Home » டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

டெஃப் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

Anuya Prasad wins gold at Def Olympics

புதுடெல்லி: ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஈரானின் மஹ்லா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

முன்னதாக நடைபெற்ற தகுதி சுற்றில் பிரஞ்சலி பிரசாந்த் துமல் 572 புள்ளிகளை குவித்து உலக சாதனை படைத்திருந்தார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் 235.2 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கொரியாவின் யங் கிம் 238.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

மறுமொழி இடவும்

error

Enjoy this blog? Please spread the word :)