தமிழைத்தேடி இயக்கப் பணிகள் பற்றி விவாதிக்க பா.ம.க மாவட்ட செயலர்கள் கூட்டம் ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும்! – பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
தமிழைத்தேடி இயக்கப் பணிகள் பற்றி விவாதிக்க பா.ம.க மாவட்ட செயலர்கள் கூட்டம் ஏப்ரல் 2-ஆம் நாள் நடைபெறும்! – பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் – மாவட்ட தலைவர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 2&ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம் நடைபெறும். காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே கூட்டம் நடைபெறும்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரங்கள், பேரூர்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தனித்தமிழ்ச் சொற்கள் அறிவோம் பதாகைகளை அமைப்பது, அனைத்து பகுதிகளிலும் உள்ள வணிகர்களை சந்தித்து தமிழில் பெயர்ப்பலகைகளை அமைக்கக்கோரும் துண்டறிக்கைகளை வழங்குதல் ஆகிய பணிகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்படும். இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு
