Home » சான்றிதழ்களை துரிதமாக வழங்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை!

சான்றிதழ்களை துரிதமாக வழங்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை!

UGC warns colleges to issue certificates quickly!

சென்னை: பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​. ஜோஷி, அனைத்து உயர்​கல்வி நிறு​வனங்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: நாட்​டில் உள்ள சில உயர்​கல்வி நிறு​வனங்​கள், உரிய காலக்​கட்​டத்​துக்​குள் பரு​வத் தேர்​வு​களை நடத்​து​வ​தில்​லை.பட்​டப் படிப்பு சான்​றிதழ்​களை​யும் வழங்​க​வில்லை என்றும் யுஜிசி​யின் கவனத்​துக்கு புகார் வந்​துள்​ளது. இந்த தாமதம் மாணவர்​கள் தகு​தி​யான வேலை ​வாய்ப்​பு​களை பெறவும், உயர்​கல்விக்​கும் இடையூறாக இருக்​கிறது. யுஜிசி விதி​யின்​படி மாணவர்​கள் பட்​டம் பெற தகுதி பெற்ற 180 நாட்​களுக்​குள், அவர்​களுக்கு பட்​டங்​களை வழங்க வேண்​டும். இந்த விதி​களை பின்​பற்​றாத உயர்​கல்வி நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். மாணவர்​களுக்கு பட்​டப்​படிப்பு சான்​றிதழ்​களை தாமதமின்றி வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)