Home » சகோதரத்துவத்தை வலியுறுத்திய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

சகோதரத்துவத்தை வலியுறுத்திய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

சகோதரத்துவத்தை வலியுறுத்திய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு – பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டினார்.

மிலாது நபி என்ற பெயரில் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கொண்டாடப் படுவதன் நோக்கமே அவரைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்; அவர் காட்டிய வழியில் அனைவரும் நடக்க வேண்டும் என்பது தான். இந்த நோக்கத்தை நிறைவேற்ற இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். நபிகளின் வழியில் இன்னா செய்தாருக்கும் நன்னயமே செய்து விடுங்கள்; அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இருப்பதில் ஒரு பங்கை இல்லாதவர்களுக்கு கொடுத்து இன்பம் தேடுங்கள். இவற்றை செய்தால் உங்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறையும்.

நபிகள் காட்டிய பாதையில் நடக்கும் போது, உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளரும்; அனைத்து நலன்களும், வளங்களும் பெருகும் என்று கூறி மீண்டும் ஒருமுறை மிலாதுநபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

error

Enjoy this blog? Please spread the word :)