திமுக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதால் தி.மு.க. அரசு மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேச்சு!

தருமபுரி மாவட்ட தமிழக மக்கள் உரிமை பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 100 நாட்கள் சுற்றுப்பயணத்தை திருப்போகுரில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி தொடங்கினார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த அவர் 08/11/2025 அன்று தர்மபுரியில் 108-வது நாள் நடை பயணத்தை நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து தாமபுரியில் 08/11/2025 அன்று இரவு பா.ம.க. சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண நிறைவு பொதுக்கூட்டம் 09/11/2025 அன்று மாநாடு போல் நடைபெற்றது. கூட்டத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.அரசாங்கம் வரவேற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் செந்தில், பாரிமோகன், மாதில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி பாடி செல்வம் தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு பெரியசாமி, பசுமைத்த தாயகம் மாநில செயலாளர் மாது, மாவட்ட தலைவர் அல்லிமுத்து, இளைஞர் சங்க துணை செயலாளர் சிவக்குமார், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராம்தாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் தர்மபுரி மாவட்டு வளர்க்சிக்கு நான் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். நான் எப்போது மனசோர்வு அடைந்தாலும், மனஉளைச்சல ஏற்பட்டாலும் தர்மபுரிக்கு தான் வருவேன். அந்த வகையில் இங்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு உற்சாகத்துடன் வீட்டிற்கு திரும்புவேன். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை திருப்போரூரில் ஆரம்பித்து தற்போது தாமபுரியில் நிறைவு செய்துள்ளேன் எனக்கு மனஉளைச்சல் அடைத்தாலும் அதற்கு மருந்து தாம்பரி மக்களிடம் தான் இருக்கிறது.
மிகப்பெரிய வெற்றி
நமது நடைப்பயணம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது அதாவது எனது 28 ஆண்டு பொது வழ்வில் இந்த நடைபயணம் மிகவும் முக்கியமான நடை பயணமாக பார்க்கிறேன். ஓகேனக்கல் கூட்டுகுடி நீர் திட்டம், காவிரியை காப் போம், தாமிரபரணியை பாது காப்போம். பாலாறு, மேட் டூர் உபரிநீர் திட்டம், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு நடைபயணம். போராட்டங்களை நடத்தி உள்ளேன். ஆனால் அதை விட எனக்கு பிடித்த நடைபயணமாக இதைப் பார்க்கிறேன் இந்த நடைபயணத்தை தொடங்கும் போது எனக்கு மன உளைச்சல், மன அழுத்தம் இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? இருப்பினும் மக்களின் நலன் கருதி நடைபயணத்தை தொடங்கினேன்.
அடுத்து வரும் 108 நாட்களில்திமு.க அரசைவிரட்டி வேண்டும். நமது நடைபய ணம் மூலமாக காஞ்சீபுரம், கும்மிடிப்பூண்டி, ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு மாவட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. நான் வருவதை கொண்டு சில இடங்களில் அதிகாரிகளும், அமைச்சர்களும் முன்கூட் டியே அங்கு சென்று மக்களின் பிரச்சினைகளுக்குதீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.

மோசமான ஆட்சி
கிருஷ்ணகிரி மாங்கனி விவசாயிகள், கடலூரில் பலா விவசாயிகள் ஈரோட்டில் மஞ்சள் விவசாயிகளை சந்தித்து பேசினேன் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளை அழித்துவிட்டார். இவ்வளவு மோசமான ஆட்சியை இதுவரை பார்த்தது கிடையாது. ஆட்சி, அதிகாரம் நமது கையில் இருந்தால் அனைத்து மாவட்டங்களின் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். நமது குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்புக்காக 4 தலைமுறைளாக போராடி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு இல்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதல்-அமைச்சருக்கு நிதி இருந்தும் மனது இல்லை
தி.மு.க.வுக்கு ஓட்டுபோடக்கூடாது
இதனால் சமூக நீதி பற்றி தி.மு.க.பேசக்கூடாது. வன்னியர்களை தொடர்ந்து பட்டிலின மக்களுக்கும் தி.மு.க. அரசு துரோகம் செய்து வருகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் ஒருவன்னியர் கூட தி.மு.க.வுக்கு ஓட்டு போடக் கூடாது. இது சாதிபிரச்சினை மட்டும் இல்லை, இனப்படு கொலையாக பார்க்கிறோம். இதனால் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் (டிசம்பர் 17 தேதி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளோம். தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை 2,500 என்ஜினியர்கள் நியமனத்தில் ரூ.888கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சதுப்பு நிலம், கனிம வளம், மணல் கொள்ளை, டாஸ்மாக் என அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. எனவே, தி.மு.க அரசு மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.
வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
தி.மு.கவுக்கு எதிரான அலை வீசுகிறது. தி.மு.க ஆட்சியில் புதிய மாவட்டங்கள். மருத்துவக் கல்லூரிகள், அணைகள் திட்டம், கல்லூரி பேராசிரியர்கள் நியமனம், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என அனைத்தையும் செயல்படுத்தவில்லை. எனவே மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. ஒருவேளை வந்தால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், போதைப் பொருட்கள் நடமாட்டமும் அதிகமாகும். எனவே திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசினார்.
இந்த கூட்டத்தில் பசுமைத்தயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, கட்சியின் முன்னோடி நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி.ஆர்பாஸ்கரன், பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், ஏ.கே.மூர்த்தி செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு தென்மண்டல பொறுப்பாளர் க.வைத்தி இளைஞரணி செயலாளர் பாலயோகி, பொன்.கங்காதரன் தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், மாநில தேர்தல் பணி குழு செயலாளர் மு.ஜெயராமன் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சதாசிவம் சி.சிவக்குமார் மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் எம்பி ஆர்.தேவதாஸ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சுதா கிருஷ்ணன், பாலாஜி, இமயவர்மன், அன்பழகன், பிரகாஷ், இராமகிருஷ்ணன், சின்னசாமி, ராஜவேல், தகடூர் தமிழன், சரவணகு மாரி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஏ.வெங்கடாசலம் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


