் அடுத்த நாளும் தேடி அவர் கிடைக்கவில்லை என்பதால் 27.9.2022 அன்று அவருடைய தங்கை பழனியம்மாள் கடவந்த்ரா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் பிறகு காவல்துறையின் முயற்சியால் சித்த மருத்துவர் பகவத்சிங் அவரது மனைவி சைலா இருவரும் சபி என்பவரின் மூலம் பத்மா அழைத்துவரப்பட்டு அவரது வீட்டிலேயே நரபலி கொடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் காவல்துறை நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள நிலையிலும் இன்று வரை பத்மா என்பவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை
எனவே கேரள கேரள மாநில அரசும் காவல்துறையும் விரைவான நடவடிக்கை எடுத்து பத்மாவின் மகன் சேட்டு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் இழப்பீடும் வழங்க வேண்டும் தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்